தியாகத்தைக் குறிக்கும் பக்ரித் பண்டிகையின் சடங்குகளும்.. மரபுகளும்..

Posted By: Staff
Subscribe to Boldsky

பக்ரித் அல்லது ஈத்-உல்-அஸா என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியில் உள்ள இரண்டாவது முக்கிய பண்டிகையாகும். முதலாவது பண்டிகையாவது ரம்ஜான் மாத கடைசியில் கொண்டாடப்படும் ஈத்-அல்-பிடர் ஆகும். தியாகத்தின் ஆர்வத்தை கொண்டாடுவதே பக்ரித் பண்டிகையாகும். ஹஜ் புனித யாத்திரையின் முடிவையும் இது குறிக்கும்.

இது உருவான கதையைப் பற்றி தெரிந்து கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இப்ராகிம் நபிகள் காலத்திற்கு நாம் செல்ல வேண்டும். அவரின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு சோதனை வைக்கும் விதமாக அவரின் மகனை பலி கொடுக்க அல்லா கட்டளையிட்டார். அவர் பலியை கொடுக்க சென்ற வேளையில் அவரை தடுத்து நிறுத்தினார் அல்லா. இப்ராகிம் அவர்களின் பக்தியை பார்த்து மகிழ்ந்த அல்லா, மாறாக ஒரு ஆட்டுக்குட்டியை பலி கொடுக்க சொன்னார். அது முதல், பக்ரித் என்பது தியாகம் மற்றும் அதன் ஆர்வத்தை குறிக்கும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களைக் கொண்டுள்ள பக்ரித் பண்டிகை, பக்தியும் கொண்டாட்டமும் கலந்த கலவையாகும். பக்ரித் பண்டிகையின் மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

பக்ரித் பண்டிகையின் மரபு படி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடை கட்டாயமாகும். தங்களுக்கான பக்ரித் ஆடைகளை குடும்ப உறுப்பினர்கள் முன்னராகவே வாங்கி வைத்து விடுவார்கள். புத்தாடை அணியும் சந்தோஷம் இல்லாமல் பக்ரித் இல்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில் இயங்குகிறது சில அறக்கட்டளைகள்.

தகவல் #2

தகவல் #2

பெண்களோ தங்கள் கைகளில் மருதாணி போட்டு கொண்டு சந்தோஷமாக நேரத்தை கழிப்பார்கள். பெரும்பாலும் இந்நேரத்தில் தள்ளுபடி விற்பனைகள் நடைபெறுவதால், குடும்பத்துடன் பெண்கள் கடைகளுக்கு சென்று விடுவார்கள். சில நாடுகளில், பல்வேறு மால்களும், ஷாப்பிங் மையங்களும் பண்டிகை கோலாகலத்தில் சேர்ந்து கொண்டு அதற்கேற்ப கடைகளை அலங்கரிப்பார்கள்.

தகவல் #3

தகவல் #3

பக்ரித் அன்று காலையில், தொழுகை புரிந்திட அனைவரும் மசூதிகளுக்கு செல்வார்கள். குறிப்பாக அவர்கள் தங்கள் மீது வாசனை திரவத்தை பூசிக் கொள்வார்கள். பக்ரித் அன்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

தகவல் #4

தகவல் #4

இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் பண்டிகையாக பக்ரித் விளங்குவதால், நான்கு கால் மிருகத்தை இஸ்லாமியர்கள் பலியிடுவார்கள். அந்த மிருகம் ஒருவரின் நிதி நிலையைப் பொறுத்து ஆடாகவோ, செம்மறியாடாகவோ அல்லது ஒட்டகமாகவோ இருக்கலாம். மிருகத்தைப் பலி கொடுப்பதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்யவில்லை என்றால் இந்த பலி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தகவல் #5

தகவல் #5

பலி கொடுத்ததால் கிடைத்த இறைச்சியை மூன்று பாகங்களாக பிரிப்பார்கள். ஒரு பங்கை அவர்களே வைத்துக் கொள்வார்கள், இரண்டாம் பங்கை நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்வார்கள், மூன்றாம் பங்கை ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்குவார்கள். ஒரு குடும்பத்தால் பலி கொடுக்க விலங்கை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால், ஏழை எளியவர்களுக்கு மட்டும் இறைச்சியை தானமாக கொடுக்கலாம்.

தகவல் #6

தகவல் #6

பக்ரித் பண்டிகையின் போது, தக்பீரை சத்தமாக ஓதுவார்கள். இது பண்டிகையின் மிக முக்கியமான அங்கமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Traditions And Rituals Of Bakrid

Bakrid or Id-ul-Azha is the second main celebration of the Islamic lunar calender. Bakrid has been observed as the celebration of sacrifice and its spirit. Bakrid has a set of rituals and traditions which makes the festival a mixture of piety and fun. Read on to know more about the traditions of Bakrid.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter