Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மலையாளிகளுக்கு உச்சக்கட்ட கோபத்தை வரவழைக்கும் 7 விஷயங்கள்!
எல்லாருக்கும் அவரவர் மொழி, கலாச்சாரம், நாடு மீது தனி பற்றி இருக்கும். அதை கொஞ்சம் சீண்டி பார்த்தாலும், தவறாக பேசினாலும் கோபம் வரும். அப்படி மலையாளிகளை கோபமடைய செய்யும் 7 விஷயங்கள் தான் இவை.
ஒவ்வொரு மொழி மக்களை கண்டாலும் நமக்கு சிலவன நினைவுக்கு வரும். அது உணவு, கலாச்சாரம், சினிமா, இலக்கியம், அரசியல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் எதையாவது யாராவது, குறிப்பாக வெளி மாநில காரர்கள் பேசிவிட்டால் அதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஆம், இதுவும் ஒருவிதமான கௌரவப் பிரச்சனை தானே. அப்படி தெரிந்தோ, தெரியாமலோ மலையாளிகளுக்கு கோபத்தை உண்டாக்கும் வெளி மாநிலக் காரர்கள் பேசும் விஷயங்கள் பற்றி இனிப் பார்க்கலாம்...

செயல் #1
மல்லூ - மலையாளி என்பதை சுருக்கி அழைப்பது தானே மல்லூ என சிலர் எண்ணுவதுண்டு. ஆனால், இது பி - கிரேடு படங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் என்பதால், பல மலையாளி மக்களுக்கு இவ்வாறு அவர்களை அழைப்பது பிடிக்காது. சிலர் கோவத்தில் எரிமலையாய் வெடிக்கவும் செய்வார்கள்.

செயல் #2
மதராசி - முன்பு தென்னிந்தியாவின் பெரும்பகுதி மதராஸாக இருந்ததால், தென்னிந்தியர்களை பெரும்பாலும் மதராசி என அழைத்து வந்தனர். ஆனால், இப்போது தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரபிரதேசம், கேரளா என ஐந்து மாநிலங்களாக பிரிந்துவிட்டது. இப்போதும் இப்படி மதராசி என அழைப்பது மலையாளிகளுக்கு மட்டும் அல்ல, இதர மற்ற மாநிலக் காரர்களுக்கும் கூட பிடிக்காது.

செயல் #3
சவுதி வேலை - சவுதியில் வேலை வேண்டும் அன்றால் உடனே அருகில் இருக்கும் மலையாளக் காரர்களிடம் கேட்கும் பழக்கம் இன்றும் நம்ம ஊர் மக்களிடம் இருக்கிறது. ஆனால், எல்லா மலையாளிகளின் உறவினர்களும், தெரிந்தவர்களும் சவுதியில் இல்லை என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

செயல் #4
மோகன்லால் - மம்முட்டி: மோகன் லால், மம்முட்டி இருவரும் இந்திய சினிமாவின் சிகரங்கள். இவர்களது நடிப்புக்கு எல்லை இல்லை. ஆனால் இவர்களை உடல்வாகு வைத்து மற்ற மாநிலக் காரர்கள் கேலி செய்வார்கள். இது மலையாளிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. ஏனெனில், இவர்களை போல நடிப்பாற்றலை வெளிப்படுத்த இந்தியாவிலேயே ஒருசில நடிகர்கள் தான் இருக்கின்றனர்.

செயல் #5
பி - கிரேடு படங்கள் - பி கிரேடு படங்கள் என்றாலே தென்னிந்தியாவில் ஏதோ மலையாளிகள் மட்டுமே தயாரிப்பது போல சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்தோடு யாராவது அவர்களிடம் அந்த படம் இருக்கா என அணுகினால். கோபம் மட்டும் அல்ல, சில அடிகளையும் அவர்களிடம் நீங்கள் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

செயல் #6
தேங்காய் - மலையாளிகள் அவர்களது பெரும்பாலான உணவில் தேங்காய் பயன்படுத்துவார்கள். இதை கேலிக் கிண்டல் செய்தால் அவர்களுக்கு பிடிக்காது. அது அவர்களுக்கு உயிர் போன்று பிடித்தமானது.

செயல் #7
கலாச்சாரம் - தங்கள் கலாச்சாரம் பற்றி யாராவது கேலியாக பேசினால் மலையாளிகளுக்கு எக்கச்சக்கமாக கோபம் வரும். இது இவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் வர வேண்டிய கோபம் தான். யாருக்காகவும், எதற்காகவும் யாரும் தங்கள் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது.



Click it and Unblock the Notifications