For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரம்பரிய காதலர் தின பரிசுப் பொருட்களுக்கான அர்த்தங்கள்!!!

By Babu
|

இவ்வுலகில் காதல் செய்யும் அனைவரும் சிறப்பாக கொண்டாப்படும் தினமான காதலர் தினமானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தினத்தில் காதலர்கள் அனைவரும் தங்கள் துணைக்கு பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் உலகில் உள்ள காதலர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒருசில பொருட்களை காதலர் தினத்தன்று வாங்கிக் கொடுப்பார்கள்.

அப்படி காதலர் தினத்தன்று வாங்கி கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மையிலேயே காதலர் தினத்தன்று தங்கள் துணைக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்லெட், ரோஜாப்பூ, கார்டு போன்ற பொருட்களை பொதுவாக வாங்கிக் கொடுப்பார்கள்.

சுவாரஸ்யமான வேறு: காதலர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!

ஏனெனில் காலம் காலமாக காதலர் தினம் என்றால் நம் முன்னோர்கள் இவற்றைத் தான் வாங்கிக் கொடுத்து வந்தார்கள் என்பதால் தான். ஆனால் அப்படி வாங்கிக் கொடுக்கும் பொருட்களுக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளது என்று இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, காதலர் தினத்தன்று காதலர்கள் வாங்கி கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள அர்த்தங்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லெட்டுகள்

சாக்லெட்டுகள்

காதலர் தினத்தன்று காதலர்கள் சிலர் ஒருவருக்கொருவர் சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுப்பார்கள். இப்படி சாக்லெட் வாங்கிக் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? அது என்னவென்றால், சாக்லெட் பாலுணர்ச்சியைத் தூண்டக்கூடிய உணவுப் பொருள். எனவே இதனை வாங்கிக் கொடுத்தால், அன்றைய நாள் ரொமான்ஸாக இருக்கும் என்பது தான்.

ரோஜாப்பூ

ரோஜாப்பூ

காதலின் சின்னமாக இருப்பது தான் ரோஜாப்பூ. அதிலும் சிவப்பு நிற ரோஜாப்பூ தான் காதலைக் குறிக்கும். ஏனெனில் சிவப்பு நிற ரோஜாப்பூவானது, இதயத்தின் நிறத்தைக் கொண்டிருப்பதால் தான். எனவே இதனைக் கொடுப்பதால், இருவரும் இதயத்தைப் பரிமாற்றிக் கொள்வதாக அர்த்தம்.

டெடி பியர்

டெடி பியர்

காதலர் தினத்தன்று சில காதலர்கள் டெடி பியரை பரிசாகக் கொடுப்பார்கள். இந்த டெடி பியர் எதைக் குறிக்கிறது என்றால், பொதுவாக டெடி பியர் மொசுமொசுவென்று மென்மையாக, அதைக் கட்டிப்பிடித்தால் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். ஆகவே இதனை வாங்கிக் கொடுக்க, அந்த டெடி பியரானது நீங்களாக சித்தரிக்கப்பட்டு, உங்கள் துணை கவலையுடன் இருக்கும் போது, அவர் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

கார்டுகள்

கார்டுகள்

பெரும்பாலான காதலர்கள் தங்கள் துணைக்கு கார்டுகளை வாங்கிக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். சரி, இது எதைக் குறிக்கிறது என்று தெரியுமா? அது வேறொன்றும் இல்லை, கார்டுகளை வாங்கி கொடுப்பதால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த கார்டுகளில் உள்ள வாக்கியங்களானது அவரை நீங்கள் எந்த அளவு காதலிக்கிறீர்கள், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை உணர்த்துமாம். குறிப்பாக வெளியூர்களில் இருக்கும் காதலர்கள், துணையை பார்க்க முடியாத தருணத்தில் இந்த மாதிரியான கார்டுகளை அனுப்பி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

காதல் கடிதங்கள்

காதல் கடிதங்கள்

காதல் கடிதங்கள் கூட காதலர் தினத்தன்று கொடுக்கப்படும் பரிசுகளுள் ஒன்றாகும். இப்படி காதல் கடிதங்கள் எழுதும் போது, உங்கள் துணைக்கு நீங்கள் அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை நன்கு வெளிப்படுத்தும் என்பதற்காகத் தான் எழுதுகிறார்கள். சொல்லப்போனால், மற்ற பொருட்களை விட, இருப்பதிலேயே இது தான் மிகவும் விலைமதிப்பு மிக்கது என்று சொல்லலாம்.

இதய வடிவ செயின்

இதய வடிவ செயின்

இரண்டு இதயம் ஒன்றாக சேரும் போது கிடைக்கும் உணர்வு மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படி இரண்டு இதயமும் எப்போதும் ஒன்றாகி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர், தங்கள் துணைக்கு காதலர் தினத்தன்று இதய வடிவ செயின் வாங்கி கொடுப்பார்கள். எனவே நீங்கள் கூட இந்த வருடம் இந்த மாதிரி ட்ரை செய்யலாமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meaning Of Traditional Valentine's Day Gifts

Today, Boldsky shares with you the meaning of traditional Valentine's Day gifts which couples buy. We are sure that this year, you will surely give your partner one of these traditional Valentine's gifts. These are some of the traditional Valentine's Day gifts you would give your partner. And also know the meaning behind it:
Story first published: Wednesday, February 12, 2014, 13:13 [IST]
Desktop Bottom Promotion