சாவதற்கு முன்பு விளையாடி பார்க்க வேண்டிய விளையாட்டுக்கள்!!!

By Ashok CR

வீர தீர விளையாட்டுக்களை விளையாடுவதால், உடலில் அட்ரீனலின் ஹார்மோன் சுரக்கும் குதூகலத்தை அனுபவிக்க ஆண்களில் பலரும் விரும்புவர். இந்த உலகத்தில் பல்வேறு இடங்களில் அப்படிப்பட்ட தீர விளையாட்டுக்கள் இருக்கிறது. அவைகளை நீங்கள் இறப்பதற்கு முன்பாக விளையாடி பார்க்க வேண்டாமா? இந்த விளையாட்டுக்களில் சிலவற்றை விளையாட உடலில் வலுவும் திடமான இதயமும் தேவை. அதனால் அவைகளை குறிப்பிட்ட வயதை கடப்பதற்கு முன்பாகவே விளையாடி பார்த்து விட வேண்டும். உங்களுக்கு விளையாட்டுக்களில் அவ்வளவாக நாட்டம் இல்லையென்றாலும் கூட, இவற்றில் சில எளிய வகை விளையாட்டுகளையாவது விளையாடி பாருங்கள். அப்போது தான் அதனால் கிடைக்கும் சிலிர்ப்பு மற்றும் நடுக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

இவற்றில் பல வகையான விளையாட்டுக்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களாலேயே விளையாடப்பட்டு வந்தது. ஆனால் இவ்வகை விளையாட்டுக்கள் இப்போதெல்லாம் உறிய பாதுகாப்புடன் பயிற்சியாளர்கள் தலைமையில் அனைவராலும் விளையாடப்பட்டு வருகிறது. அதனால் இதில் கிடைக்கும் சிலிர்ப்பை அனைவராலும் அனுபவிக்க முடிகிறது. இதனை விளையாட ஒருவருக்கு தைரியமும் செலவு செய்ய அதிக பணமும் இருந்தாலே போதும்.

புதிதாக விளையாடுபவர்கள் ஹைகிங் எனப்படும் நீண்ட தூர நடை பயணத்தை முதலில் துவங்கலாம். அதற்கு மலை ஏறும் மன்றங்கள் பல உள்ளது. அவர்கள் உங்கள் தாங்கும் திறனை பொறுத்தும் உங்கள் அனுபவத்தை பொருத்தும் விதமாக பல மட்ட ஹைகிங்கை கையாண்டு வருகிறார்கள். அப்படி எளிய செயலில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக தீர விளையாட்டுக்களில் ஈடுபட தொடங்கலாம். பங்கி ஜம்பிங், பாராகிளைடிங், கடல் சறுக்கல், நீர் மூழ்குதல் போன்ற தீர விளையாட்டுக்களில் ஈடுபடலாம். ஆனால் இவைகள் எல்லாம் பலவீனமான இதயத்தை கொண்டவர்களுக்கு கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைகிங் (Hiking)

ஹைகிங் (Hiking)

தீர செயல்களிலேயே மிகவும் எளிமையானது இது தான். அதுவும் தீர விளையாட்டுக்களுக்கு நீங்கள் புதிதென்றால் இதிலிருந்து தொடங்குவது தான் நல்லது. இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இதனை பல உயரங்களிலும் மேற்கொள்ளலாம். உங்கள் திறனை பொறுத்து அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பாராசைலிங் மற்றும் பாராகிளைடிங் (Parasailing and Paragliding)

பாராசைலிங் மற்றும் பாராகிளைடிங் (Parasailing and Paragliding)

வானத்தில் பறப்பதில் சுலபமான விளையாட்டாக விளங்குகிறது பாராசைலிங். இந்த விளையாட்டில் ஒரு கையிற்றால் உங்களை மோட்டார் படகில் கட்டிப் போட்டு விடுவார்கள். படகு பயணிக்கும் திசையில் ஒரு பட்டத்தை போல் நீங்கள் வானத்தில் பறந்து திரிவீர்கள். இதிலேயே இன்னும் கொஞ்சம் குதூகலம் அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு உதவியுமின்றி பாராசூட்டை பயன்படுத்தி பறக்கலாம்.

பங்கி ஜம்பிங் (Bungee Jumping)

பங்கி ஜம்பிங் (Bungee Jumping)

இந்த விளையாட்டை விளையாட மிகவும் தைரியமான இதயமும் உங்களை தரையில் விழாமல் காப்பாற்ற திடமான கயிறும் தேவை. சில இடங்களில் இந்த விளையாட்டை விளையாட தைரியம் அதிகமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சீனாவில் 760 அடி உயரத்தில் அமைந்துள்ள மகௌ கோபுரம் மற்றும் அமெரிக்காவில் கொலோராடோவில் 1053 அடி உயரத்தில் அமைந்துள்ள ராயல் கோர்ஜ் பாலம்.

ஆழ்கடல் மூழ்குதல் (Scuba Diving)

ஆழ்கடல் மூழ்குதல் (Scuba Diving)

உயரம் அலுத்து விட்டதென்றால் ஏன் ஆழத்தை நோக்கி பயணிக்க கூடாது? ஆழ்கடல் மூழ்குதல் என்பது உங்களை கடலுக்கு அடியில் கண்ணை கவரும் வண்ணமயமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும். நேஷனல் ஜாக்ரஃபியில் மட்டுமே காணக் கூடியதை நீங்களே அனுபவித்தும் பார்க்கலாம்.

கயாகிங் மற்றும் ராஃப்டிங் (Kayaking and Rafting)

கயாகிங் மற்றும் ராஃப்டிங் (Kayaking and Rafting)

இந்த இரண்டு நீர் விளையாட்டுக்களையுமே தனியாகவோ அல்லது இரண்டு பேராகவோ அல்லது ஒரு குழுவாகவோ விளையாடலாம். வேகமாக ஓடும் ஆறு அல்லது அமைதியான ஏரி என இரண்டு இடத்திலேயும் இதனை விளையாடலாம். வேகமாக ஓடும் ஆற்றில் இதனை விளையாடும் போது உங்களின் குதூகலமும் சிலிர்ப்பும் அதிகமாக இருக்கும்.

பாறை ஏறுதல் (Rock Climbing)

பாறை ஏறுதல் (Rock Climbing)

கடினமான மற்றும் உயரமான மலைகளை வெறும் கைகளோடு, நீங்கள் விழுந்தால் உங்களை தாங்கி பிடிக்க கயிறுகளை கட்டி கொண்டு ஏறுவதற்கு திடமான கைகளும் மன தைரியமும் தேவைப்படும். தைரியம் அதிகமாக உள்ள சிலர் கயிறுகள் இல்லாமலேயே தங்களின் ஆற்றல் மற்றும் அனுபவத்தை வைத்துக் கொண்டு துணிந்து செல்வார்கள்.

சார்பிங் (Zorbing)

சார்பிங் (Zorbing)

சார்பிங் என்பது ஒரு பெரிய பந்துக்குள் அமர்ந்து கொண்டு மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்குதல். இதனை விளையாடும் போது குதூகலம் மட்டுமல்லாமல் இதயம் நின்று போகும் அளவுக்கு திகிலையும் உண்டாக்கும்.

பனிச்சறுக்கு (Skiing)

பனிச்சறுக்கு (Skiing)

பனிச்சறுக்கு விளையாட்டில் நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்களோ அதனை பொறுத்து கொண்டாட்டடின் அளவு அமையும். தட்டையான நிலப்பரப்பில் ஆரம்பித்து கூர்மையான சரிவை கொண்ட மலை வரை இந்த விளையாட்டை விளையாடலாம்.

மலையில் பைக்/சைக்கிள் ஓட்டுதல் (Mountain Biking)

மலையில் பைக்/சைக்கிள் ஓட்டுதல் (Mountain Biking)

மற்றொரு திகில் நிறைந்த விளையாட்டை விளையாட வேண்டுமா? அப்படியானால் மலை மீதிருந்து கீழ் நோக்கி சைக்கிள் ஓட்டிச் செல்லுங்கள். இந்த விளையாட்டை விளையாட வேண்டுமானால் கீழே விழுவதற்கும் தயராக இருக்க வேண்டும்.

கடல் சறுக்கல் (Surfing)

கடல் சறுக்கல் (Surfing)

கடலில் அலைகளை எதிர்த்து நீச்சலடிக்க உங்களுக்கு போதுமான பயிற்சியும் அனுபவமும் தேவைப்படும். 1 மீட்டர் உயரத்தை கொண்ட அலைகளில் ஆரம்பித்து பல மீட்டர் உயரத்தில் எழும் அலையை எதிர்த்து விளையாடலாம். அது உங்களின் திறனை பொறுத்து அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion