வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றும் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் கூறும் 10 முக்கிய பாடங்கள்!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

ஞானிகள் கருணையின் ஊற்று. அவர்களின் கருணை பல்வேறு மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. அவர்களின் உபதேசங்கள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கை முறையும் பக்தர்களின் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்துள்ளது.

16 வயதில் சீரடிக்கு நடந்தே வந்து, ஒரு ஞானியாக வாழ்ந்து, தமது பக்தர்களின் விருப்பத்தை அன்போடு நிறைவேற்றிய ஒரு மகான் இவர். தன்னுடைய பக்தர்களை அன்போடு வழிகாட்டி, அவர்களை பாதுகாத்து, அவர்களின் மனங்களை ஆட்கொண்டு, எங்கும் கருணையை விதைத்தவர். எங்கும் நிறைந்த பரம் பொருளின் அவதாரமாக அறியப்படுபவர். அவரே சீரடி சாய்பாபா ஆவார்.

சீரடி சாய் பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள்!!!

பொதுவாக சாய் பாபா என்று அறியப்படுகின்ற இவர், அவருடைய பக்தர்களால் கடவுளின் அவதாரமாக கொண்டாடப்படுகின்றார். அவர் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை மகராஷ்டிராவில் உள்ள சீரடி என்னும் கிராமத்தில் கழித்தார். சீரடி தற்பொழுது ஒரு புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தளமாக மாறி விட்டது.

அவர் தன்னுடைய பக்தர்களுக்கு எவ்வாறு கருணையைப் பொழிந்தார் என்பது நமக்கு புரிவதில்லை; ஆனால் அவருடைய பக்தர்கள் பகவான் சீரடி சாய்பாபாவின் பல்வேறு அற்புதங்களை அனுபவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்பது என்ன?

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்பது என்ன?

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்பது, பகவான் சீரடி சாய் பாபா 1918 ம் ஆண்டு முக்தி அடைவதற்கு முன்னர் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கையைப் பற்றி அவருடைய பக்தர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு புனித நூலாகும். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை பற்றிப் படிப்பது, அவருடைய் பக்தர்களின் வாழ்வை பாபா எவ்வாறு நல்வழிப்படுத்தினார், என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றது. ஒரு புனித துறவியான பாபா, எவ்வாறு ஒவ்வொரு பக்தர்களின் வாழ்க்கையும் நல்வழிப்படுத்துகின்றார் என்பதை, ஒவ்வொருவரும் அவர்களுக்கும் பாபாவிற்கும் இடையே உள்ள புனித உறவின் மூலமே உணர முடியும். ஸ்ரீ சாய் சத்சரித்திரம் வழங்கும், வாழ்க்கையைப் பற்றிய உங்களின் பார்வையை மாற்றும் பத்து முக்கிய பாடங்களை இங்கே தொடர்ந்து படியுங்கள்.

பாடம் 1

பாடம் 1

"நீங்கள் எதை வேண்டுமானாலும் விரும்புங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் உங்களுடைய செயல்கள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன் என்பதை மறந்து விடாதே. நான் அனைத்து உயிரினங்களின் உள்ளத்தில் உறைந்து அவற்றை ஆட்சி செய்கின்றேன். நானே தாய்; நானே அனைத்து உயிரினங்களின் தோற்றம்; நானே மூன்று குணங்களின் ஒத்திசைவு; நானே அனைத்து புலன்களையும் இயக்குபவன்; நானே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் போன்ற மூன்று தொழில்களையும் புரிகின்றவன். என்னுடைய பக்தனை எதுவும் துன்புறுத்தாது. என்னை மறந்தவனை மாயா துன்புறுத்தும். அனைத்து பூச்சிகள், எறும்புகள், அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்தும் என்னில் ஒரு பகுதி அல்லது என்னால் உருவானது. "

பாடம் 2

பாடம் 2

"என்னுடைய பக்தர்களின் வீடுகளில், உணவு மற்றும் உடைகளுக்கான பற்றாக்குறை இருக்க முடியாது. அது என் சிறப்பு பண்பாகும். எப்போதும் முழு மனதோடு வேறு எதையும் நினைக்காமல் என்னை தொழும் பக்தர்களின் நலனுக்காக, நான் அனைத்தையும் வழங்குவேன். தெய்வத்தின் வடிவத்தை உறுதியாக மனதில் நிறுத்த வேண்டும். மனம் மற்றும் அனைத்து உணர்வுகளையும் நாம் எப்போதும் இறைவனை வணங்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் நம்முடைய கவனத்தை கலைக்கக் கூடாது. மனதை எப்பொழுதும் என்னை நோக்கி செழுத்துவதன் மூலம் அதை உடல், செல்வம் மற்றும் வீட்டை நோக்கி அலைப்பாய விடதே. அதன் பிறகு உனக்கு, அமைதி மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு எப்பொழுதும் நிலவும். "

பாடம் 3

பாடம் 3

"உங்களில் அதிர்ஷ்டசாலி எவரோ மற்றும் எவருடைய பாவம் மறைந்துவிட்டதோ, அவர்களே என்னைத் தொழுகின்றார்கள். நீங்கள் எப்போதும் 'சாயி சாயி' என்று என்னை தியானித்தால், நான் உங்களை ஏழு கடல்களைத் தாண்டி எடுத்துக் செல்வேன். இந்த வார்த்தைகளில் எவர் நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எனக்கு எட்டு முழம் அல்லது பதினாறு முழம் போன்ற பல வித வழிபாட்டு உபகரணங்கள் தேவையில்லை. எங்கு தூய்மையான பக்தி இருக்கின்றதோ, அங்கேயே நான் இருக்கின்றேன். "

பாடம் 4

பாடம் 4

"சில உறவு அல்லது இணைப்பு இல்லை எனில், யாரும் எங்கும் செல்வதில்லை. சில மனிதர்களோ அல்லது ஏதேனும் விலங்கினமோ, உன்னைத் தேடி வந்தால் அதை விரட்டி விடாதே. அவைகளுக்கு உரிய மரியாதையை செலுத்தி, அவைகளை அன்புடன் நடத்து. தாகத்திற்கு தண்ணீர், பசிக்கு உணவு, மானத்தை காக்க உடை மற்றும் அந்நியர்கள் ஓய்வெடுக்க உங்களுடைய தாழ்வாரத்தை தருதல் போன்ற உங்களுடைய செயல்களால் பகவான் ஸ்ரீ ஹரி நிச்சயமாக சந்தோஷப்படுவார். "

பாடம் 5

பாடம் 5

"நீங்கள் எனக்கு முன்பாக உண்மையான பக்தியுடன், உங்களுடைய இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தால் நான் உடனையே உங்களுடன் வந்து விடுவேன். இரவு பகல் பாராமல் நான் எப்பொழுதும் உங்களுடன் இருப்பேன். ஏழு கடல் தாண்டி நான் வசித்து வந்தாலும், நீ என்ன செய்கின்றாய் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த பரந்த உலகில் நீ எங்கு சென்றாலும், நான் உன்னுடனேயே இருக்கிறேன்."

பாடம் 6

பாடம் 6

"வாழ்க்கையின் உச்சபட்ச உயரிய இலட்சியத்தை யார் அடைந்தார்களோ, அவர்களே, அழியாத நித்திய ஆனந்தத்தில் திழைக்கின்றார்; மற்றவர்கள் அனைவரும் வெறுமனே வாழ்கின்றனர். "

பாடம் 7

பாடம் 7

"தன்னை அறிய (தன்னுள் உறையும் பிரம்மத்தை அறிய) ஒருவர் (1) ஐந்து ப்ரணாஸ் (முக்கிய விசைகள்), (2) ஐம்புலன்கள் (நடவடிக்கைக்கான ஐந்து மற்றும் எண்ணங்களுக்கான ஐந்து), (3) மனம், (4) அறிவாற்றல், மற்றும் (5) ஈகோ போன்ற ஐந்து முக்கிய விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். சுயத்தை உணரும் பிரம்மா-ஞானப் பாதை என்பது ஒரு கத்தியின் விளிம்பில் நிற்பதைப் போன்று மிகவும் கடினமானது. "

பாடம் 8

பாடம் 8

"உன் உள்ளமே என்னுடைய உறைவிடம். நான் எப்பொழுதும் உன்னுடையே இருக்கின்றேன். உன்னுள் உறையும் என்னை எப்போதும் நினைத்துக் கொண்டு இரு. உன்னுடைய மற்றும் பிற உயிரினங்களின் உள்ளத்தில் நான் இருக்கின்றேன் என்பதை எவன் உணர்கின்றானோ, அவனே என்னுடைய ஆசீர்வாதத்திற்கு உரியவன். அவனே அதிர்ஷ்டசாலி. "

பாடம் 9

பாடம் 9

"கடவுள் எங்கும் மற்றும் எல்லா உயிர்களிலும் இருக்கின்றார். அது பாம்பாகட்டும், அல்லது தேளாகட்டும். அனைத்து உயிரினங்களிலும் கடவுள் நீக்கமற நிறைந்து வசித்து வருகின்றார். பாம்புகள், தேள்கள் முதலிய அனைத்து உயிரினங்களும் அவருடைய இச்சைப்படியே நடக்கின்றன. அவருடைய அனுமதி இன்றி, எந்த ஒரு உயிரும், மற்றொரு உயிருக்கு தீங்கிழைக்க முடியாது. இந்த உலகம் அவரை நம்பியே உள்ளது, மற்றும் இந்த உலகில் உள்ள அனைத்தும் அவரைச் சார்தே இயங்குகின்றன. எனவே நாம் அனைவரும் பிற உயிர்களிடம் அனுதாபம் கொண்டு, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செழுத்த வேண்டும். நாம் அனைவரும் வீணான சண்டை சச்சரவுகள் மற்றும் கொலைகளை விட்டுவிட்டு பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டவனே (கடவுள்) அனைத்து உயிர்களுக்கும் பாதுகாவலன் ஆவான். "

பாடம் 10

பாடம் 10

"ஒருவர் தன்னை அறிவற்கு தியானம் உதவும். ஒருவர் அனுதினமும் தியானத்தை அனுஷ்டித்து வந்தால், அவர்களுடைய அலைபாயும் எண்ணங்கள் அடங்கத் தொடங்கும். உங்களுடைய ஆசையை அறுக்க, எங்கும் நிறைந்த பரம்பொருளை அனுதினமும் தியானிக்க வேண்டும். நீங்கள் தியானத்தில் ஈடுபட ஈடுபட, உங்களுடைய மனம் ஒருமைப்பட்டு, உங்களின் வாழ்வின் நோக்கம் நிறைவேறும்."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Miraculous Lessons From Sai Satcharitra Will Transform Your Life

Here are top 10 miraculous lessons from Sai Satcharita will transform your life. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter