For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைப் பெற்றுத் தரும் தொழிற்சாலைப் பற்றிய திகிலூட்டும் உண்மைக் கதை!!

நைஜீரியாவில் குழந்தைகளை அறுவடை செய்திடும் திகிலூட்டும் உண்மைக் கதை

|

குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானது. வாழ்நாளில் நல்ல அனுபவங்களை கற்க வேண்டிய பருவம் இது. ஆனால் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி நாளுக்கு நாள் நிறைய செய்திகளை கடந்து வந்திருப்போம். குழந்தைகளை அறுவடை செய்வதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பெண்கள் இதில் பெரிதாக பாதிக்கப்படுகிறார்கள். நைஜீரியாவில் குழந்தைகள் பண்ணையே இருக்கிறதாம்!

மனதை கணக்கச் செய்திடும் இந்த உண்மைச் சம்பவத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைஜீரியா :

நைஜீரியா :

இன்றைக்கு நைஜீரியாவில் குழந்தைகளை அறுவடை செய்யும் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலை நாடுகளில் குழந்தையில்லாத தம்பதிகளுக்காக இங்கே குழந்தை பெற்றுத்தரும் தொழிற்சாலை போல நைஜீரியா செயல்படுகிறது.

தங்களுக்காக ஒரு வாரிசு வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லவும், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கும் சில தம்பதிகளினால் மட்டுமே இந்த சந்தை இயங்குகிறது.

Image Courtesy

குழந்தை சந்தை :

குழந்தை சந்தை :

அதே நேரத்தில் திருமணம், குழந்தை மீது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பமே அடிப்படைக் காரணமாய் இருக்கிறது.

நைஜீரியாவில் இருக்கும் மருத்துவமனை, அனாதை ஆசிரமங்களில் சத்தமின்றி குழந்தை சந்தை செயல்படுகிறது. இதில் அதிர்ச்சியளிக்ககூடிய விஷயம் என்னவென்றால்? வாடகைத் தாயாக 14 முதல் 17 வயதுள்ள பெண்களே அதிகம் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.

Image Courtesy

கடுமையான சட்டம் :

கடுமையான சட்டம் :

வறுமை காரணமாக இவர்களும் ஒப்புக்கொண்டு குழந்தை பெற்றுக் கொடுக்கிறார்கள். நைஜீரியாவில் கருக்கலைப்பிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இதனாலேயே கர்ப்பமான பெண் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுக் கொள்ள முன் வருகிறாள்.

இந்த தொழிலை செய்கிறவர்கள், உறவுமுறை வைத்துக் கொண்டோ அல்லது மருத்துவ உதவியுடன் கர்ப்பமாக்குகிறான்.

Image Courtesy

3-4 லட்சம் :

3-4 லட்சம் :

அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதில் இருந்து குழந்தை பெற்றுத் தரும் நாள் வரையில் அந்த வியாபாரிகளே அந்தப் பெண்ணை கவனித்துக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு 3 முதல் 4 லட்சத்திற்கு விற்று விடுகிறார்கள்.

காசு செலவழித்து உறுதியில்லாத மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதை விட காசு கொடுத்து இப்படி குழந்தையை வாங்கிடலாம் என்று பலரும் நினைத்து செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்தில் நைஜீரியன் போலீஸ் குழந்தை பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கர்ப்பிணிப்பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் யாரோ முகம் தெரியாத தம்பதிகளுக்காக அவர்களின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

குழந்தை கடத்தல் :

குழந்தை கடத்தல் :

யுனஸ்கோ அறிக்கையின் படி, நைஜீரியாவில் நடக்கின்ற அதிகமான குற்றங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது குழந்தை கடத்தல் தான். ஒரு நாளில் 10 குழந்தைகள் வரை கடத்தப்பட்ட வெளிநாட்டிற்கு விற்கப்படுகிறார்கள்.

நைஜீரியாவில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள் குழந்தைப் பண்ணைகளை செயல்படாமல் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனாலும் இது அதிகம் பணம் புழங்கும் இடமாக இருப்பதால் நிறுத்துவது என்பது மிகவும் கடினம் என்கிறார்கள்.

பெண் குழந்தைகளின் வாழ்க்கை துவங்குவதற்கு முன்பே இளம் வயதிலேயே குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக மாற்றி அவர்களின் வாழ்க்கையையே சீர்குலைத்திடும் இந்த குழந்தைப் பண்ணை செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Child factory in Nigeria

Child factory in Nigeria
Story first published: Tuesday, September 19, 2017, 12:19 [IST]
Desktop Bottom Promotion