வீரப்பாண்டிய கட்டபொம்மன் கைது - தெரிந்ததும், தெரியாததும் அக்டோபர் 1!!

Posted By:
Subscribe to Boldsky

வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாலும், அரிய கண்டுப்பிடிப்புகளாலும், துயர சம்பவங்களாலும் நிறைந்துள்ளன. எண்ணற்ற போர், அவ்வப்போது விடுதலை, வெடிகுண்டு தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் என மனிதர்களின் வாழ்க்கையை பல வகையில் சிதைவு ஏற்படுத்திய தருணங்கள் ஏராளம்.

அந்த வகையில் இன்றைய தினமான அக்டோபர் 1-ல் வரலாற்றில் என்னெவெல்லாம் நடந்திருக்கிறது. அவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்னென்ன? பாதிப்புகள் என்னென்ன? என்று இனிக் காணலாம்.....

முக்கிய குறிப்புகள்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் கைது
  • இந்திய அஞ்சல் துறை துவக்கம்
  • "வால்ட் டிஸ்னி" அமைக்கப்பட்டது
  • முதல் மின்விளக்கு தொழிற்சாலை துவக்கம்
  • டைம்ஸ் கட்டடம் தகர்க்கப்பட்டது
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1799

1799

புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16, 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

1814

1814

நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.

1843

1843

நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது. நியூசு ஆப் த வேர்ல்ட் என்பது இங்கிலாந்தில் 1843 முதல் 2011 வரை வெளியான தேசிய சிறு செய்தித்தாளாகும். இது ஆங்கில மொழியில் அதிக விற்பனை செய்யப்பட்ட செய்தித்தாளாகும்.

1854

1854

இந்திய அஞ்சல் துறை துவங்கப்பட்டது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். 2001-ம் ஆண்டின் கணக்குப்படி, இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

1869

1869

உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1880

1880

இந்தியாவுடனான காசுக்கட்டளை (Money Order) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1880

1880

முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1892

1892

இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1910

1910

லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1931

1931

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இருக்கும் உலக புகழ்பெற்ற ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

Image Courtesy

1953

1953

தென்னிந்திய மாநிலமான ஆந்திரா உருவாக்கப்பட்டது. இப்போது தெலுங்கானா, ஆந்திரா என் இரண்டாக பிரிந்திவிட்டது. ஐதராபாத் பொது தலைநகராக இப்போது விளங்கி வருகிறது. ஆயினும், ஆந்திராவிற்கென தனி தலைநகராக அமராவதி கட்டமைப்பட்டு வருகிறது.

1969

1969

கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது. லண்டன், நியூயார்க் நகர்களுக்கு இடையே கொன்கோர்ட் சேவை நடந்து வந்தது. சாதாரண விமானத்தின் பயன் நேரத்தின் பாதியில் இது சென்றடைந்துவிடும். மொத்தம் 20 கான்கோர்டு வானூர்திகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஜூலை 25, 2000 அன்று நடைபெற்ற விபத்தின் காரணமாகவும் மற்றும் சில காரணங்களுக்காகவும் கான்கோர்டு பயணிகள் போக்குவரத்து 26-நவம்பர்-2003 உடன் நிறுத்தப்பட்டது. கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.

Image Courtesy

1971

1971

ஏறத்தாழ 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட உலகின் மாபெரும் பொழுபோக்கு, கேளிக்கைகளுக்கு புகழ் பெற்ற "வால்ட் டிஸ்னி" உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.

1982

1982

சோனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.

2001

2001

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2006

2006

பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

பிறந்தநாள்!!!

பிறந்தநாள்!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்கள் பிறந்த தினம் இன்று (1927)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

History On October 1

Incidents and Inventions happened on October 1 in history, Take a look.
Story first published: Thursday, October 1, 2015, 10:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter