Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 15 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 17 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 17 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு!
- News
நித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்
- Technology
காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?
- Automobiles
இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா?
சீரியல் கில்லர்கள் பலரை பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஏன், சில வருடங்களுக்கு முன்னர் சைக்கோ கொலையாளி ஒருவன் சென்னையில் திகிலை கிளப்பினான். அவன் யார் என்பதை கண்டறிய முடியாமல் அனைவரும் திணறினர்.
931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!
சில சம்பவங்களும், அந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் மறப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த ஆட்டோ சங்கர். பல திரைப்படங்களில் இவரது பெயர் வில்லனுக்கும், கொலையாளிகளுக்கும் பெயராக சூட்டப்பட்டது.
நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!
திருவான்மியூரில் ஒரே இடத்தை சேர்ந்த ஒன்பது இளம் பெண்கள் காணாமல் போன அந்த சம்பவத்தை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது....

இயற்பெயர்
ஆட்டோ சங்கர் என்று பிரபலமாக அறியப்படும் இவரது இயற்பெயர் கௌரி சங்கர். 1980-களில் தமிழ்நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய சீரியல் கில்லர் தான் இந்த ஆட்டோ சங்கர்.

கொலை குற்றங்கள்
1988-89 ஆம் ஆண்டுகளில் ஆறு கொலை குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் இந்த ஆட்டோ சங்கர். இவரும் இவரது கூட்டாளியும் சேர்ந்து லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ் மற்றும் ரவி என்ற ஆறு பேரை கொலை செய்து அவர்களது உடல்களை எரித்தும், வீட்டிற்குள் புதைத்தும் கொலை குற்றத்தில் ஈடுபட்டனர்.

காரணம்
லலிதா என்பவர் ஆட்டோ சங்கரின் நான்காவது மனைவி. லலிதா இவரை விட்டு சுடலை எனும் நபருடன் சென்றதால் தான், இந்த ஆறு கொலைகள் செய்யப்பட்டன என கூறப்படுகிறது.

சாராயம், விபச்சாரம்
முதலில் ஆட்டோ ஓட்டுனராக இருந்த சங்கர். காலப்போக்கில் சாராயம் விற்பது, பெரிய நபர்களுக்காக விபச்சாரம் செய்வது போன்றவற்றில் ஈடுப்பட்டு வந்தான். இந்த வகையில் இவனுக்கு நிறைய காதலிகள் இருந்தனர். அவர்களில் சிலரை திருமணமும் செய்துக் கொண்டான் சங்கர்.

காணாமல் போன ஒன்பது பெண்கள்
1988-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறு மாத காலத்தில் சென்னையின் திருவான்மியூர் பகுதியில் ஒன்பது பதின்வயது பெண்கள் காணாலாம் போனார்கள். ஒரே இடத்தை சேர்ந்த பெண்கள் காணாமல் போனது போலீசாருக்கு பெரும் நெருக்கடியை தந்தது.

வரதட்சனை கொடுமை
முதலில் இவர்கள் வரதட்சனை தர இயலாமல், குடும்பச்சுமை காரணமாக குடும்பத்தினர் மூலமாக விபசாரத்திற்கு விற்கப்பட்டிருகலாம் என போலீஸ் கருதியது.

மர்மங்கள்
ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் விசாரணை நடத்திய போது தான். வேறு சில மர்மங்கள் வெளிப்பட துவங்கின. இவ்விடத்தில் தான் விசாரணையில் திருப்புமுனையாக ஒரு பெண்ணின் புகார் கிடைத்தது.

ஆட்டோ மூலம் கடத்தல்
டிசம்பர் மாதத்தில் ஒருநாள் சுபலட்சுமி என்ற பள்ளி மாணவியை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மதுக் கடையின் முன்னாள் தன்னை கடத்த முயன்றார் என்ற புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னால் ஒரு மறைமுக கும்பல் இருந்தது தெரிய வந்தது.

ஆட்டோ சங்கர்
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் இப்படி கடத்தியவர்களை கொலை செய்து அவர்களின் உடல்களை வங்கக்கடலில் வீசியுள்ளான் என்பதும் தெரியவந்தது.

ஒரேநாளில் இந்தியா முழுதும் பிரபலம்
மறுநாளே ஆட்டோ சங்கர் எனும் கௌரி சங்கர் கைது செய்யப்பட்டான். ஒரே இரவில் இந்தியா முழுவதும் கௌரி சங்கர் என்பவன் "ஆட்டோ சங்கராக" மாறியது இப்படி தான்.

நீதிமன்ற விசாரணை
முதலில் ஆட்டோ சங்கரின் வழக்குகள் செங்கல்பட்டு குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 1991-ம் ஆண்டு மே மாதம் 31-ம் நாள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆட்டோ சங்கர் மற்றும் இவரது கூட்டாளிகள் எல்டின், சிவாஜி என்பவர்களுக்கும் மரணதண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றப்பத்திரிக்கை
போலீசார் இந்த வழக்கில் 134 சாட்சியங்கள் ஆஜர்படுத்தப்பட்டது. இதில் ஒன்பது பேர் நீதித்துறையை சேர்ந்தவர், ஐந்து பேர் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மேஜர் செக்சன்களில் 1,100 பக்கங்கள் அடங்கிய சார்ஜ்ஷீட் சமர்ப்பிக்கப்பட்டது.

பரபரப்பு தகவல்
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான். மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு அரசியல் புள்ளிக்காக இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் இவர்கள் கூறினர்.

வன்புணர்ச்சி
வன்புணர்ச்சிக்காக தான் இந்த கடத்தல்கள் நடந்தன எனவும், அதற்கு பிறகு அந்த பெண்களை கொன்று உடல்களை அகற்றிவிடுவோம் எனவும், இவர்கள் பரபரப்பு தகவலை பத்திரிக்கையில் தெரிவித்தனர்.

தூக்கு
ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

கே.விஜய குமார்
தமிழக காவல்துறை இயக்குனர் கே.விஜய குமார், சங்கர் ஒரு குற்றவாளியாக உருவானதற்கு முக்கிய காரணம் சினிமா தான் என கேரளா மாநிலத்தில் நடந்த குற்றமும், ஊடகமும் என்ற நிகழ்ச்சியில் கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
தமிழகத்தில் நடந்த கொலை குற்றங்கள் எனிலும், இந்த சீரியல் கில்லர் சம்பவம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு வழக்காகும்.