பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

மக்கள் முதன் முதலில் கதை கூற ஆரம்பித்த நாள் முதல் பேய் கதைகளுக்கு பஞ்சமில்லாமல் கூறி வருகின்றனர். இவ்வகையான விஷயங்களை மாக்பெத் முதல் பைபிள் வரை காண நேரிடலாம். இப்படி நாம் கேட்டு வந்த கதைகள் நமக்குள் ஊறி போய் விட்டது என்று கூட சொல்லலாம்.

உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

குறைந்தது நம் ஆன்மா அளவிலாவது பேய் பிசாசு பற்றிய எண்ணங்கள் பதிந்திருக்கும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விந்தையான நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த பேய் பிசாசு விஷயங்கள் கைகொடுக்கிறது.

மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!

இதனைப் பற்றிய சர்வேக்கள் பலவற்றை பார்க்கையில், மக்கள் தொகையில் 45% பேர்கள் பேய்கள், ஆவிகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. பேய்கள் மற்றும் ஆவிகளை சுற்றி நிலவும் வேடிக்கையான கதைகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

இப்டி இப்டியெல்லாம் சத்தம் கேட்குதா? அப்டீன்னா நீங்க பேயைப் பாத்துட்டீங்க!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல்: 1

தகவல்: 1

ஆவிகள் இரவு நேரத்தில் மிகவும் முனைப்புடன் செயல்படும். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வெளிச்சம் குறைவாக இருப்பதே. பேய் போன்ற உருவெளித் தோற்றங்களுக்கு இது மிகவும் தொந்தரவாக இருக்கும். இந்த காரணத்திற்காக தான் வீடு அமைதியாக இருக்கும் நேரத்தில் பேய் தொந்தரவுகளை உணர முடிகிறது.

தகவல்: 2

தகவல்: 2

ஆவிகள் பல விதங்களில் வெளிப்படும். அடர்த்தியான வெளிச்சம், இருட்டு நிழல்கள், பனி மூட்டங்கள், விந்தையான தெளிவற்ற உரு போன்றவைகள் இதில் அடக்கம். முழு உடலுடன் அவைகள் வெளிப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அவை மிகவும் சாத்தியமற்றது.

தகவல்: 3

தகவல்: 3

பொதுவாக குழந்தைகள் மற்றும் மிருகங்களின் கண்களுக்கு பேய்கள் தெரியுமாம். சில குழந்தைகள் பேய்களை தங்களின் கற்பனை நண்பர்களாக எடுத்துக் கொள்வார்கள்.

தகவல்: 4

தகவல்: 4

மெழுகுவர்த்திச் சுடர் திடீரென நீல நிறத்தில் மாறினாலோ அல்லது எந்தவொரு காற்றுமின்றி திடீரென அணைந்தாலோ, கண்டிப்பாக அங்கே பேய்கள் உள்ளது.

தகவல்: 5

தகவல்: 5

பொதுவாக சில ஆவிகள் உதவும் குணத்தை உடையது. அவை தீய சக்திகளில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கவும் செய்யும்.

தகவல்: 6

தகவல்: 6

பேய்கள் இருப்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் கூட அறிவியல் ரீதியான அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆற்றல் திறனை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. மாறாக அதன் உருவை மட்டுமே மாற்ற முடியும். அப்படியானால் நாம் இறந்த பிறகு நம் ஆற்றல் திறன் என்னவாகும்? ஒரு வேளை, அதுவே பேயாக உரு மாறுமோ?

தகவல்: 7

தகவல்: 7

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலானவர் கிடையாது. மரணத்திற்கு பின்பான வாழ்க்கை என்ற வடிவில் பேய்களைப் பற்றிய கருத்தமைவை பார்க்கையில், நாம் பண்டைய கால எகிப்திய வரலாற்றுக்கு செல்ல வேண்டும். அதன் படி, மரணம் என்பது ஒரு உருவத்தில் இருந்து மற்றொரு உருவத்திற்கு செல்லக்கூடிய மாற்றம் மட்டுமே என மக்கள் நம்பினர்.

தகவல்: 8

தகவல்: 8

வெள்ளை மாளிகையில் பல பேய்கள் உள்ளது என நம்பப்படுகிறது. குறிப்பாக அபிகைல் ஆடம்ஸ் என்ற இறந்து போன பெண், தன் துணிகளை தொங்கவிட்டிருந்த கிழக்கு அறை நோக்கி அடிக்கடி செல்வதை பலர் பார்த்துள்ளனர்.

தகவல்: 9

தகவல்: 9

வுட்ரோ வில்சன் அவர்கள் தலைமைப்பதவியில் இருந்த போது, டோலி மடிசன் புதைக்கப்பட்டிருந்த ரோஜா தோட்டத்தை தோண்டுமாறு தோட்டக்காரர்களை முதலில் வந்துள்ள பெண்மணி கட்டளையிட்டுள்ளார். வெளியே வந்த டோலியின் ஆவி, பேய் பயத்தை அந்த தோட்டக்காரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் ஒரு அடி கூட தோண்டாமல் அவர்கள் எல்லாம் தலைத் தெறிக்க ஓடியிருக்கிறார்கள். இந்த தோட்டம் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூத்து குவிந்துள்ளது.

தகவல்: 10

தகவல்: 10

ஆபிரகாம் லிங்கன் இறந்த பிறகும் கூட வெள்ளை மாளிகையை விட்டு செல்லவில்லை என ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள் கூறுகின்றனர். 70 வருட ஆண்டுகளுக்கு மேலாக, லிங்கன் அவர்களை ஒன்று பார்த்திருப்பதாக அல்லது உணர முடிவதாக ப்ரெசிடெண்ட்கள், முதல் பெண்மணிகள், விருந்தாளிகள் மற்றும் வெள்ளை மாளிகையின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அவர்களின் நிர்வாகத்தின் போது, உலகப்போரை தொடர்ந்து மிகப்பெரிய பேரழிவை நாடு சந்தித்து வந்த வேளையில், லிங்கனின் ஆவி அடிக்கடி காணப்பட்டது. ஒரு முறை நெதர்லாண்ட் நாட்டின் ராணி, வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாக வந்திருந்த போது, ஒரு நாள் இரவு தூங்கி கொண்டிருந்த போது, யாரோ தன் படுக்கையறை கதவை தட்டும் சப்தம் கேட்டு அவர் விழித்திருக்கிறார். கதவை திறந்த போது, நீளமான தொப்பியுடன் பாதையில் நின்று கொண்டிருந்த லிங்கனின் உருவத்தை அவர் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே மயங்கியும் விழுந்துள்ளார். நினைவு திரும்பிய போது தான் கீழே விழுந்து கிடந்ததை உணர்ந்துள்ளார். ஆனால் அந்த ஆவி எதுவும் அங்கே அப்போது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Fun Facts Around Ghosts And Spirits

In survey after survey, it becomes apparent that some 45 percent of the population believe in ghosts, spirits and paranormal activity. Here are some fun stories and beliefs around ghosts and spirits.
Story first published: Thursday, June 18, 2015, 10:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter