For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!

By Ashok CR
|

நம்முடைய குளிர் கால விடுமுறை ஏற்கனவே முடிந்து விட்டது.எனவே அடுத்த தேசிய விடுமுறை,காதலர் தினம் தான். அதனால், காதலர் தினத்தைப் பற்றிய வேடிக்கையான சில உண்மைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். பொதுவாக காதலர் தினம்,தம்பதியர்கள் அவர்களுக்குள் உள்ள காதலை கொண்டாடும் விதமாக அமைந்து உள்ளது.

நாம் இந்த விடுமுறை தினத்தை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருடனும், அவர்களிடம் நமக்கு எந்த அளவிற்கு அன்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடுகிறோம். காதலும்,அன்பும் நிறைந்த ஒரு அழகிய தினம் இந்த காதலர் தினம். எனவே இந்த தினத்தை பெண்கள் கொண்டாடி மகிழாமல் இருப்பார்களா? இந்த காதலர் தினத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நாம் இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலர் தினத்தின் தோற்றம்

காதலர் தினத்தின் தோற்றம்

காதலர் தினத்தின் தோற்றத்தைப் பற்றி விதவிதமான பதிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான், நாம் இங்கு பார்க்கப் போகும் கி.மு 270-ல் கிளாடியஸ் ஆட்சி முறையின் போது நடந்த பதிப்பு. போர் காலத்தின் போது, கிளாடியஸ் தன்னுடைய வீரர்கள் திருமணம் புரிவதை எதிர்த்தார். ஏனெனில், வீரர்கள் தனியாளாக இருக்கும் போது மட்டுமே பலமாகவும், அதிக திறமையுடனும் போரிடுவார்கள் என கிளாடியஸ் நம்பினான். ஆனால் பிஷப் வேலன்டைன் என்பவன் இதை எதிர்த்தான். பல தம்பதியர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்தான். இதற்காக அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.பிப்ரவரி 14 அன்று கொல்லப்பட்டான். அவ்வாறு அவன் இறப்பதற்கு முன் அவன் ஒரு காதல் கடிதத்தை எழுதி இருந்தான்.அதில் அவன் 'உனக்காக வேலன்டைன் ' என கையொப்பமிட்டிருந்தான். இது காதலர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் ஒன்று மட்டும் தான்.எனவே தொடர்ந்து படியுங்கள்.

எக்ஸ்.எக்ஸ்

எக்ஸ்.எக்ஸ்

பொதுவாக 'எக்ஸ்' என்பது முத்தங்களை குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என நம்புகிறேன். ஆனால் இந்தக் குறிப்பு எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இது இடைக் காலத்தில் இருந்து, தொடங்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. பொதுவாக தங்களுடைய பெயரை எழுத முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், ஒரு அடையாளமாய் 'x' என குறிப்பிடுவார்கள். அவர்களுடைய உளமார்ந்த நேர்மையை உணர்த்தும் வண்ணம் அதில் முத்தமிடுவர்.

இடைக்காலத்தில் காதலர் தினம்

இடைக்காலத்தில் காதலர் தினம்

இடைக்காலத்தில் காதலர் தினத்தன்று, பெண்கள் மாறுபட்ட உணவுகளை எடுத்துக் கொண்டு, தங்களுடைய எதிர் கால கணவனைப் பற்றிய கனவில் ஆழ்ந்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது. இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், ஒரு கிண்ணத்தில் தங்களுடைய காதலன் அல்லது காதலியுடைய பெயர்களை வரைந்து காட்டுவார். பிறகு தங்களுடைய காதலியுடைய பெயரை, தங்களுடைய சட்டைக் கையில் அணிவர். இதன் மூலம், உங்கள் இதயத்தில் இருந்து வந்து உங்கள் கைகளில் உங்கல் காதல் வெளிப்படுகிறதோ?

சிவப்பு ரோஜா

சிவப்பு ரோஜா

காதல் மற்றும் நேசத்தின் தேசிய அடையாளமே இந்த சிவப்பு ரோஜா. ரோமில் உள்ள காதல் கடவுளான வீனஸ்க்கு மிகவும் பிடித்த மலர் சிவப்பு ரோஜா என்று ஒரு தகவலும் இருக்கிறது. இதன் மூலம் எந்த வகையான பூ காதலர் தினத்தன்று அதிக அளவில் விற்கும் என்பதை நீங்கள் தீர்மானித்து விடலாம். அமெரிக்காவில் 189 மில்லியன் ரோஜாக்கள் இந்த தேசிய விடுமுறையில் விற்கப்படும் என்ற தகவலும் உண்டு.

காதலர் தின முத்தம்

காதலர் தின முத்தம்

கடந்த 2011 காதலர் தினத்தன்று, தாய்லாந்தில் 14 ஜோடிகள் நீண்ட நேரத்திற்கான முத்தப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பங்கு கொள்பவர்கள், உட்காரக்கூடாது, உறங்கக் கூடாது, பிரியக்கூடாது. இல்லாவிடில், அவர்கள் போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழப்பர். இந்த போட்டியில் நுழைந்து அரை மணி நேரத்திலேயே, ஒருவர் மயங்கி விட்டார். வெற்றி பெற்ற தம்பதியர்கள், 46 மணிநேரம் 24 நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கு வைர மோதிரம், 3200 டாலர் பணம் போன்றவை கொடுக்கப்பட்டது. மேலும் நீண்ட நேர முத்தத்திற்கான சாதனையாளர் டைட்டிலும் கொடுக்கப்பட்டது.

சாக்லெட் - குணப்படுத்துதல்

சாக்லெட் - குணப்படுத்துதல்

கடந்த 1800 வருடமாகவே மருத்துவர்கள், மனமுடைந்தவர்களை அதில் இருந்து மீள சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களுடைய மனம் ஆறுவதோடு, அவர்களுடைய, முதல் காதல் நினைவோடு அமைதியடைகின்றனர். இது வேடிக்கையானது தான். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மனம் உடைந்து சோர்வடையும் போது, சாக்லெட் எடுத்துக் கொள்வதால், அது ஆறுதலை அளித்து அவர்களை வசதியான மன நிலையில் வைக்கிறது.

தேசிய விடுமுறையாக குறிக்கப்படுகிறது

தேசிய விடுமுறையாக குறிக்கப்படுகிறது

இங்கிலாந்தில் மன்னர் ஹென்றி 4 ஆட்சி காலம் வரை, காதலர் தினம் பிப்ரவரி 14 தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படவில்லை. ஆனால் இப்போது இங்கிலாந்தில் இது தேசிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. சாக்லெட் மற்றும் பூக்களை வைத்துக் கொண்டு, பாழடிப்பதற்கு, நம்மை அனுமதித்து மன்னிப்பு வழங்கியதற்கு மன்னர் ஹென்றிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Fun And Enjoyable Facts About Valentine's Day

While Valentine’s Day is thought to be specifically designated for couples to celebrate their love, we also use this holiday as a way to show our friends, family and even pets how much we love them. It is a beautiful day filled with love and romance, so as women how can we not enjoy it? So let’s take a look at some of the interesting facts about Valentine’s Day.
Desktop Bottom Promotion