For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மகளிர் தினத்தன்று ரங் தேவின் புதிய திட்டத்தில் சேருங்களேன்...!

By Super
|

ரங் தே (www.rangde.org) என்பது ஒரு இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற தொழில் தொடங்குவோரை ஆதரிக்கும் வண்ணம் குறைந்த செலவில் கடன்களை வழங்குகிறது. மேலும் ரங் தே நிறுவனம், கிராமப்புற தொழில் தொடங்குவோர் தங்களது வறுமையை கடந்து, பொருளாதார மற்றும் சமூகத்தில் வலுவுடன் இருக்க ஆதரவளிக்கின்றனர். கடந்த 6 வருடத்தில் மட்டும், ரங் தே 28,000-த்திற்கும் மேல் குறைந்த செலவில் கடன்களை வழங்கியதோடு, இதுவரை 20 கோடி வரை கொடுத்துள்ளது.

உலக மகளிர் தினத்தையொட்டி, ரங் தே நிறுவனமானது, குறைந்த செலவில் கடன்களை வழங்கி, வறுமைக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களது வறுமையை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி பெற 'Sisters in Arms' என்னும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

Sisters in Arms – Rang De’s Women’s Day Initiative

இதுவரை ரங் தே நிறுவனத்தில் 27,000 கிராமப்புற தொழில் தொடங்குவோர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர். ஆனால் இதன் மூலம் இன்னும் நிறைய பேர் பலன்களை பெற வேண்டும். ஆகவே ரங் தே நிறுவனத்துடன் இணைந்து, இந்த மகளிர் தினமானது இன்னும் சிறப்பான தினமாக இருக்க, ரங் தே அமைப்பில் ரூ.100 செலுத்தி சேர்ந்து சமூக முதலீட்டாளராகுங்கள். இதன் மூலம் கிராமப்புற மக்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

ரங் தே நிறுவனத்தில் சேர்ந்து, ஆதரவளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், [email protected] என்னும் மெயிலைத் தொடர்பு கொள்ளுங்கள்.

English summary

Sisters in Arms – Rang De’s Women’s Day Initiative

As a part of its ‘Sisters in Arms’ initiative, Rang De is celebrating this International Women’s Day with a special women-centric campaign that salutes our nation's women.
Desktop Bottom Promotion