Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
உலகில் தீர்வில்லாமல் நீடிக்கும் நெடுங்கால மர்மங்கள்!!
அவிழக்கப்படாத முடிச்சுகளும், புரியாத புதிர்களும், முடியாத மர்மங்களும் நிறைந்த உலகில் தான் நாம் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். புராணக் காலங்களில் இருந்தும், இன்றைய நவீன காலம் வரையிலும் கூட இவை தொடர்கின்றன.
ஏலியன்கள் நமது உலகிற்கு வந்து சென்றதற்கான வியக்கவைக்கும் ஆதாரங்கள்!!!
இழந்த நகரங்கள், தெளிவான பதில்கள் கிடைக்காத தோற்றங்கள், எங்கிருந்தோ வரும் சப்தம், சில மரணங்கள் இதற்கெல்லாம் மேலாக பல மர்மங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கடல்.
ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!
இனி, இன்று வரை தீர்வுக் காண முடியாமல் நீடிக்கும் மர்மங்கள் பற்றி காணலாம்..

"தி டோஸ் ஹம்"
நியூ மெக்ஸிகோ பகுதியில் இருக்கும் ஒரு சிறிய டவுன் தான் டோஸ் எனும் பகுதி. இங்கு எப்போதுமே ஓர் சப்தம் நிலவி வருகிறது. தூரத்தில் ஓர் டீசல் இன்ஜின் ஓடுவது போன்ற சப்தம் அது.

"தி டோஸ் ஹம்"
வெறும் காதுகளிலும், அல்லது ரெகார்ட் செய்தும் எளிதாக கேட்கும் படி இருக்கும் இந்த சப்தம், எங்கிருந்து வருகிறது என்று இன்றளவும் கண்டறியப்படவில்லை.

"ஜாக் தி ரிப்பர்"
1800-களில் லண்டனில் 11 பெண்களை தொடர்ந்து கொலை செய்தவன் தான் இந்த ஜாக் தி ரிப்பர். ஆனால், இன்று வரையும் இவன் என்ன ஆனான் என்று யாராலும் கண்டறியப்படவில்லை. இவனது இந்த பெயர் பல பிரபல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது தான் மிச்சம்.

பெர்முடா முக்கோணம்
மியாமி, பெர்முடா, மற்றும் போர்டோ ரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதி தான் இந்த பெர்முடா முக்கோணம். இன்றளவும் உலகின் பெரிய மர்மமாக திகழ்வது இது தான்.

பெர்முடா முக்கோணம்
இதை நீரிலும், வானிலும் கடக்கும் அனைத்து பொருள்களும் இந்த பகுதிக்குள் இழுக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் எண்ணற்ற உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ராசி இலட்சினை கொலைக்காரர்கள்
1960 மற்றும் 70-களில் சான் பிரான்சிஸ்கோ பகுதில் சில குற்றவாளிகள் "Zodiac killer" என்று கூறப்பட்டனர். கொலை செய்து ஓர் இரகசிய குறியீட்டு சின்னத்தை ஊடகத்திற்கும், காவல் துறைக்கும் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர். நான்கில் ஒரு குறியீடு மட்டுமே கண்டறியப்பட்டது. மற்ற மூன்றும் இன்று வரை மர்மமாகவே நீடித்து வருகிறது.

ஜோர்ஜியா கைடு ஸ்டோன்ஸ்
எல்பர்ட் உள்ளூரில் இருக்கும் ஜோர்ஜியா கைடுஸ்டோன்ஸ் மிகவும் மர்மமாக இருக்கிறது. இந்த கற்களில் ஆங்கிலம், ச்வகிலி, இந்தி, ஹீப்ரு, அரபு, சீனா, ரஷ்யா, மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் பத்து கட்டளைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை யாருக்கு, எதற்காக எழுதப்பட்டது என இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.

ரொங்கோரொங்கோ
ஈஸ்டர் தீவுகளில் இருந்து சில கீற்றுகள் கண்டெடுக்கப்பட்டன, இவை ரொங்கோரொங்கோ என கூறப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டிருக்கும் செய்தி என்னவென்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

நுழைகழி நெஸ் மான்ஸ்டர்
டைனோசர் போல உருவ தோற்றமிருக்கும் இந்த நுழைகழி நெஸ் மான்ஸ்டரை கண்டதாக நேரடி சாட்சியங்கள், புகைப்படம், வீடியோ போன்றவை இருக்கின்றன.

நுழைகழி நெஸ் மான்ஸ்டர்
பல்வேறு காலக்கட்டத்தில் இது காணப்பட்டதாக சில கூற்றுகள் தெரிவிக்கின்றன. இன்றும் இது கடலுக்கடியில் இருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது இருக்கிறதா, இல்லையா? உண்மையா, பொய்யா? என்பது மர்மமாகவே இருக்கிறது.

பெரிய பாதம் - BigFoot
இந்த பிக்ஃபூட்டை, "Sasquatch" என்றும் கூறுகிறார்கள். கனடாவின் ஸ்நொவ் (Snowy) மலைப்பகுதியில் பிக்ஃபூட் எனப்படும் உயிரினம் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. காண கொரில்லா போலவும், நடக்கும் போது மனிதனை போலவும் இருக்கிறது எனக் கூறப்படும் இந்த உயிரினம் மர்மமானதாக திகழ்கிறது.

ஸ்டோன்ஹெஞ் - Stonehenge
இந்த பெரிய பாறைகள் பார்க்க கண்கவரும் தோற்றத்தில் இருப்பினும் கூட, இரு பாறைகளுக்கு மேல் ஒரு பாறை ஏன் வைக்கப்பட்டுள்ளது, இதன் தோற்றத்தின் மூலம் வெளிப்படும் தகவல் என்ன, இதை ஏன் உருவாக்கினர் என்பது மர்மமாக தான் இருக்கிறது.

லால் பகதூர் சாஸ்திரி
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் இதுவரை விளக்க முடியாதாகவே இருந்து வருகிறது. இவர் மாரடைப்பின் காரணமாக இறந்தார் என்று சிலர் கூறினாலும், மருத்துவர்கள் மற்றும் இவரது மனைவி இவர் மிகவும் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்று குறிப்பிட்டனர்.

லால் பகதூர் சாஸ்திரி
விஷம் கொடுத்து இவர் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கூற்றுகளும் கூறப்பட்டுள்ளன. தெளிவான விடைக் கிடைக்காத இவரது மரணம் கல்லறையில் புதைந்துவிட்டது தான் மிச்சம்.

நாஸ்கா கோடுகள்
நிலத்தில் இருந்து காண்கையில் வெறும் நீளமான கோடுகளாக தெரியும் இவை, வானில் இருந்து காணும் போது சிலந்தி, குரங்கு , சுறா போன்ற உருவங்களில் தோற்றமளிக்கின்றன.

நாஸ்கா கோடுகள்
இவை ஏலியன்கள் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலரால் கூறப்படுகின்றன. ஆனால், இதன் பின்னணி இன்றளவும் மர்மமாகவே இருக்கின்றது.



Click it and Unblock the Notifications