ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர்கள் ஏன் ஒன்றுசேரக் கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்தியாவில் பருவமழை காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் என்பது ஓய்வெடுத்து புத்துணர்வு பெரும் மாதங்களாக கருதப்படுகிறது. இந்த மாதங்களின் போது உடலுறவு கொள்ள அனுமதிப்பதில்லை.

ஆடி மாத வெள்ளிக்கிழமையின் மகிமைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மரபுகளை ஆழமாக பின்பற்றாதவர்களுக்கு இது மூடநம்பிக்கையாக, முட்டாள் தனமாக இருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள சரியான காரணங்களை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவுக்கு தடை மற்றும் தம்பதிகளை பிரித்தல்

உடலுறவுக்கு தடை மற்றும் தம்பதிகளை பிரித்தல்

இந்த அமங்கலமான மாதத்தில் உடலுறவு கொள்வது உகந்ததல்ல. அதனால் தம்பதிகள், குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரித்து வைக்கப்படுவார்கள். ஆடியின் முதல் நாளை ஆடிப்பிறப்பு என கூறுவார்கள். அதற்கு முந்தைய நாள் புதிதாக திருமணமான பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் விருந்திற்கு அழைத்து, புதிய ஆடைகள் மற்றும் தங்க ஆபரணங்களை பரிசளிப்பார்கள். அந்த மாதத்தை அப்பெண் தன் பெற்றோரின் வீட்டில், தன் கணவனை பிரிந்து கழிக்க வேண்டும்.

வலுவிழந்த மாதங்கள்

வலுவிழந்த மாதங்கள்

ஓர் வருடத்தில் பருவமழை மாதங்கள் தான் மிகவும் வலுவிழந்த மாதங்களாகும். கொட்டும் மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தினால் சுலபமாக பல வியாதிகள் வந்தடையும். இந்நாட்களில் பருவமழை பலமாக இருக்கையில், தண்ணீர் மற்றும் காற்றின் வழியாக வியாதிகள் பரவும். அதனால் இந்த மாதத்தின் போது உடலுறவு கொள்வது பல பிரச்சனைகளையும், சிக்கல்களையும் உண்டாக்கும். அதனால் தான் இந்த மாதத்தில் திருமணங்கள், குடும்ப விழாக்கள் மற்றும் பிற சமுதாய சடங்குகள் நடைபெறுவதில்லை. மேலும் இந்த மாதத்தில் டானிக் மற்றும் சூப்களை குடித்து, உடல் ரீதியாகவும் சரி, ஆன்மீக ரீதியாகவும் சரி, தம்பதிகள் வலுவை பெற முயற்சிக்க வேண்டுமாம்.

ஆடியின் பண்பாட்டு முக்கியத்துவம்

ஆடியின் பண்பாட்டு முக்கியத்துவம்

பருவ மழைக்காலம், ஆடி என தமிழர்களாலும், கர்கிடகா என மலையாளிகளாலும் அழைக்கப்படும். இந்த மாதத்தில் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு இந்து மத திருவிழாக்களுக்கும், சடங்குகளின் கொண்டாட்டங்களுக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய தலைமுறைகளுக்கு மரபுரீதியாக வந்தடைந்துள்ள பழைய சடங்குகள், மரபுகளின் மீது மக்களுக்கு ஒரு இணைப்பை உண்டாக்கும். இந்த மரபுகளின் படி, இது அமங்கலமான மாதமாகும். அதனால் கடவுள்களுக்கு வழிபாடு நடத்தி, சடங்குகளை மேற்கொள்வது ஒரு கட்டாயமாகிறது.

சமயஞ்சார்ந்த முக்கியத்துவம்

சமயஞ்சார்ந்த முக்கியத்துவம்

இந்த மாதத்தின் தொடக்கத்தில், தன் பயணத்தை வட துருவத்தில் இருந்து தென் துருவத்தை நோக்கி சூரியன் துவக்கும். ஆடியின் தொடக்கம் தக்ஷினாயனத்தின் (தெற்கை நோக்கி பயணிக்கும் சூரியன்) தொடக்கத்தை குறிக்கும். அப்படியானால் வானலுக பொருட்களுக்கு (வானத்தின் கடவுள்) அது சூரிய அஸ்தமனமாகும். எனவே இம்மாதத்தில் ராமாயணம் மற்றும் பிற புனித நூல்களை படித்தும், தியானத்தில் ஈடுபட்டும் பொழுதை கழிப்பார்கள் மக்கள். மருந்தாக கருதப்படும் உணவுகள் மற்றும் பானங்கள், உடலையும் மனதையும் வலுவடையச் செய்யும். மேலும் சூரிய பகவானுக்கு விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.

கலாச்சார விளக்கம்

கலாச்சார விளக்கம்

"தம்பதிகளை பிரிப்பதற்கு பின்னணியில் பல்வேறு விஞ்ஞானபூர்வ காரணங்கள் உள்ளது", என இந்து மரபுகளின் அறிஞர் ஒருவர் கூறுகிறார். இந்த மாதத்தில் மணப்பெண் கர்ப்பமானால், மே மாதத்தின் முற்பாதியில் (சித்திரை) குழந்தை பிறக்கும். இது தான் வருடத்தின் மிக வெப்பமான மாதமாகும். இது தாய் மற்றும் சேய் என இருவருக்கும் தீங்கை விளைவிக்கலாம். மேலும் இந்த மாதத்தில் நிலவக்கூடிய பெரிய அம்மை, தட்டம்மை போன்ற பரவக்கூடிய நோய்களாலும் ஆபத்து ஏற்படலாம்.

வேளாண்மை முக்கியத்துவம்

வேளாண்மை முக்கியத்துவம்

மற்றொரு நடைமுறை காரணமாக கருதப்படுவது - இந்த மாதம் சாகுபடி செய்ய வேண்டிய மிக முக்கிய வேளாண்மை நடவடிக்கைக்கான காலமாகும். அதனால் உடலுறவு நடவடிக்கைகளின் மீது கவனத்தை சிதற விடாமல், மணப்பெண் தன் முழுமையான கவனத்தை வேளாண்மை செயல்களில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும். மேலும் பருவமழையால் ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் நிரம்பி வழியும். அதனால் பிற நடவடிக்கைகளில் ஆண்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல், தினமும் அதிகாலையில் எழுந்து தங்கள் கடமைகளை கவனிக்க தொடங்க வேண்டும்.

சமுதாய முக்கியத்துவம்

சமுதாய முக்கியத்துவம்

மனிதர்களின் சமுதாய வாழ்வில் ஒவ்வொரு திருவிழாக்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. இவ்வகையான சமூக தாக்கங்களுக்கு இந்து மதம் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. மேலும் இவ்வகையான சடங்குகளும், கொண்டாட்டங்களும் மார்கெட்டிங் செய்வதற்கான நிகழ்வுகளை உருவாக்கும். அறுவடை செய்யப்பட்ட கரும்பு மற்றும் பிற பயிர்கள் கடவுளுக்கு படைக்கப்படும். சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அவைகள் விற்கப்படும். இப்போதெல்லாம், பரிசுகள் மூலம் விற்பனை ஊக்குவிக்கப்படுவது ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

குறிப்பு

குறிப்பு

சமூக வாழ்க்கையின் ஒரு அங்கமே உடலுறவு. அது நம் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. மாறாக சிறந்த ஆரோக்கிய வாழ்விற்கு அது உதவிட வேண்டும். அதனால் இந்த மாதத்தில் உடலுறவுக்கு மரபு ரீதியாக விதிக்கப்பட்டுள்ள தடையை நியாயப்படுத்தலாம். ஆனால் பிறப்பு கட்டுப்பாடு அல்லது குடும்ப கட்டுப்பாடு தேவைப்படாமல் இருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மரபு ரீதியான பழக்கத்தை தென் இந்தியாவில் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why The Couples Are Separated In Aadi

In some regions newly married couples stay separate during Aadi month. Here are some reasons why married couples separated in the month of aadi. Take a look...
Story first published: Friday, July 31, 2015, 11:32 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter