Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
திரையுலகை கலக்க காத்திருக்கும் இந்திய நடிகர்களின் வாரிசுகள்!
தலைமுறை தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தார் ஒரே தொழிலை செய்வது புதியது அல்ல. இது சினிமாவிற்கும் விதிவிலக்கு அல்ல. மற்றவர்கள் விசிட்டிங் கார்ட் உருவாக்கி கொண்டு வர வேண்டும்.
நடிகர்களின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே அவர்களது அப்பாவின் பெயரில் விசிட்டிங் கார்டுகள் கைவசம் இருக்கின்றன. அந்த வகையில், அடுத்ததாக திரையுலகை கலக்க காத்திருக்கும் இந்திய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் பற்றி தான் பார்க்கலாம்....

துருவ்
நடிப்பு சூறாவளி விக்ரமின் மகன் துருவ். உருவத்தில் அச்சு எடுத்தது போல அப்படியே விக்ரம் போலவே இருக்கும் துருவ.
நடிப்பிலும், ஈடுபாட்டிலும் அதே போன்று இருந்தால் கண்டிப்பாக அப்பாவை போலவே திரைத்துறையில் கலக்க வாய்ப்புகள் அதிகம்.

சஞ்சய்
இளையதளபதி விஜயின் அன்பு மகன். இப்போது நடிப்பில் ஆர்வம் இல்லை எனிலும், அப்பாவின் படங்களான போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்களில் பாடல்களில் தலையை காண்பித்துவிட்டு சென்றுள்ளார் என்பதால், எதிர்காலத்தில் இவரும் கோலிவுட்டில் சின்ன தளபதியாக களமிறங்கலாம்.

நவ்யா
அமிதாப், ஜெயா பச்சன் அவர்களது பேத்தி தான் நவ்யா. பாலிவுட் நடிகை ஆவதற்கான நாளினால், ஹாட் அண்ட் கியூட் லுக்கில் வளர்ந்து நிற்கிறார் நவ்யா.

ஆர்யன் கான்
கிங் ஆப் கான் என புகழப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். பிஞ்சிலேயே பழுத்து ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி புகழ் பெற்ற நபர்.
என்னதான் இருந்தாலும், புலிக்கு பிறந்தது பூனையாகுமே என்பது போல ஓர் ஹீரோ என்ற இமேஜிலேயே வளர்ந்து வருகிறார் ஆர்யன் கான்.

இப்ராஹிம் கான்
சயப் அலிக்கானின் மகன் இப்ராஹிம் கான். வயது 15 தான் ஆனால், பார்பதற்கு இப்போதே பாலிவுட் ஹீரோ போலவும், விட்டால் அடுத்த ஆண்டே தனக்கான ஜோடியை பிடித்துவிடுவார் என்பது போலும் இருக்கிறார்.

ஆலியாஹ் காஷ்யப்
அனுராக் காஷ்யப்பின் மகள் தான் ஆலியாஹ் காஷ்யப். தற்போதே தன்னை லுக்கிலும், ஃபேஷன் சார்ந்தும் பெரிதாக மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் ஆலியாஹ் காஷ்யப். கண்டிப்பாக பாலிவுட்டில் ஆழமாக இவர் கால் பதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

குஷி கபூர்
போனி கபூர், ஸ்ரீதேவியின் அன்பு புதல்வி குஷி கபூர். அழகில் தாய்க்கு மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் குஷி கபூர். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீதேவியே இவருக்காக கதைகள் கேட்டார்.
ஆனால், 16 வயதினிலே ஸ்ரீதேவியின் புதல்விக்கு இப்போது தான் வயது பதினாறு ஆகிறது என்பதால், பள்ளி படிப்பை முடிக்கட்டும் என காத்திருக்கின்றனர்.

ஜான்வி கபூர்
போனி கபூர், ஸ்ரீதேவியின் அடுத்த மகள் ஜான்வி கபூர். குஷி கபூரை காட்டிலும் படுசுட்டியான, அழகானவராக திகழ்கிறார் ஜான்வி கபூர். பார்க்கலாம் யார் முதலில் களமிறங்க போகிறார் என.



Click it and Unblock the Notifications