For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவ்வருடம் தமிழகத்தை பாதித்த எதிர்பாராத 10 சம்பவங்கள் - 2016!

|

உலகம் அழிந்துவிடும், இன்னும் அஞ்சு வருஷம் தான், அது இது என பல செய்திகள் வந்த போதும் கூட மக்கள் மனதில் உண்டாகாத அதிர்ச்சியை 2016 மிக எளிதாக ஆழமாக பதித்துள்ளது.

அரசியல் பிரபலங்களின் மரணத்தில் இருந்து காலநிலை மாற்றம் வரை இந்த 2016 தமிழகத்தில், தமிழக மக்கள் மத்தியில் பல தாக்கங்களை உண்டாக்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
107 டிகிரி வெப்பம்!

107 டிகிரி வெப்பம்!

2016-ன் துவக்கமே அதிரடியாக தான் இருந்தது. தமிழகம் என்று மட்டுமல்ல, உலகளவில் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. மொட்டை மாடியில் ஆம்லேட் சுட்ட செய்திகள் எல்லாம் பரவின. இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெப்பத்தால் நிறைய மரணங்கள் கூட நேர்ந்தன.

மக்கள் நல கூட்டணி!

மக்கள் நல கூட்டணி!

தமிழகத்தில் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வாங்குவது தான் கடினம். கட்சி ஆரம்பிப்பது எல்லாம் சுலபம் என்பதை மக்கள் மீண்டும் அறிந்தனர். திமுக. அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக மக்கள் நலக் கூட்டணி உதயமானது. கடினமாக போட்டியாக இல்லாவிட்டாலும், சற்று தாக்குபிடிப்பார்கள் என்று எதிர் பார்த்தவர்களுக்கு டெபாசிட் இழந்த சோக செய்தி தான் மிஞ்சியது.

அ.தி.மு.க வெற்றி!

அ.தி.மு.க வெற்றி!

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு. முதல் முறையாக தமிழக அரசியலில் தொடர்ந்து இரண்டு முறை ஒரே கட்சி ஆட்சியை பிடித்த சம்பவம் நிகழ்ந்தது. தனி பெரும்பான்மையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றி வாகை சூடியது.

சுவாதி கொலை!

சுவாதி கொலை!

இவ்வருடம் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக அதிக நாட்கள் நீடித்த சம்பவம். முதல் முறையாக ஒரு கொலை வழக்கை பொதுமக்கள் முகநூல், வாட்ஸ்அப்-ல் மிகுதியாக விமர்சித்து கொலையாளி இவர் தான், அவர் தான் என யூகிக்க செய்த வழக்கு. தமிழக போலீசாருக்கு மிகுந்த தலைவலியாக இருந்த வழக்கு.

ராம் குமார் தற்கொலை!

ராம் குமார் தற்கொலை!

சுவாதியை ராம் குமார் என்றவர் தான் கொலை செய்தார் என போலீஸ் ஒருவரை தமிழகத்தின் முன் நிறுத்தியது. இங்கு தான் சுவாதியின் வழக்கு இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பலரும் சமூக ஊடகத்தில் ராம் குமாருக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராம் குமார் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி வெளியானது.

இந்த வருடம் மக்கள் அறிந்த மற்றுமொரு பாடம் மறதி எனும் தேசிய வியாதி அதிகரித்துவிட்டது என்பது. ஒவ்வொரு விஷயத்தின் வீரியமும், மற்றொரு விஷயத்தால் மறக்கடிக்கப்பட்டது. மக்கள் எளிதாக மறந்து போனார்கள்.

கபாலி!

கபாலி!

தமிழகத்தில் நடந்துக் கொண்டிருந்த பல விஷயங்களை மறக்கடித்த ஒற்றை விஷயமாக வந்தது கபாலி. உலகளவில் பெரும் வசூல் என்பதை தாண்டி. முதன் முறையாக இந்தியாவில் ஒரு திரைப்பட வெளியீட்டிற்காக பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது.

பாரா ஒலிம்பிக் தங்கம்!

பாரா ஒலிம்பிக் தங்கம்!

தங்கவேலு தங்கமகனாக ஜொலித்தார். தமிழகத்திற்காக பாரா ஒலிம்பிக்கில் தங்கவேலு உயரம் தாண்டுதில் தங்கம் வென்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிமிர்ந்து நின்றார்.

ரூ. 500, ரூ1000!

ரூ. 500, ரூ1000!

மோடியின் திடீர் அறிவிப்பு... இளைஞர்கள் மத்தியில் ஆதரவு... கருப்புப்பணம் ஒழிப்பு... என பெரும் முழக்கத்தோடு வந்தது புதிய ரூ500, ரூ2000. ஆனால், மீண்டும் அதே பித்தலாட்டம், பெரியிடத்து தலையீடுகள் என வருமான துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் பணத்தை ஒருபக்கம் கைப்பற்றுகின்றனர். பொதுமக்கள் கால்கடுக்க ஏ.டி.எம் வாசலில் நூறு, ஆயிரத்திற்கு நின்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அம்மா மறைவு!

அம்மா மறைவு!

75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 நள்ளிரவு மரணமடைந்தார்.

வர்தா சூறாவளி!

வர்தா சூறாவளி!

நடா புயல் வந்தது தெரியாமல் போனது போல தான் வர்தாவும் இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்த மக்களுக்கு பேயாட்டம் போட்டுக் காட்டி கதிகலங்க வைத்தது வர்தா புயல்.

ஆஸ்கர்!

ஆஸ்கர்!

ஒவ்வொரு முறையும் தமிழ் படம் ஆஸ்கர் வெல்லுமா என்ற ஆவல் எல்லா திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் இருக்கும். இம்முறை மீண்டும் அந்த ஆவலை எற்படுதியிள்ளது வெற்றிமாறனின் -"விசாரணை".

கூடுதல் இன்ப அதிர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் பீலே படத்திற்காக இசை பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unexpected Things That Affected Tamilnadu This Year - 2016!

Unexpected Things That Affected Tamilnadu This Year - 2016!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more