For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபலங்கள்!!!

By Babu
|

இன்றைய காலத்தில் தற்கொலை என்பது கேக் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. எந்த ஒரு கஷ்டம் வந்தாலும், உடனே தற்கொலைக்கு முற்படுகின்றனர். அதிலும் தற்போது நிறைய மக்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். ஒருவருக்கு மன இறுக்கமானது வந்துவிட்டால், அந்த மன இறுக்கமானது தற்கொலை செய்யும் அளவில் ஒருவரை தள்ளிவிடும்.

மிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள்!!!

அப்படித் தான் பல ஹாலிவுட் பிரபலங்களுள் சில மன இறுக்கத்தினால் தற்கொலைக்கு முற்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனையின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இங்கு தற்கொலைக்கு முயன்ற சில பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரூ பேரிமோர்

ட்ரூ பேரிமோர்

பைபோலார் டிஸ்ஆர்டரால் ட்ரூ பேரிமோர் பெரும் அவஸ்தைப்பட்டார். மேலும் இவர் போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக் கொள்வதைத் நிறுத்தியப் பின்னர், மன இறுக்கத்திற்கு ஆளாகி, இவர் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயற்சித்தார். இருப்பினும் சரியான சிகிச்சையின் மூலம் இவரை காப்பாற்றிவிட்டார்கள்.

ஓவன் வில்சன்

ஓவன் வில்சன்

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் ஓவன் வில்சன் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு, கைகளை அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதற்கு காரணமும் மன இறுக்கம் தான்.

ஹாலே பெர்ரி

ஹாலே பெர்ரி

ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலே பெர்ரி கார்பன் மோனாக்ஸைடு விஷத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஏனெனில் இவரும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதியில் இவர் தான் செய்தது தவறு என்று புரிந்து கொண்டு தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

எலிசபெத் டெய்லர்

எலிசபெத் டெய்லர்

மிகவும் அழகான பெண்ணான எலிசபெத் டெய்லர், தனது நெருங்கிய நண்பர்களின் மரணத்திற்கு பின் போதைப்பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, ரிச்சாட்டு பர்டன் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் ரிச்சாட்டு மற்றும் எலிசபெத் பிரிய, அந்த பிரிவைத் தாங்கிக் கொள்ளாத எலிசபெத், தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்டார். இருப்பினும் எப்படியோ அவரை காப்பாற்றிவிட்டார்கள். பின் பர்டன் மற்றும் எலிசபெத் தங்களது துணைகளை விவாகரத்து செய்துவிட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இளவரசி டயானா

இளவரசி டயானா

இளவரசி டயானா பெரும்பசி உளநோயினால் அவஸ்தைப்பட்டதால், தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அவரது சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ மோர்டன் என்பவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் 5 முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூடி கார்லேண்ட்

ஜூடி கார்லேண்ட்

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஜூடி கார்லேண்ட் அதிகப்படியான வேலைப்பளுவினால் மன இறுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் 1947 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி பைரேட் என்னும் படப்பிடிப்பின் போது, ஜூடி தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அப்போதே அங்குள்ளோர் அவரைக் காப்பாற்றிவிட்டனர்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ் கூட தற்கொலைக்கு இரண்டு முறை முயற்சித்துள்ளார். ஏனெனில் விவாகரத்து நடந்ததால், அவர் மன இறுக்கத்திற்கு ஆளாகி, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இருப்பினும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தற்போது எந்த ஒரு தவறான முடிவும் எடுக்காமல் உள்ளார்.

எமினெம்

எமினெம்

புகழ்பெற்ற அமெரிக்க ராப் கலைஞரான எமினெம் கூட தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். ஏனெனில் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இருந்தால் தான். எனவே இவர் டைலனோலை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who Attempted Suicide

Suicide – the attempt to take one’s own life is the manifestation of clinical depression in most people. People prone to Suicidal thoughts and tendencies are generally under a lot of a stress with little or no outlet for their emotional turmoil; this brings us to the numerous suicides committed over the years by celebrities. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more