For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Raksha Bandhan 2020: ரக்ஷா பந்தனுக்கு பின்னணியில் உள்ள புராண கதைகள்!!!

ராக்கி எனப்படும் ரக்ஷா பந்தன் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற பண்டிகையாகும். இதனை மிகுந்த ஆடம்பரத்துடன் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர்.

By Ashok CR
|

ராக்கி எனப்படும் ரக்ஷா பந்தன் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற பண்டிகையாகும். இதனை மிகுந்த ஆடம்பரத்துடன் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். மிகவும் மங்களகரமாக கருதப்படும் இந்த பண்டிகை, வட இந்திய பகுதிகளில் விசேஷ திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னணியிலும் வளமையான வரலாறு இருக்கிறது. அவை எப்படி திருவிழாவாக மாறியது என்பதற்கான வரலாறும் இருக்கும்.

மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சகோதரன் சகோதரி அன்பை கொண்டாட ரக்ஷா பந்தன்

சகோதரன் சகோதரி அன்பை கொண்டாட ரக்ஷா பந்தன்

ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாதுகாப்பின் பந்தத்தை கௌரவிக்கும் வகையில் பழங்காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையுடன் தொடர்புடைய புராணங்களை பற்றி பார்க்கலாமா...

கிருஷ்ணரும்.. திரௌபதியும்..

கிருஷ்ணரும்.. திரௌபதியும்..

இந்திய புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும், பாண்டவர்களின் மனைவியுமான திரௌபதி என்கிற பாஞ்சாலியும் புகழ்பெற்ற இரண்டு கதாபாத்திரங்கள் ஆவார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் துருபத் ராஜாவின் மகளான பாஞ்சாலி மீது மிகுந்த அன்பை கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவளை பெரும்பாலும் கிருஷ்ணா என்றே அவர் அழைத்து வந்தார். ராஜ சுயம்வரத்தின் போது, திரௌபதியை அர்ஜுனன் வென்ற போது, மிகுந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியது ஸ்ரீ கிருஷ்ணரே. அதற்கு காரணம் அவர் தான் அர்ஜுனனுக்கு குரு மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

சீர்-ஹரனின் போது திரௌபதியை பாதுகாத்த கிருஷ்ணர்

சீர்-ஹரனின் போது திரௌபதியை பாதுகாத்த கிருஷ்ணர்

புராணத்தின் படி, ஒரு சங்கராந்தி தினத்தின் போது, கரும்பு உண்ணும் போது கிருஷ்ணர் தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார். அவர் புண்ணை துடைக்க துணியை எடுக்க விரைந்தார் அவர் மனைவியான சத்யபாமா. துணிக்கட்டை எடுத்து வர தன் பணிப்பெண்ணை ருக்மிணி உடனடியாக அனுப்பி வைத்தார். இருப்பினும், இவற்றை பார்த்துக் கொண்டிருந்த பாஞ்சாலியோ தன் சேலையை கிழித்து, அதனை கிருஷ்ணரின் கைகளில் கட்டி விட்டார். அவளுடைய செய்கையால் மிகவும் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணர் அவளுடைய நற்செயலுக்காக அவளை ஆசீர்வதித்தார். கஷ்டம் வரும் நேரத்தில் அவளை காப்பாற்றுவதாக அவர் வாக்களித்தார். வெளிப்படையாக, அக்ஷ்யம் என்ற வார்த்தையை அவர் பிரயோகித்தார். அதற்கு "முடிவில்லா" என்பது அர்த்தமாகும். இப்படி தான் திரௌபதியின் சேலை முடிவில்லாமல் போனது. அதுவே சீர்-ஹரன் அத்தியாயத்தில், சபையின் முன்னாள் அவளுக்கு நடந்த அவமானத்தில் இருந்து அவளை காப்பாற்றியது.

ராணி கர்ணாவதியும்.. ஹுமாயுனும்..

ராணி கர்ணாவதியும்.. ஹுமாயுனும்..

ரக்ஷா பந்தன் பற்றிய மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றைப் பார்க்கலாமா? அது தான் ராணி கர்ணாவதி மற்றும் ஹுமாயுன் சம்பந்தப்பட்டது. கர்ணாவதி ராணி என்பவர் தன் கணவனான ரானா சங்கா அரசரின் மறைவிற்கு பிறகு, மேவாரின் ராணி பிரதிநிதியாக செயல்பட்டார். தன் மூத்த மகனான விக்ரம்ஜீத் பெயரில் அவர் அரசாட்சி புரிந்து வந்தார். இருப்பினும், குஜராத்தை சேர்ந்த பகதூர் ஷா மேவாரின் மீது இரண்டாம் முறை படையெடுத்த போது, ஹுமாயுன் பேரரசரின் உதவியை நாடி அந்நாட்டின் ராணி சென்றார். அதற்கு காரணம் பகதூர் ஷா ஏற்கனவே இள வயது விக்ரம்ஜீத்தை வீழ்த்தியுள்ளான்.

ராணி கர்ணாவதி ஹுமாயுனுக்கு ராக்கி அனுப்பி வைத்தார்

ராணி கர்ணாவதி ஹுமாயுனுக்கு ராக்கி அனுப்பி வைத்தார்

மேவாரை காப்பாற்ற ஹுமாயுனுக்கும் பேரரசருக்கும் ராணி கர்ணாவதி ஒரு கடிதம் எழுதினர். அதனால் அவரிடம் பாதுகாப்பு கோர அவருக்கு ஒரு ராக்கியையும் அனுப்பி வைத்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஹுமாயுனின் தந்தையான பாபர் தான் ரானா சங்கா அரசரை வீழ்த்தியவர். இதனால் 1527-ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக இருந்த ராஜ்புட் ராணுவத்தத்துடன் நேசக்கரம் நீட்டப்பட்டது. பாதுகாப்பு கோரி தன்னிடம் ராணி வந்துள்ளதால், தன் ராணுவ முகாமை விட்டு மேவாரை நோக்கி பேரரசர் சென்றார். இருப்பினும், அவரால் சரியான நேரத்தில் அங்கே செல்ல முடியவில்லை. அதனால் சித்தூரில் ராஜ்புட் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். ராணி கர்ணாவதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பகதூர் ஷா படைகளை நிறுத்திய ஹுமாயுன், விக்ரம்ஜீத்திடம் அரசாங்கத்தை மீட்டுக் கொடுத்தார்.

எமனும் யமுனாவும்

எமனும் யமுனாவும்

யமுனை நதி, மரணத்தின் கடவுளான எம தர்மனுக்கு ராக்கி கட்டியது என புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கூறுகிறது. அவளின் செய்கையால் சந்தோஷப்பட்ட அவர், அவளுக்கு சாகா வரத்தை அளித்தார். கூடுதலாக, தங்கையிடம் இருந்து ராக்கி பெற்று அவளுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் சகோதரனுக்கு சாகா வரம் கிடைக்கும் என எமன் அறிவித்தார்.

ரக்ஷா பந்தனும்.. சந்தோஷி மாதாவின் பிறப்பும்..

ரக்ஷா பந்தனும்.. சந்தோஷி மாதாவின் பிறப்பும்..

அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் கடவுள் தான் சந்தோஷி மாதா. இவர் விநாயகரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தெய்வத் தாயின் தனித்துவமான அவதாரம் இவர். ரக்ஷா பந்தன் தினத்தன்று, விநாயகரின் தங்கையான ஜோதி, அவரை காண அங்கே வந்த போது பிறந்தவர் தான் சந்தோஷி மாதா. தனக்கு ராக்கி கட்ட ஜோதி வந்த போது அழகிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் விநாயகர். இந்த விழாவின் மீது ஆர்வத்துடன் இருந்த விநாயகரின் புதல்வர்களான லாபா மற்றும் க்ஷேமா அதில் பங்கு கொள்ள விரும்பினார்கள். அவர்களின் தாய்மார்கள் ரித்தியும் சித்தியும் ரக்ஷா பந்தனை பற்றி அவர்களுக்கு விளக்கினார்கள். விநாயகருக்கு ஜோதி ராக்கி கட்டுவதை கண்ட அவர்கள், தங்களின் தந்தை தன் சகோதரியை நல்ல எதிர்காலம், சந்தோஷம் மற்றும் இன்பம் பெற வாழ்த்தியதை கவனித்தார்கள்.

சந்தோஷி மாதாவிற்கு அப்பெயர் வந்தது எப்படி?

சந்தோஷி மாதாவிற்கு அப்பெயர் வந்தது எப்படி?

இந்த முழு சடங்கின் மீது ஈர்க்கப்பட்ட லாபா மற்றும் க்ஷேமா தங்களுக்கும் ஒரு தங்கை வேண்டும் என விரும்பினார்கள். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடிய விநாயகரால், தன் புதல்வர்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. அவர்களின் ஆசையை நிறைவேற்ற, விநாயகர் மற்றும் ரித்தி-சித்தியிடம் இருந்து ஒரு தெய்வீக ஒளி தோன்றியது. அது ஒரு சிறிய குழந்தை வடிவத்தை பெற்றது. இப்படி பிறந்தவர் தான் சந்தோஷி மாதா. தேவர்களும் முனிவர்களும் இந்த குழந்தையின் மீது அருளை பொழிந்தனர். அவள் தன் சகோதரர்களுக்கு ராக்கியை கட்டினாள். சகோதரர்களிடம் வெல்லமும் பருப்புகளும் மட்டுமே இருந்ததால், அதையே அவளுக்கு வழங்கினார்கள். வெறும் வெல்லம் மற்றும் பருப்புகளை மட்டுமே கொண்டு சந்தோஷமாக இருந்த இந்த சிறிய பெண்ணை கண்ட நாரத முனி அவளுக்கு சந்தோஷி என பெயரிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raksha Bandhan 2020: Mythological Tales Behind Raksha Bandhan

Every festival celebrated in India has a rich history from it first started and how it came to be celebrated as a festival. The festival of Raksha Bandhan is being celebrated to honour the bond of love and protection between brothers and sisters since the days of yore. This year Raksha Bandhan will be celebrated on 29th August 2015. Let us explore the legends associated with this festival.
Desktop Bottom Promotion