Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
இதுக்கு பேரு தான் மதுரை லந்து - ஹாலிவுட் நடிகர், நடிகை படம் பொதுக் கழிப்பிடத்தில்!
மதுரைக் காரர்கள் என்றாலே சவடால், சண்டை, லந்து கொடுப்பது என நிறையே கேள்விபட்டிருபோம். அதற்கு இது தான் சேம்பிள் என மதுரை மாநகராட்சி லந்துக்கு இலச்சினை ஒரு செயல் செய்துள்ளது.
நாம் பார்த்த 99.99% மதுரை படங்களில் அவர்கள் தோள்களில் அரிவாளுடன் சுற்றுபாவர்கள், அவர்களுக்கு ஈரமே கிடையாது, வெட்டுக் குத்தை குலத் தொழிலாக செய்பவர்கள் போன்று தான் காட்சிப் படுத்துவர்கள்.
ஆனால், உதவி செய்வதிலும், அன்பும், அக்கறை செலுத்துவதில், வேற்று நபராக இருபினும் உடன் பிறந்தவர் போல காண்பதிலும் தான் மதுரை காரர்கள் சிறந்தவர்கள்.

மதுரையின் சிறப்பு மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ என்பதை காட்டிலும், அவர்கள் அசராமல் கொடுக்கும் லந்தை கூறலாம். வம்பிழுத்து கலாய்ப்பது அவர்களுக்கு கை வந்த கலை.
இப்போது மதுரை மாநகராட்சி ஹாலிவுட் ரேஞ்சில் இரு லந்து செய்துள்ளது என ஒரு புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது...

பொதுக் கழிப்பிடம்!
மதுரை பொதுக் கழிப்பிடம் ஒன்றின் வாசல் சுவரில் ஆண், பெண் வேறுபாட்டை காட்ட, ஹாலிவுட் நடிகர்களான டாம் க்ரூஸ் மற்றும் கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டின் படங்களை ஒட்டி லந்து கொடுத்துள்ளனர்.
நானும் ரவுடி தான் விக்னேஷ்!
இந்த படத்தை "நானும் ரவுடி தான்" இயக்குனர் விக்னேஷ் மிக பெருமையுடன்... நம்ம ஊரு லந்து இதுதான் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

டாம் க்ரூஸ்!
1980-களில் இருந்து கன்னிப் பெண்களின் கனவு நாயகனாக திகழ்பவர் டாம் க்ரூஸ். இவருக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், இன்றளவும் பதின் வயது பெண்களுக்கு இவர் மேல் இருக்கும் கிரேஸ் குறையவே இல்லை. இவர் படத்தை பொதுக் கழிப்பிடத்தில் ஒட்டியது ஒருபுறம் ரகளையாக இருந்தாலும், இவரது ரசிகர்களுக்கு சற்று வேதனையாக தான் இருக்கும்.

கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!
"ட்விளைட்" தொடர் படங்களின் மூலம் உலகம் முழுவதும் பெரியளவில் பிரபலமானவர் கிறிஸ்டன் ஸ்டீவர்ட். இதுவரை இப்படத்தின் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. டாம் க்ரூஸ் பெண்களை மயக்கினால், கிறிஸ்டன் ஸ்டீவர்ட் ஆண்களை மயக்குபவர். இவர்களை தேர்வு செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரை செய்த புண்ணியவான் யார் என்று தான் தெரியவில்லை.

இதுக்கு மேல ஏதாவது வேணுமா?
இதுக்கு மேல மதுரையின் லந்துக்கு வேறு ஆதாரம் வேண்டுமா என தெரியவில்லை. ட்விட்டரில் ஒருபுறம் இது வைரலாகி வந்தாலும், படத்தை உற்றுப் பார்க்கும் போது யாரோ செய்த போட்டோஷாப் வேலை போலவு தெரிகிறது.என்னதான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்.



Click it and Unblock the Notifications
