For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய புராணங்களில் இருந்து பிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள்!!!

By John
|

இந்திய புராணங்களைக் கட்டுக் கதை, மூட நம்பிக்கைகள், முட்டாள்த்தனம் என்று பலவாறாக கூறுவோர் உண்டு. ஆனால், நமது இந்திய புராணங்கள், பல உலக கண்டுப்பிடிப்புகளுக்கு மூலக்கருவாக இருந்திருக்கிறது. இதை, பல ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!

இதனால், மகாபாரதம், இராமாயணம் போன்ற சரித்திர காவியங்களில் கூறப்பட்டவை உண்மையாகவே பண்டைய காலத்தில் நடந்திருக்கலாம் என்றும். அவ்வாறு நடக்காத ஒன்றை பற்றி எழுதியிருந்தால் எப்படி அது இக்காலத்தில் சாத்தியமாக அமைந்திருக்கும் என்றும் வினாக்கள் மனதினுள் எழுகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புஷ்ப வாகனம் / புஷ்பக விமானம்

புஷ்ப வாகனம் / புஷ்பக விமானம்

பண்டைக் காலங்களில் கூறப்பட்டுள்ள பறக்கும் வாகனமான புஷ்பக வாகனம், பாதரசம் சுழல் என்ஜின் (Mercury Vortex Engine) மூலமாக இயக்கப்பட்டிருகலாம் என்று வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.

அணுகுண்டு

அணுகுண்டு

ராபர்ட் ஒப்பேன்ஹெய்மர் (Robert Oppenheimer), இவர் அணுகுண்டின் கண்டுப்பிடிப்பிற்கான பெருமைகள் யாவும் பகவத் கீதையையே சேரும் என்றுக் கூறியிருக்கிறார். இதில் இருந்து மூலக்கருவைக் கொண்டு தான் இது சாத்தியமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்

சில வருடங்களுக்கு முன்பு தான், நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் தான் இருக்கிறது, ப்ளுடோ நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்று கண்டுப்பிடித்தனர். ஆனால், நமது கோவில் வழிபாடுகளில், நவகிரகங்களில், சூரியனை சுற்றி எட்டு கோள்கள் இருப்பதை அப்போதே கூறி சென்றிருக்கின்றனர்.

கட்டற்ற சக்தி - Free Energy

கட்டற்ற சக்தி - Free Energy

ஆராய்ச்சியாளர் நிக்கோலா டெஸ்லா என்பவர், தனது கட்டற்ற சக்தியின் கூற்றுகள் சுவாமி விவேகானந்தரின்கூற்றுகள் மற்றும் இந்திய வேதங்களின் கூற்றுகளில் இருந்து கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளார்.

களரிப்பயட்டு

களரிப்பயட்டு

உலகின் பழம்பெரும் தற்காப்பு கலை என களரிப்பயட்டு கூறப்படுகிறது. இதை, பரசுராமர் மற்றும் அகத்திய முனியால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் எனும் சொல்

ஓம் எனும் சொல்

"ஓம்" சொல் ஓர் புனித ஒலியாக காணப்படுகிறது. மற்றும் உணர்வு நிலை வெளிப்பாட்டிற்கு இந்த ஒலிதான் காரணம் என்றும் நம்பப்படுகிறது.

கதிர்வீச்சு சக்தி

கதிர்வீச்சு சக்தி

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளில் கதிரியக்க சக்தியின் ஊடுருவல் இருப்பதால், பண்டைய காலங்களில் இந்தியாவில் கதிரியிக்க போர் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்களும், நிலையும் உருவாகியுள்ளது.

பரமசிவன்

பரமசிவன்

சிவனை நாம் கடவுளாக தொழுகிறோம். ஆனால், அவர் உண்மையில் ஓர் ஆதி யோகி. அதாவது யோகிகளுக்கு எல்லாம் முதலாமானவர். முதல் யோகி. அதற்கு பிறகு தான் அவர் கடவுளாக ஏற்கப்பட்டார்.

போதி தர்மன்

போதி தர்மன்

குங்-ஃபூ கலையை கண்டுப்பிடித்தவர் தென்னிந்தியாவின் பல்லவ மன்னர் போதி தர்மர் தான் என்பது ஏ.ஆர். முருகதாஸ் மூலமாக நாம் யாரும் அறிய காரணமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scientific Inventions From Indian Mythology

Do you know about the scientific inventions that long before said in Indian mythology? read here.
Desktop Bottom Promotion