Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
கே.பி., கமல், ரஜினி - ஒரு சகாப்தம்!!!
கமல், ரஜினி கே.பாலச்சந்தர் அவர்களின் திரையுலக பிள்ளைகள் என்று கூறுவது மிகையாகாது. எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தான் சிறந்தவராக இருக்க முடியும். இயக்கத்தில் கூட அதே போல தான். சிலர் ஷங்கர் போல பிரம்மாண்டத்தை மட்டும் தான் கையாள முடியும். மற்றும் சிலர் ரவி குமார் போல கமெர்சியல் படம் தான் கையாள முடியும்.
எந்த வகையான படமாக இருந்தாலும் அதில் "ஸ்டைல்" அல்லது "கிளாஸ்" இந்த இரண்டு வகை நடிப்பு மட்டும் தான் உள்ளடங்கும். இவை இரண்டையும், இந்த இரு துருவங்களையும் தனது இரண்டு கைகளால் இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் தான் கே.பி., தமிழ் திரையுலகில் ரஜினிக்கு சமமாக ஸ்டைலோ, கமலுக்கு நிகராக கிளாஸோ இனி யாராலும் நடிக்க இயலாது.
சிவாஜிக்கு எப்படி ஒரு பீம் சிங்கோ, அப்படி தான் ரஜினி, கமலுக்கு கே.பி அவர்கள். இந்த தலைமுறை இவர்களை பற்றி அறிந்திருக்காது என சொல்வது முட்டாள்தனம். ஏனெனில், இந்த தலைமுறையினருக்கு சினிமா நன்கு பரீட்சயம். எனவே, இவர்கள் மூவரின் கடந்து வந்த பாதையும், சில புகைப்படங்களும்...

இரு துருவம்
இயக்குனர் சிகரத்துடன் ஸ்டைல் + கிளாஸ் இரு துருவங்களின் பயிற்சி வகுப்பு காலங்கள்.

80'களின் அரசர்கள்
80'களில் இவர்களது ராஜ்ஜியம் தான் தமிழ் திரையுலகை ஆண்டது என்பது நிதர்சனம்.

தில்லு முள்ளு
தில்லு முள்ளு படப்பிடிப்பு தளத்தில்

முத்து விழா
முத்து படத்தின் வெற்றி விழாவில் ரஜினி மற்றும் கே.பி

அவ்வை சண்முகி
அவ்வை சண்முகி வெற்றி சந்திப்பில் கமல், ரஜினி, கே.எஸ். மற்றும் பிரபு உடன் இயக்குனர் சிகரம்.

பாட்ஷா!!!
பாட்ஷா படப்பிடிப்பு தளத்தில் கே.பி, ரஜினி, கமல், செந்தில் மற்றும் நெப்போலியன்.

"புன்னைகை மன்னன்"கள்
ஓர் திரைப்பட விழாவில் ரஜினி, கமல் மற்றும் கே.பி

கேள்வி பதில்
தமிழ் திரையுலக கொண்டாட்டத்தின் போது கே.பி அவர்கள் கேள்வி கேட்க ரஜினி பதில் கூறிய அற்புத நிகழ்வு...

வைரமுத்து புத்தக வெளியீட்டு விழா
கவிஞர்.வைரமுத்து அவர்களின் புத்துக வெளியீட்டு விழாவின் போது.....

பொது நிகழ்ச்சி
ஓர் திரைப்பட நிகழ்ச்சியின் போது கே.பி. அவர்களும் சூப்பர் ஸ்டாரும்...

குரு சிஷ்யர்கள்
ஒரு மகிழ்வான தருணத்தில் குருவுடன் சிஷ்யர்களின்...

உத்தம வில்லன்
கே.பி அவர்கள் கடைசியாக நடித்த உத்தம வில்லன் பட வேலைகளுக்கு முன் ஓர் சந்திப்பின் போது...

ஒரு சகாப்தம்!!!
சிவாஜிக்கு எப்படி ஒரு பீம் சிங்கோ, அப்படி தான் ரஜினி, கமலுக்கு கே.பி அவர்கள். இப்படி ஒரு சகாப்தம் மீண்டும் வாய்க்கப்படுமா என்பது கேள்வி குறிதான்.



Click it and Unblock the Notifications
