Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
#MeToo ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த குழந்தை பற்றித் தெரியுமா?
சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி விவரிக்கும் மீ டூ என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு மூலக்காரணம் பற்றிய கதை இது.
#MeToo கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் இது வேகமாக பரவி வருகிறது. எனக்கும் என்ன நடந்திருக்கிறது ஏன் திடீரென்று இந்த விஷயம் இவ்வளவு வேகமாக ட்ரெண்ட் ஆகிறது என்று தேடித்தேடி படித்திருப்போம்.
அவற்றின் மூலக்கதை தான் இது.

பெண்களுக்கு எதிரான வன்முறை காலங்காலமாக நடந்து வருகிறது இதில் மட்டும் எந்த பாகுபாடுமின்றி, ஏழை பணக்காரன் என்ற வித்யாசங்களின்றி அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பல வகையான பாலியல் தொந்தரவுகளை சந்திக்கிறார்கள்.

தைரியம் :
தாங்கள் சந்திக்கும் பிரச்சனையை வெளியில் சொல்லலாம் என்று கூட தெரியாமல் எங்கே இது வெளியில் தெரிந்தால் தன்னை தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்று நினைத்து பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்கள் மத்தியில்
நானும் இதுப் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன் என்று தைரியமாக ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறது இந்த ட்ரெண்ட்.

தொந்தரவுகள் :
வயது வித்யாசங்களின்றி பலரும் பாலியல் ரீதியிலான அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள். மிகவும் சிறுவயதில் இது போன்ற கொடுமைகளை சந்திக்கும் குழந்தைகள் இதனால் மனரீதியாக பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
வளர்ந்ததும் அவர்களுக்கு இந்த சமூகம் குறித்த பயம் அதிகளவு இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் அவர்களின் தன்னம்பிக்கையே குழைத்திடும் அபாயம் உள்ளது.

ட்ரெண்டிங் :
அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த நடிகையும் சமூக செயற்பாட்டாளரான அலீசா மிலானோ கடந்த வாரம் வியாழனன்று தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தானும் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானேன். இதனை வெளியில் சொல்லாமல் இருப்பது தான் இப்பிரச்சனை தொடர்வதற்கு முக்கியக் காரணம்.
நீங்களும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் #MeToo என்று ஷேர் செய்திடுங்கள். எத்தனைப் பெண்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியட்டும் என்று ட்வீட் போட அது அடுத்த சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்காக ஷேர் ஆனது.

வரவேற்பு :
உலகம் முழுவதிலுமிருந்து பலரும் தங்களும் பாலியல் ரீதியாக கொடுமைகளை சந்தித்தோ என்று சொல்லி தங்களின் கதைகளை பகிர ஆரம்பித்தனர். இதில் பல்வேறு திரைப் பிரபலங்களும் அடக்கம்.
ஒரே நாளில் இதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆண்கள் :
இதில் ஆண்கள் தான் குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள். இந்த விஷயம் ட்ரெண்ட் ஆனதில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் பங்கும் இருக்கிறது.
சிலர் வருத்தத்துடன், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான ஜோக்குகளை கேட்டு சிரித்திருக்கிறேன், அவர்களைப் பற்றி அசிங்கமாக கமெண்ட் அடித்திருக்கிறேன்.
இன்னொருவன் யாரோ ஒருப்பெண்ணைப் பற்றி அசிங்கமாக பேசும் போது அவனை எதிர்க்காமல் அமைதியாக இருந்திருக்கிறேன். எப்படியும் அந்த குற்றத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று வருத்தப்பட,
இன்னொரு கூட்டமோ இது வெறும் ட்ரெண்டுக்காக செய்யப்பட்டிருக்கிறது.
பெண்கள் தங்களது கவன ஈர்ப்புக்காக இப்படிச் செய்கிறார்கள், ஆண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள், இது போலியான பெண்ணியம் என நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் கொடுத்து வருகிறார்கள்.

முன்வாருங்கள் :
யார் எப்படிப்பட்ட கமெண்ட்களை சொன்னாலும் இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் போது தான் மட்டுமே இப்படியான சூழலில் சிக்கித் தவிப்பதாக நினைத்து வேதனையடைவர்.
இப்போது தன்னைப் போலவே இத்தனைபெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னை விட மிகவும் மோசமான வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி அந்த சூழலை எதிர்க் கொண்டார்கள் என்பது தெரிந்திடும். அதை விட இப்படி பாலியல் ரீதியிலாக பாதிக்கப்படுவதில் தன்னுடைய தவறு ஏதுமில்லை. அப்படியே நடந்தாலும் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று அவர்களுக்கு காட்டியிருக்கிறது.

தைரியம் :
மிக முக்கியமாக இப்பிரச்சனையைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டும் என்கிற தைரியத்தை கொடுத்திருக்கிறது . நாம் என்ன செய்தாலும் பெண்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
இதனைச் சொல்வதால் பெண்களுக்கு தான் அவமானம் என்று நினைத்து ஆண்களும் பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்தார்கள்.
தற்போது அதனை மீறி நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று பெண்கள் சொல்ல முன் வந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் தான்.

பத்தாண்டுகள் :
இந்த ட்ரெண்டிங் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல பத்தாண்டுகளுக்கு முன்பே கறுப்பின பெண் ஒருவர் ஆரம்பித்திருக்கிறார்.
சமூக வலைதளங்கள் அவ்வளவாக பிரபலமடையாத 2007 ஆம் ஆண்டு #MeToo என்ற கேம்பனை ஆரம்பித்திருக்கிறார் டரானா ப்ரூக்கி என்ற பெண்மணி.
இந்த மீ டூ என்ற கேம்பனை வைரலாக்குவது மட்டுமே என்னுடைய நோக்கமல்ல பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பித்த நான் என்னைப் போலவே பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களோடு என்னை இணைத்துக் கொள்வதற்காக நானும் உங்களைப் போலவே தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்காக மீ டூ மூவ்மெண்ட் ஆரம்பித்தேன்.
அது இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு வைரலானது, பலரையும் பேச வைத்தது, விவாதிக்க வைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

ஆரம்பிக்க காரணம் :
டரானாவை மீ டூ மூவ்மெண்ட் ஆரம்பிக்க வைத்தது ஒரு குழந்தை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமூக செயற்பாட்டாளரான டரானா நிறவெறியை ஒழிக்கும் விதமாக பெண்கள் மத்தியில் அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
பெண்களை ஒருங்கிணைத்து அவர்கள் மத்தியில் பேசுவது தான் அவரது வேலை. அப்படி ஒரு பேசி முடித்த போது டரானா அருகில் வந்த சிறுமி உங்களுடன் தனியாக பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதுவரை தான் பேசியதில் ஏதேனும் சந்தேகமா அல்லது நான் சொன்னது அவருக்கு புரியவில்லையா என்று நினைத்து சிறுமியை அழைத்துக்கொண்டு தனியான இடத்திற்கு சென்றிருக்கிறார்.
"இப்போது நீ மிகவும் சிறுமியாக இருக்கிறாய் நீ வளர்ந்ததும் நான் சொல்வதெல்லாம் உனக்குப் புரியும்" என்று டரானாவே சொல்ல , "இல்லை உங்களிடம் இன்னொன்று சொல்லவேண்டும்" என்று சொல்லியிருக்கிறாள்.
அப்போது அந்த குழந்தை சொன்ன விஷயம் தான் டரானாவின் சிந்தனைகளை மாற்றியிருக்கிறது.

பாலியல் கொடுமை :
தன் அம்மாவின் காதலன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனக்கு வலிக்கிறது என்று கதறியழுதும் எந்த பிரயோஜனமும் இல்லை, எனக்கு வீட்டிற்கு செல்லவே பயமாக இருக்கிறது என்று சொல்லி அழுதிருக்கிறாள்.
குழந்தையின் அந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த டரானா மேற்கொண்டு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை ஐந்து நிமிடங்கள் கூட குழந்தை விவரித்த கொடுமைகளை கேட்கவே முடியவில்லையாம் டரானாவுக்கு.
மிகுந்த வேதனையான விஷயத்தை தொடர முடியாமல் உடனடியாக கவுன்சிலிங் கொடுப்பவரிடத்தில் அந்தக் குழந்தையை அழைத்துச் சென்றிருக்கிறார்.
இச்சம்பவத்தை விவரிக்கும் போது அந்த குழந்தையின் முகம், பயந்து நடுங்கிய கைகள், கண்களில் தெரிந்த பயம், யாராவது இதிலிருந்து தன்னை மீட்க மாட்டார்களா என்ற வலியும் வேதனையும் கலந்த கண்ணீர் என அந்தக் குழந்தையின் முகம் என்றைக்கும் மறக்க முடியாததாக இருந்திருக்கிறது.

இது யாருடைய தவறு? :
அந்த குழந்தையின் வார்த்தைகளில் இருந்த அதிர்ச்சி சிறுமியைத் தவிர அவரைப் போலவே எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள் தனக்கு நேர்ந்ததை தைரியமாக வெளியில் சொல்லத்தெரியாமல் எவ்வளவு கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதில் அந்த குழந்தையின் தவறு என்ன இருக்கிறது?
உனக்கு ஒன்றுமில்லை, இதில் உன்னுடைய தவறு ஏதுமில்லை இதைக் கடந்து வா என்று பாலியல் ரீதியிலான கொடுமைகளை சந்தித்தவர்களை எழுப்ப வேண்டும்.

#MeToo :
இதில் நீ வெட்கப்பட ஏதுமில்லை. நீ தனியாக இல்லை. நான் உன்னைப் பார்க்கிறேன், உன் வேதனைகளை கேட்கிறேன், உன்னை புரிந்து கொள்கிறேன், உன்னை ஏற்றுக் கொள்கிறேன். இதை நீ கடந்து வா என்று பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டு வர வேண்டி
மீடூ மூவ்மெண்ட் ஆரம்பிக்கப்பட்டது. அதில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது கதைகளை பகிர்ந்து கொள்வர், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு செயற்பாடுகளும் நடந்தது.
அதே விஷயம் தற்போது பத்தாண்டுகள் கழித்து சமூகவலைதள பயன்பாடு உச்சத்தில் இருக்கும் போது மீ டூ ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. அன்றும் சரி இன்றும் சரி பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவது என்னவோ குறைந்த பாடில்லை என்பது மட்டும் உண்மை.



Click it and Unblock the Notifications











