For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்கர் வென்ற இந்த முதல் இந்தியர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

நமக்கு தெரிந்த வரை ஆஸ்கர் வென்ற இந்தியர் என்றால் அது ஏ.ஆர். ரகுமான் தான். கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் வென்றார் இசைப்புயல்.

ஆனால், இவருக்கு முன்னரே ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்னர் 55வது ஆஸ்கர் விருது விழாவில் ஆஸ்கர் விருதை வென்றார் ஓர் இந்தியர். அவர் தான் இந்த பானு அதய்யா. இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவார். பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

(குறிப்பு: பானு அதய்யா ஆஸ்கர் வென்ற காணொளிப்பதிவு கடைசி ஸ்லைடில் இணைக்கப்பட்டுள்ளது.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1950-கள் முதல்

1950-கள் முதல்

பானு அதய்யா கடந்த 1950-கள் முதல் ஏறத்தாழ நூறு படங்களுக்கும் மேல் இந்திய திரைத்துறை மற்றும் ஆங்கில படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஆஸ்கர்

ஆஸ்கர்

கடந்த 1982-ம் ஆண்டு வெளிவந்த காந்தி திரைப்படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை ஜான் மெல்லோ என்பவருடன் பகிர்ந்துக் கொண்டார். இதன் மூலமாக இவர் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

பாஃட்டா விருது

பாஃட்டா விருது

இதே காந்தி திரைப்படத்திற்காக பானு அதய்யா மற்றொரு உயரிய விருதான பாஃட்டா-வையும் வென்றார். பாஃட்டா என்பது பிரிட்டிஷ் அகாடமி ஃப்லிம் விருதுகள் ஆகும்.

இரண்டு தேசிய விருதுகள்

இரண்டு தேசிய விருதுகள்

லேக்கின் (Lekin...) மற்றும் லகான் திரைப்படங்களுக்காக இரண்டு முறை சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வேன்றுளார் பானு அதய்யா.

வாழ்நாள் சாதனையாளர்

வாழ்நாள் சாதனையாளர்

ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதை இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெற்றார்.

ஆஸ்கரை திருப்பிக் கொடுத்த பானு அதய்யா

ஆஸ்கரை திருப்பிக் கொடுத்த பானு அதய்யா

கடந்த 2012-ம ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வாங்கிய ஆஸ்கர் விருதை திருப்பி அகாடமிக்கே கொடுத்துவிட்டார் பானு அதய்யா. தனக்கு பிறகு இதை பத்திரமாக பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தை கூறி ஆஸ்கரை திருப்பிக் கொடுத்தார் பானு அதய்யா.

அகாடமி பெற்றுக் கொண்டது

அகாடமி பெற்றுக் கொண்டது

அதே போல கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பானு அதய்யா-வின் ஆஸ்கரை திருப்பி பெற்றுக் கொண்டது அகாடமி.

புத்தகம்

புத்தகம்

"தி ஆர்ட் ஆப் காஸ்ட்யூம் டிசைன்" என்ற புத்தகத்தை பானு அதய்யா கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டார். 2013-ம் ஆண்டு இதன் ஒரு பிரதியை தலாய் லாமாவிற்கு வழங்கினார் பானு அதய்யா.

2004

2004

2004-ம் வருடத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பதில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். கடைசியாக இவர் பணியாற்றிய படங்கள் லகான் (2001) மற்றும் ஸ்வதேஸ் (2004) போன்ற படங்கள் ஆகும்.

ஆஸ்கர் காணொளிப்பதிவு!

பானு அதய்யா ஆஸ்கர் வென்ற காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bhanu Athaiya The First Oscar Winner From India

Do you know about Bhanu Athaiya, Who was The First Oscar Winner From India, read here in tamil.
Desktop Bottom Promotion