For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷ்ய திருத்யை அன்று அஷ்டலட்சுமி ஸ்லோகம் சொல்வதால் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்வதால் உண்டாகும் சகல சௌபாக்கியங்களைப் பற்றியும் ஸ்லோகங்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

By Divyalakshmi Soundarrajan
|

லட்சுமி தேவி இந்த உலகில் நமக்கு 8 விதமான ரூபங்களில் ஆசி வழங்கிக் கொண்டு இருக்கிறார். அவை தான் அஷ்டலட்சுமி என்று அழைக்கப்படுகிறது. அஷ்டலட்சுமியில் அஷ்டம் என்பது எட்டை குறிப்பதாகும். 8 லட்சுமிகளும் 8 வகையான ஐஸ்வர்யங்களை தரக் கூடியவர்கள். அஷ்டலட்சுமி என்பவர்கள் ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் தன லட்சுமி ஆகியர்களே ஆவர்.

Ashtalakshmi Stotra To Chant On Akshaya Tritiya

மகாலட்சுமி ஒருவரை வணங்கினால் சகல வித ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறும். வீட்டின் பூஜை அறையில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தின் ஒரு பிரதியை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு வைத்திருப்பால் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்லாமல் பூஜை அறையில் ஸ்ரீ யந்திரத்தையும் வைத்திருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக இவ்விரண்டையும் அட்சய திரிதியை அன்று அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டால் அனைத்து செல்வங்களும் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவர். ஆனால், இதை செய்வற்கு சில விதிமுறைகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழிபாடு செய்வதற்கான விதிமுறைகள்:

வழிபாடு செய்வதற்கான விதிமுறைகள்:

இங்கே குறிபிடப்பட்டுள்ள விதிமுறைகள் அட்சய திரிதியை அன்றும் இந்த பூஜை செய்யும் மற்ற நாட்களிலும் பின்பற்ற வேண்டியவை. பூஜை செய்வதற்கு முன்பு பூஜை அறையை புனித நீர் கொண்டோ அல்லது சுத்தமான நீரினைக் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும்.

யந்திரத்தை மட்டும் வைத்து வணங்காமல் உடன் லட்சுமி சிலையையும் வைத் வணங்க வேண்டும். அதுவும் சிலையையும் யந்திரத்தையும் வடகிழக்கு மூளையில் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

பூக்கள் வைத்து, குங்குமம் இட்டு, விளக்கு ஏற்றி மற்றும் பால் பாயாசம் நெய்வேத்தியம் செய்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி மனதார மகாலட்சுமி தேவியை வணங்க வேண்டும்.

வாருங்கள் இப்போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை படித்து மகாலட்சுமி தேவியின் அருளால் அஷ்டலட்சுமிகளின் ஆசியால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.

 ஆதிலக்ஷ்மி

ஆதிலக்ஷ்மி

ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, சம்த்ர ஸஹொதரி ஹேமமயே

முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி, மம்ஜுல பாஷிணி வேதனுதே

பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஸாம்தியுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம்

 தான்யலக்ஷ்மி

தான்யலக்ஷ்மி

அயிகலி கல்மஷ னாஸினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே

க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி, மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே

மம்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஸ்ரித பாதயுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம்

தைர்யலக்ஷ்மி

தைர்யலக்ஷ்மி

ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே

ஸுரகண பூஜித ஸீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஸாஸ்த்ரனுதே

பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஸ்ரித பாதயுதே

ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம்

கஜலக்ஷ்மி

கஜலக்ஷ்மி

ஜய ஜய துர்கதி னாஸினி காமினி, ஸர்வபலப்ரத ஸாஸ்த்ரமயே

ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே

ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம்

சந்தானலக்ஷ்மி

சந்தானலக்ஷ்மி

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே

குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே

ஸகல ஸுராஸுர தேவ முனீஸ்வர, மானவ வம்தித பாதயுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம்

 விஜயலக்ஷ்மி

விஜயலக்ஷ்மி

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே

அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே

கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஸம்கரதேஸிக மான்யபதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம்

வித்யாலக்ஷ்மி

வித்யாலக்ஷ்மி

ப்ரணத ஸுரேஸ்வரி பாரதி பார்கவி, ஸோகவினாஸினி ரத்னமயே

மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஸாம்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே

னவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம்

தனலக்ஷ்மி

தனலக்ஷ்மி

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே

குமகும கும்கும கும்கும கும்கும, ஸம்க னினாத ஸுவாத்யனுதே

வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஸயுதே

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ashtalakshmi Stotra To Chant On Akshaya Tritiya

Ashtalakshmi Stotra To Chant On Akshaya Tritiya
Story first published: Saturday, April 29, 2017, 16:35 [IST]
Desktop Bottom Promotion