For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொண்டாடப்படும் வெவ்வேறு விதமான நவராத்திரி வகைகள்

By Srinivasan
|

இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பண்டிகைகளின் பெரிய பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு உலக அளவில் அதிக மக்கள் கூடும் விழாவாகவும் உள்ளது.

நவராத்திரி என்பது அதன் பெயருக்கு ஏற்ப ஒன்பது இரவுகளைக் குறிக்கும். இந்த பண்டிகை ஒன்பது நாட்களுக்கு நடைபெறுவதுடன் ஒவ்வொரு நாளும் தனக்கென தனிப்பட்ட பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. நவராத்திரி வலிமையின் கடவுளான சக்தியை போற்றும் விதமாக நடத்தப்படும் ஒன்பது நாள் பண்டிகையாகும்.

ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அவதாரத்தையும் வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நவராத்திரி நாட்களில் செய்யப்படும் வழிபாடானது மனா வலிமையையும் உறுதியையும் கூட்டி தீமைகளை எதிர்த்துப்போராதா நமக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.

பண்டைய காலத்தில் பல்வேறு விதமான நவராத்திரி வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த பல்வேறு வகையான வழக்கங்களை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் எல்லாம் தலையாயது ஒன்பது நாட்களும் விரதம் இருப்பது.

அதுபோக, விதை விதைப்பது, ஒன்பது கோள்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவது மற்றும் இறுதியாக மஹாநவமி மற்றும் விஜயதசமியைக் கொண்டாடுவதும் நவராத்திரியின் முக்கிய அங்கங்கள். நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பல்வேறு சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் சில நவராத்திரி பழக்க வழக்கங்களை இப்போது நாம் பாக்கலாம்.

சாரதா நவராத்திரி

நவராத்திரிகளில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த சாரதா நவராத்திரி. இது பரவலாக கிழக்கு இந்தியா முழுவதும் கொண்டாடுகின்றனர். அப்போதுதான் துர்கை மகிஷாசுரனை வாதம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்னும் சில இடங்களில் இதை மகா நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இராமர் தன மனைவி சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லுமுன் இந்த பூஜையை செய்ததால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

வசந்த நவராத்திரி

நவராத்திரி பூஜைகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்தது இது. இந்தியாவின் வட மாநிலங்கள் முழுவதும் பரவலாக வசந்த நவராத்திரி கொண்டாடப்படுவதோடு அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த பூஜையை சித்ரா நவராத்திரி என்றும் கூறுவர்.

ஆஷாட நவராத்திரி என்று சில பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை குஹ்ய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட நவராத்திரி சக்தியின் ஒன்பது வடிவங்களுக்கு அர்பணிப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பவுஷ் நவராத்திரி

நவராத்திரியின் மற்றுமொரு வகையான இது வளர்பிறையில் வரும் சுக்ல பட்ச திதியில் கொண்டாடப் படுகிறது.

இந்தியா முழுவதும் சில நவராத்திரிப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் சாரதா மற்றும் வசந்த நவராத்திரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

English summary

Types Of Navratri Celebrated Across India

Types Of Navratri Celebrated Across India
Desktop Bottom Promotion