அழகை அதிகரிக்க இப்படியெல்லாமா செய்வாங்க.. நினைச்சாலே என்னவோ போல இருக்குது போங்க?

Posted By:
Subscribe to Boldsky

அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், தங்கள் அழகை அதிகரிக்க ஸ்பாவிற்கு அடிக்கடி செல்வார்கள். அதுமட்டுமின்றி, அழகை அதிகரிக்க எத்தனை சிகிச்சைகள் வந்தாலும், அதனை ஆண்களை விட பெண்கள் நிச்சயம் முயற்சி செய்துவிடுவார்கள். அதில் ஒன்று தான் ஸ்பா.

இத்தகைய ஸ்பா சிகிச்சையில் விசித்திரமான பல சிகிச்சைகள் உள்ளன. அதில் விந்தணுவைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது, இரத்தத்தைக் கொண்டு அழகை கூட்டுவது என்று இன்னும் பல உள்ளன. முக்கியமாக இத்தகைய சிகிச்சைகளைப் பிரபலங்கள் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள். அவற்றில் கிம் கர்தஷியன் முகத்தின் பொலிவை அதிகரிக்க இரத்தத்தைக் கொண்டு செய்யப்படும் வாம்பயர் ஃபேஷியல் செய்துள்ளார்.

சுவாரஸ்யமான வேறு: சின்னப் புள்ளையா இருந்தப்ப தெருவுல இந்த விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கீங்களா பாஸ்...?

இங்கு உலகில் செய்யப்படும் விசித்திரமான சில ஸ்பா சிகிச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த சிகிச்சைகளைப் பார்த்தால், நீங்கள் அசந்துப்போய்விடுவீர்கள். சரி, அந்த சிகிச்சைகள் என்னவென்று பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாம்பயர் ஃபேஷியல்

வாம்பயர் ஃபேஷியல்

இந்த ஃபேஷியலானது இரத்தத்தைக் கொண்டு செய்யப்படுவதாகும். இந்த ஃபேஷியல் செய்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கலாம். இதனைத் தான் கிம் கர்தஷியன் முயற்சித்துள்ளார்.

பீர் மசாஜ்

பீர் மசாஜ்

உங்களுக்கு பீர் ரொம்ப பிடிக்குமா? அப்ப இந்த பீர் மசாஜ் ட்ரை பண்ணுங்க. பீர் கூந்தலுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் தான் சிறந்தது. இதுவும் உலகில் உள்ள ஸ்பா சிகிச்சையில் விசித்திரமானவைகளுள் ஒன்று. மேலும் இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் இதனை செய்தால், உடலுறுப்புக்கள் நன்கு சீராக செயல்படுவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.

நத்தை மசாஜ்

நத்தை மசாஜ்

உலகில் செய்யப்படும் வித்தியாசமான ஸ்பா சிகிச்சையில் நத்தை மசாஜ் ஒன்றாகும். இந்த சிகிச்சை தான் உலகில் உள்ள நிறைய பெண்கள் விரும்பி மேற்கொள்கிறார்கள். இந்த சிகிச்சையின் போது நத்தையை உடல் முழுவதும் வைத்துவிடுவார்கள். அப்படி வைக்கும் போது நத்தையில் இருந்து வெளிவரும் ஜெல் போன்ற கோழையானது சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்குமாம். மேலும் இந்த சிகிச்சையை குளிர்காலத்தில் தான் அதிகம் மேற்கொள்வார்களாம்.

மீன் பெடிக்யூர்

மீன் பெடிக்யூர்

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு ஸ்பா சிகிக்சை தான். மேலும் இந்த சிகிச்சையை தற்போது பெண்கள் மாதம் ஒரு முறை செய்து வருகிறார்கள். இப்படி மீன் பெடிக்யூர் செய்வதால், கால்களில் உள்ள இறந்த செல்களை மீன் உட்கொண்டு, பாதத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியுமாம்.

நஞ்சுக்கொடி ஃபேஷியல்

நஞ்சுக்கொடி ஃபேஷியல்

நாம் எத்தனையோ ஃபேஷியல்களை செய்திருப்போம். ஆனால் நஞ்சுக்கொடி கொண்டு ஃபேஷியல் செய்யலாம் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தாயையும், சிசுவையும் இணைக்கும் ஒரு பகுதியான நஞ்சுக்கொடியைக் கொண்டும் மேற்கத்திய மக்கள் ஃபேஷியல் செய்து வருகிறார்கள். இவற்றை மிகவும் மோசமான ஸ்பா சிகிச்சைகளில் ஒன்று என்றும் சொல்லலாம்.

விந்தணு சிகிச்சை

விந்தணு சிகிச்சை

இருப்பதிலேயே அறுவெறுக்கத்தக்க ஸ்பா சிகிச்சை என்றால் அது காளையின் விந்தணு கொண்டு செய்யப்படும் சிகிச்சை தான். இந்த சிகிச்சையை மேற்கத்திய மக்கள் கூந்தல் வறட்சியை தடுக்க மேற்கொள்வார்கள். ஏனெனில் காளையின் விந்தணுவில் உள்ள ஒரு பொருளானது கூந்தல் வறட்சியை தடுப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்குமாம். என்ன கொடுமை சார் இது...?

சிறுநீர் ஃபேஷியல்

சிறுநீர் ஃபேஷியல்

என்ன நம்ப முடியவில்லையா? ஆமாங்க, உலகில் உள்ள சில மக்கள், மாட்டின் கோமியத்தைக் கொண்டு ஃபேஷியல் செய்கிறார்கள். இதனால் சருமம் பொலிவடையுமாம்.

பறவைகளின் கக்கா

பறவைகளின் கக்கா

முகத்தில் பருக்களின் தொல்லை தாங்க முடியவில்லையா பறவைகளின் கக்காவை முகத்தில் தடவி பாருங்கள். ஏனெனில் பறவைகளின் கக்காவை முகத்தில் தடவினால், சரும பிரச்சனைகளான முகப்பரு, தழும்புகள் போன்றவை நீங்கிவிடுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Spa Treatments Around The World

If you are wondering what are the weird spa treatments around the world we are talking about. Here is your chance to take a look at some of the beauty treatments women indulge into right through the year which gives them clear skin. You will be shocked!
Story first published: Wednesday, January 29, 2014, 17:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter