For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஸ்லாம் - ஈமான் இடையே உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

|

"ஈமான்" எனும் இறை நம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்.

அல்லாவின் நூறு பெயர்களும் அதன் அற்புத அர்த்தங்களும்!!!

"இஸ்லாம்" என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்'-தை வழங்கிவருவதும், வசதி படைத்தவர்களுக்கு ஹஜ் செய்வதும் கடமையாகும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்.

இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

அல்லாஹ் ஒருவனே என்றும் அவனே அல்லாஹ் ஸூப்ஹானத்த்ஆலா என்று நம்புவது.

ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

அல்லாஹ்வின் படைப்பினங்களான மலக்குள் மீது நம்பிக்கை கொள்வது.

ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

அல்லாஹ்வின் தூதர்கள் மீது நம்பிக்கை கொள்வது

ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

அந்த தூதர்களுக்கு இறைவன் வேதங்களை அருளினான் என்றும் நம்புவது.

ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

மறுமையை நம்புவதும் (அதாவது நியயத்தீர்ப்பு நாள், சொர்க்கம் மற்றும் நரகம் இவற்றை நம்புதல்)

மேல் கூறியவற்றின் மீது நம்பிக்கைக் கொள்வதற்கு ‘ஈமான்' என்று பெயர். மேலே குறிப்பிடப்பற்றுள்ளவைகளில் ஏதேனும் ஒன்றிலாவது யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர் முழுமையாக ஈமான் கொண்டவராக மாட்டார்.

ஈமான் கடமைகள்

ஈமான் கடமைகள்

இறைவன் விதித்திருக்கின்ற விதியின் மீதும் நம்பிக்கை கொள்வது

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் என்ற வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக இறைவனுக்கு அர்பணித்தல்' மற்றும் அமைதி என்று பொருளாகும்.

இஸ்லாம் என்பது பின்வரும் அடிப்படை விஷயங்களில் அமைந்ததாகும்.

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

வணங்கப்படுவதற்கு தகுதியுடைய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் என்றும் மனதால் நம்பிக்கைக் கொண்டு வாயால் உறுதி மொழிவதாகும்.

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

குறிப்பிட்ட நேரங்களில் ஐந்து வேளைகளில் தொழுகைகளை நிறைவேற்றுதல்

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

ரமலானில் நோன்பு நோற்பது

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

வருடாந்திர ஜக்காத் செலுத்துவுது.

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

வசதியுள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது.

இஸ்லாம் கடமைகள்

இஸ்லாம் கடமைகள்

எனவே, "ஈமான்" என்பது, ஒருவர் உள்ளத்தால் மேலே குறிப்படப்பட்ட ஆறு விஷயங்களில் நம்பிக்கைக் கொள்வதாகும். மற்றும் "இஸ்லாம்" என்பது, அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக ஒருவரின் சொல் செயல்கள் அமைந்து அதன்படி ஐந்து கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Islam And Imman And Its Differences

Do you know what is Islam and Imman and its difference? read here in tamil.
Desktop Bottom Promotion