For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகரின் வாகனம், எலி பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்!

|

எலி என்றால் சிலருக்கு அருவருப்பு வரும், சிலர் அதை செல்ல பிராணியாக வளர்த்து வருவார்கள். எலிகளின் பல நூறு வகைகள் இருக்கின்றன. அதில் வெறும் 56 வகை எலிகள் தான் மக்கள் வாழும் இடத்தில் வாழ்கின்றன. மற்ற வகைகள் அடர்ந்த மழை காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்து வருகின்றன. இவை யாவும் மக்கள் வாழும் அபாயகரமான இடங்களில் வாழ்ந்து வருகின்றன.

Rat facts

#1 கடந்த 200 ஆண்டுகளாக மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகள் மீது தான் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

#2 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அடிப்படாத படி லாவகமாக லேண்டிங் ஆகும் திறன் எலிகளுக்கு இருக்கிறது.

#3 இதுவரை எலிகள் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொண்டதற்கு 30 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

#4 எலிகளுக்கு பித்தப்பை மற்றும் சிறுநாக்கு கிடையாது. ஆனால், மனிதர்களை போல தொப்புள் இருக்கிறது.

#5 எலிகளின் முன் பற்கள் வருடா வருடம் 4 1/2 இருந்து 5 1/2 இன்ச் வரை வளரும். இதை குறைக்க தான் எலி எதையாவது கொறித்து கொண்டு இருக்குமாம்.

#6 ஒரு பெண் எலியால் 6 மணி நேரத்தில் பல ஆண் எலிகளுடன் 500 முறை வரையிலும் உறவுக் கொள்ள முடியுமாம். ஒரு எலியின் சராசரி வாழ்நாள் 2-3 வருடங்கள்.

#7 2-3 நாட்கள் வரையிலும் கூட எலி நீரில் தாக்குப்பிடிக்க முடியும். அமெரிக்காவில் ஒரு மனிதனுக்கு ஒரு எலி விகிதத்தில் எலிகளின் எண்ணிக்கை இருக்கிறது.

#8 56 வகையிலான எலிகள் தான் மனிதர்கள் வாழும் இடங்களில் வாழ்கின்றன. மற்றவை எல்லாம் காடுகள் போன்ற அபாகரமான இடங்களில் வாழ்கின்றன.

#9 எலிகள் தங்கள் மல களிவுகளையே உண்ணும். இதன் மூலமாக அவை தனக்கு தேவையான சத்துக்கள் பெறுகின்றனவாம்.

#10 எலிகளுக்கு வியர்காது. அவை தனது இரத்த நாளங்கள் மற்ற வாலை பயன்படுத்தி உடல் வெட்ப நிலை சீராக்கி கொள்ளும்.

English summary

Facts about Rats!

Ancient Romans considered rat to be a sign of good luck, read here for more rat facts.
Story first published: Saturday, August 26, 2017, 15:08 [IST]
Desktop Bottom Promotion