For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை பார்த்ததுமே கண்டுபிடிக்க வேண்டுமா?

|

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் டூத் பேஸ்ட். பற்களைத் துலக்க வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் பற்களை சுத்தம் செய்யும் டூத் பேஸ்ட் அவசியமான ஒன்று. சரி, நீங்க வாங்கும் டூத் பேஸ்ட் ஆரோக்கியமானது தானா? நிச்சயம் இந்த கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ஆனால், நாம் வாங்கும் டூத் பேஸ்ட்டை அதனைப் பார்த்ததுமே, அதில் எந்த மாதிரியான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும் என்பது தெரியுமா?

பொதுவாக நாம் டூத் பேஸ்ட் வாங்கும் போது, அதனை முனையில் உள்ள வண்ண பட்டையைப் பார்க்க மாட்டோம். அந்த வண்ண பட்டைக்கும், டூத் பேஸ்ட் எந்த வகையானது என்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த வண்ண பட்டையைக் கொண்டே அந்த டூத் பேஸ்ட்டில் என்ன உட்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் கணிக்க முடியும்.

இதற்கு ஏற்றாற் போல் அதில் சேர்க்கப்பட்ட உட்பொருட்களைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு டூத் பேஸ்ட்டும் ஒவ்வொரு வண்ண பட்டையைக் கொண்டிருக்கும். வேண்டுமானால் இன்று உங்கள் வீட்டிற்கு சென்றதும், நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டின் முனையில் என்ன நிறம் உள்ளது என்று பாருங்கள். சரி, இப்போது டூத் பேஸ்ட்டில் உள்ள வண்ணங்கள் எதைக் குறிக்கிறது என்பதைக் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான்கு வகை வண்ண பட்டைகள்

நான்கு வகை வண்ண பட்டைகள்

டூத் பேஸ்ட்டுகளின் முனைகளில் பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என நான்கு வண்ணங்களில் ஏதேனும் ஒரு வண்ணப் பட்டை பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு வண்ணமும் அதில் உள்ள உட்பொருட்களைக் குறிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

MOST READ: நீங்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை பார்த்ததுமே கண்டுபிடிக்க வேண்டுமா?

பச்சை நிறம்

பச்சை நிறம்

டூத் பேஸ்ட்டுகளின் முனையில் பச்சை நிறத்தில் பட்டை கொடுக்கப்பட்டிருந்தால், இந்த டூத் பேஸ்ட்டில் முழுமையாக இயற்கைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நீல நிறம்

நீல நிறம்

நீல நிறத்தில் டூத் பேஸ்ட்டின் முனையில் பட்டை தீட்டப்பட்டிருந்தால், இதில் இயற்கைப் பொருட்களுடன் சில மருந்துகளும் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

டூத் பேஸ்ட்டின் முனையில் சிவப்பு நிறத்தில் பட்டை இருப்பது, அதில் இயற்கைப் பொருட்களுடன், அதிகமான அளவில் கெமிக்கல்களும் கலக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.

கருப்பு நிறம்

கருப்பு நிறம்

ஒருவேளை கருப்பு நிற பட்டையானது டூத் பேஸ்ட்டின் முனையில் இருப்பின், அது முழுமையாக கெமிக்கல்களை உட்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மறுப்பு

மறுப்பு

டூத் பேஸ்ட்டை தயாரிக்கும் சில கம்பெனிகள், இது தவறானது என்று வாதிடுகின்றனர். மேலும் டூத் பேஸ்ட்டில் என்ன உட்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, டூத் பேஸ்ட்டின் பின்புறத்தில் தெளிவாக பட்டியலிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

MOST READ: வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

இதில் எது சரி?

இதில் எது சரி?

பிறகு ஏன் டூத் பேஸ்ட்டுகளில் இந்த நான்கு வண்ணங்களில் மட்டும் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன? எனவே மக்களே! உஷாராக இருங்கள். இதில் எது சரி என்பதை சிந்தித்து, நீங்களே ஆய்வு செய்து முடிவெடுங்கள்.

குறிப்பு

குறிப்பு

இந்த வண்ண பட்டைகள் வெறும் டூத் பேஸ்ட்டிற்கு மட்டுமின்றி, நீங்கள் பயன்படுத்தும் க்ரீம்களுக்கும் பொருந்த வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Importance Of The Bottom Color Stripes On Your Toothpaste

It is very important to pay attention to the toothpaste bottom color since these color stripes tell a lot about the toothpaste type. Want to know the real meaning of toothpaste bar? Read on to know more about a secret behind the toothpaste bottom color.
Desktop Bottom Promotion