For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியன்று ஏன் பட்டாசு வெடிக்கப்படுகிறது தெரியுமா?

இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி . தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது இதற்கான காரணம் தெரியுமா?

|

தீபாவளிப்பண்டிகை களைகட்டத் துவங்கிவிட்டது. புத்தாடைகள் அணிவது, பலகாரங்கள் செய்வது, பட்டாசு வெடிப்பது, பூஜைகள் செய்வது என எண்ணற்ற விஷயங்களுடன் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடுவோம்.

தீபாவளி என்றாலே விளக்கு வைப்பது மற்றும் பட்டாசு வெடிப்பது தான் ஹைலைட் . ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வெடிகளை அறிமுகம் செய்து வர்த்தக சந்தையை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. தீபாவளி நெருங்குவதற்கு முன்னரே பட்டாசு தயாரிப்பு சூடு பிடிக்கத்துவங்கும். அடுத்தாண்டு தீபாவளி வர்த்தகத்தை மனதில் கொண்டு அப்போது வைரலாக இருக்கும் பெயர்களில் எல்லாம் வித விதமான பட்டாசுகளை வெளியிடுவார்கள்.

எல்லா விஷயங்களுக்கு பின்னரும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும். ஆரம்பக் காலத்திலிருந்தே கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நடைமுறை எதனால் வந்தது தெரியுமா? இதற்கு பின்னால் என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனா :

சீனா :

பட்டாசை முதன் முதலில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள். பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்..!

சத்தம் :

சத்தம் :

பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் கெட்ட சக்திகள் எல்லாம் விலகி ஓடும் என்று நம்பப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெடிகள் மட்டுமே வெடிக்கப்பட்டிருந்தது.

பட்டாசு வெடிப்பதினால் உண்டாகும் சத்ததினால் தங்களை நெருங்க வரும் கெட்ட சக்திகள்,ஆவிகளை விரட்ட முடியும் என்று நம்பினர்.

ஒளி :

ஒளி :

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளக்கேற்றுவது வழக்கம். தீபாவளியன்று லட்சுமி தேவி தங்கள் வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் அவரை வரவேற்கும் விதத்தில் வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கிறார்கள்.

காலப்போக்கில் அது பல நிறங்களை அள்ளித் தெளிக்கும் பட்டாசாக உருமாற்றம் பெற்றது. அதோடு, வெளிச்சமாக இருக்கும் இடங்களில் லட்சுமி வாசம் செய்வாள் என்றும் நம்பப்படுகிறது.

ஆடம்பரம் :

ஆடம்பரம் :

ஆரம்ப காலத்தில் பட்டாசு என்பது ஆடம்பரப்பொருளாக இருந்தது. நம்முடைய சந்தோசத்தை கொண்டாடும் வகையிலும் அதனை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்தார்கள்.

ஆரம்ப காலத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டாசுகளை வெடித்தார்கள்.

வரவேற்பு :

வரவேற்பு :

ராவணனை வென்றெடுத்த பின்னர் ராமர் அயோத்திக்கு திரும்பும் போது மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டாசு வெடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. பல இடங்களில் ராமரை தங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வண்ண விலக்குகளை ஏற்றி வைத்து மக்கள் வரவேற்றார்கள் என்று இருக்கிறது.

கிருஷ்ணர் :

கிருஷ்ணர் :

தங்களை இதுவரை காலமும் கஷ்டப்படுத்தி வந்த அரக்கன் நரகாசுரனை கிருஷ்ணர் வென்றெடுத்த மகிழ்ச்சியில் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்தும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, நகராசுரனை வதம் செய்த போது கிருஷ்ணரிடம் தன்னுடைய இறப்பை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதன் பொருட்டே மக்கள் இப்படி பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

லட்சுமி வாசம் :

லட்சுமி வாசம் :

தீபாவளியன்று தங்களின் வீடுகளுக்கு செல்வ வளம் அளிக்கும் லட்சுமி வருவாள் என்ற ஐதீகம் இருக்கிறது. வீட்டினை சுத்தமாகி எல்லாரும் சுத்தமாக குளித்து வெளிச்சமாக விளக்கினை ஏற்றி வைத்தால் தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் வரும் என்று சொல்லப்படுகிறது.

லட்சுமியை தங்கள் வீட்டிற்கு வரவேற்கும் விதத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது.

வெற்றி :

வெற்றி :

தீபாவளி என்பது வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வெற்றியை கொண்டாடும் மக்கள் தங்கள் சந்தோஷத்தை விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு தெரிவிப்பதன் அடையாளமாய் தான் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பட்டாசு சத்தத்தின் மூலமாக தங்களுடைய மகிழ்ச்சியை தாங்கள் வணங்கும் கடவுளுக்கு தெரிவிக்கிறார்களாம்.

அறிவியல் :

அறிவியல் :

பட்டாசு வெடிப்பது தொடர்பாக புராணக்கதைகளில் எண்ணற்ற கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாகவும் பட்டாசு வெடிப்பதற்கு காரணம் சொல்லப்படுகிறது. தீபாவளி வரும் காலம் என்பது குளிர் காலமாக இருக்கும். அப்போது எண்ணற்ற பூச்சிகள் பெருகிடும்.

இதனால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனை தடுக்க வெப்பம் அவசியம் அதற்காகவே வீடுகளில் விளக்கு வைத்திடுங்கள், பட்டாசு வெடியுங்கள் என்று சொல்லப்பட்டதாம்.

அதோடு பட்டாசுகளில் இருக்கும் சல்ஃப்ர் பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.

குணங்கள் :

குணங்கள் :

ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் நல்ல குணமும் கெட்ட குணமும் சேர்ந்தே இருக்கும். நம்முடைய வாழ்வை வளமாக்க நல்ல குணம் இருந்தாலே போதும் நம்மிடையே இருக்கும் கெட்ட குணத்தை அழித்திட வேண்டும் என்ற நம்பிக்கையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது.

ஒரு சாஸ்திரத்திற்காகவாது ஒரு பட்டாசு வெடித்தே ஆகவேண்டும் என்று சொல்வதன் நோக்கமும் இது தான்.

இன்றைய நிலை :

இன்றைய நிலை :

என்னதான் புராணங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சொன்னாலும் இன்றைய சூழலில் அது மிகவும் கேடு விளைவிக்க கூடியதாக இருக்கிறது. பட்டாசு வெடிப்பதினால் சில சமயங்களில் தீ விபத்துக்கள் கூட ஏற்படுகிறது. இதை விட மிகவும் மோசமான வகையில் காற்று மாசுபடுவதால் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பட்டாசுகளால் செல்லப்பிராணிகளையும் பாதிப்புக்குளாகிறது . நம்முடைய சந்தோசத்திற்கு இப்படி வாயில்லா ஜீவன்களை வதைக்க வேண்டுமா என்ற கேள்வியை நம்முன் எழுப்பி பட்டாசு வெடிக்காதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதிக சத்தம் :

அதிக சத்தம் :

125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், என அரசு விதித்த அளவை விட அதிகமாக இருக்கின்றன.

இப்படி வரம்பு மீறி அதிக சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்தால் நாம் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைத்தவிர உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.

குழந்தைகள் :

குழந்தைகள் :

தீபாவளிப்பட்டாசினால் குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை.

இதைத் தவிர விவரமறியாமல் செய்யும் விளையாட்டுத் தனத்தினால் தீப்பற்றிவிடக்கூட வாய்ப்புண்டு என்பதால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

விபத்து :

விபத்து :

பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏதேனும் ஏற்ப்பட்டு தீக்காயம் ஏற்பட்டால் சிறுதளவு எனில் வீட்டில் உள்ள தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும். ஆனால் பெரியகாயம் எனில் உடனே அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று தக்க சிகிச்சை மேற்கொள்ளலாம்.

கண் :

கண் :

கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்லது வெடித்துகள்கள் பட்டாலோ அவர்களின் கண்களின் எரிச்சல் போகும் வரை உடனே சுத்தமான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்தவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

கண்களை கழுவ அதிக குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் குளிந்த நீர் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

வேதிப்பொருள் :

வேதிப்பொருள் :

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசு-படுத்துகின்றன. நீங்கள் பட்டாசு வெடிக்கா-விட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளைத் தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did you know why we burst crackers on Diwali?

Did you know why we burst crackers on Diwali?
Story first published: Thursday, October 12, 2017, 16:49 [IST]
Desktop Bottom Promotion