பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஊர்வன வகைகளில் ஒன்றான பல்லியின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நம் பண்டைய புராணத்தில் இதற்கெனவே ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். இந்த பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது, பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப் போவது பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலை

தலை

ஆண், பெண் என இருபாலரது தலையில் பல்லி விழுந்தாலும், அது மோதல்களுக்கு தயாராக இருக்கவும் அல்லது மரண பயத்தைக் குறிக்கும்.

கண்கள்

கண்கள்

இடது கண் என்றால், ஆண்களுக்கு நல்லது நடக்கும் மற்றும் பெண்களுக்கு துணையின் அன்பு கிட்டும். வலது கண் என்றால், ஆண்களுக்கு எதிலும் தோல்வியே கிடைக்கும் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தம் மேலோங்கும்

உதடுகள்

உதடுகள்

மேல் உதட்டில் பல்லி விழுந்தால் ஆண், பெண் இருவருமே மோதல்களுக்கு தயாராக இருக்கவும் என்பதற்கான அர்த்தமாகும். அதுவே கீழ் உதடு என்றால், பெண்களுக்கு புதிய பொருட்கள் கிட்டும் மற்றும் ஆண்கள் நிதி லாபங்களை எதிர்பார்க்கலாம்.

பாதம்

பாதம்

வலது பாதத்தில் பல்லி விழந்தால், நோயால் கஷ்டப்படக்கூடும். அதுவே இடது பாதத்தில் விழுமாயின், அது அவருக்கு கெட்டது நடக்கப் போவதைக் குறிக்கும்.

மார்பு

மார்பு

பல்லி மார்பு பகுதியில் விழுந்தால், ஆண், பெண் இருபாலருக்குமே நன்மை தான் விளையும்.

மணிக்கட்டு

மணிக்கட்டு

ஆண் மற்றும் பெண்களுக்கு வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால், கெட்ட சகுணம். அதுவே இடது மணிக்கட்டில் என்றால் அதிர்ஷ்டம்.

தோள்பட்டை

தோள்பட்டை

வலது தோள்பட்டையில் பல்லி விழுந்தால், எதிலும் வெற்றி கிட்டும். அதுவே இடது தோள்பட்டை என்றால், பேரின்ப செய்தியைக் கேட்கக் கூடும்.

கைவிரல்கள்

கைவிரல்கள்

வலது கை விரல்களில் பல்லி விழுந்தால், பரிசைப் பெறுவீர்கள், அதுவே இடது கை விரல்கள் என்றால் கவலைப்படக்கூடும்.

தொடை

தொடை

சாதாரணமாக எந்த தொடையில் பல்லி விழுந்தாலும், அது கெட்ட சகுணத்தைக் குறிக்கும்.

கழுத்து

கழுத்து

கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால், அது ஒருவருடனான பகைமைத் தொடரும். இடது பக்கத்தில் விழுந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lizard Falling On Body Parts – Gauli Shastra – Prediction Based On Lizards

Lizard falling on body parts have traditionally been associated with good or bad omen as per Hindu mythology. Numerous references have been made to lizards falling over men and women to indicate future happenings.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter