Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
பார்ட்டிகளில் பெண்கள் பேசும் விசித்திரமான விஷயங்கள்!!!
பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் 'பேசுவது'. பெரும்பாலான விருந்துகள் புதிய உணவு வகைகள் மற்றும் பானங்களுடன், சில விளையாட்டுகள் மற்றும் பேசுவதற்கான சில நேரம் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது போன்ற விருந்துகளில் அரட்டையடிப்பதையும், தாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்த வீட்டு அலங்காரம் அல்லது உணவுகள் பற்றி பேசுவதையும் மிகவும் விரும்புவார்கள். இந்த விருந்துகளில் பெண்கள் பேசும் விஷயங்களுக்கு எல்லையும், அளவும் இருப்பதில்லை.
சில நேரங்களில் இவை பொதுவான அரட்டையாகவோ மற்றும் பிற விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகவோ இருக்கும். சில நேரங்களில் இவை விளையாட்டுத்தனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். ஆண்களை விட அதிகமாக செக்ஸ் பற்றி பெண்கள் பேசுகிறார்கள் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே. ஆண்களை விட அதிகமாக பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இது போன்ற பார்ட்டிகளில் பெண்கள் குழுவாக சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதால், அவர்கள் இந்த விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், இவ்வாறு பகிர்ந்து கொள்ளாதவர்கள் வெளியே தள்ளப்படவும் செய்கிறார்கள்.
குழுவில் நிலைத்திருக்க விரும்பும் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் இது போன்ற வித்தியாசமான விஷயங்களை வெளிப்படுத்த நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். வேறு சிலர், குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், இது போன்ற பார்ட்டிகள் தான் பெண்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்ள உதவுகின்றன. தங்களை விட பெரியவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் சென்று தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவும் இடங்களாக இந்த விருந்துகள் உள்ளன.

செக்ஸ்
விருந்துகளில் பேசப்படும் தலைப்புகளில் முதன்மையான இடம் பெறும் தலைப்பாக செக்ஸ் உள்ளது. பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள். பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். இது போன்ற விஷயங்கள் பொதுவாக நடக்கும் பார்ட்டிகளில் தங்களுடைய செயல்பாடுகள் மற்றும் தோல்விகள் பற்றி வெளிப்படையாக பேசப்படுவதால் ஆண்கள் இதனை சற்றே சங்கடமாக உணருகிறார்கள்.
அரட்டை
பெண்கள் பார்ட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதற்கு அரட்டை அடிக்க விரும்புவதும் காரணமாகும். இது போன்று சுற்றித் திரியும் விஷயங்களை பேசுவதற்கு பெண்கள் அலாதியான ஆர்வம் காட்டுவார்கள். எந்தவிதமான உறவுகளும், பிரிவுகளும் இந்த பார்ட்டிகளில் தயக்கமின்றி பேசப்படும். சில பெண்கள் மட்டுமே இது போன்ற பார்ட்டிகளை தகவல் பரிமாற்றத்திற்கான இடங்களாக கருதுவதில்லை. எனினும், இந்த பார்ட்டி வேளைகளில் பல்வேறு இரகசிய்ஙகள் ஊரறிய பறைசாற்றப்படுவதை தவிர்க்க முடியாது.
ஆற்றல் மற்றும் அளவு
படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. இது மிகவும் வித்தியாசமான தலைப்பாக இருந்தாலும், கிட்டி பார்ட்டிகள் இப்படித்தான் இருக்கும். படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த பார்ட்டிகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.
கேட்ஜட்ஸ்
பெண்களின் பார்ட்டிகளில் இந்த தலைப்பு பேசப்படுவது சற்றே வித்தியாசமாக இருக்கும். தோழில்நுட்பம் மற்றும் கேட்ஜெட் ஆகியவை பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய பார்ட்னர்கள் சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமளவு பேச விரும்புவார்கள். சில பேர் தங்களுக்கு சமீபத்தில் கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் மற்றும் சிலர் தங்களுக்கு சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.
பேஷன்
பேஷன் பற்றி பெண்கள் பேசத் தொடங்கி விட்டால் அதற்கு முடிவோ, அளவோ இருப்பதில்லை. லேட்டஸ்ட் டிரண்ட் மற்றும் பேஷன்கள் பற்றி ஆழமாகவும், பரபரப்பாகவும் கிட்டி பார்ட்டிகளில் பெண்கள் பேசுவார்கள். புயன்படுத்தத்தக்க, விலைமதிப்பு மிக்க டிரண்டுகள் ஆகியவை பற்றி இந்த பார்ட்டிகளில் பெண்கள் பேசுவார்கள்.
ஷாப்பிங்
பெண்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் புயல் வீசச் செய்யும் தலைப்புகளில் ஒன்றாக இருப்பது ஷாப்பிங். புல மணி நேரங்களுக்கு பெண்கள் ஒன்றாக விவாதம் செய்யும் தலைப்பாக ஷாப்பிங் உள்ளது. இதனை சமீபத்தில் வாங்கிய பொக்கே அல்லது கண்டுபிடிக்கப்பட்ட தையல் கடை எனத் தொடங்கி, தற்போது நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் வரை என முடித்த வைக்க முடியும். பெரும்பாலான பெண்கள் தங்களை விட்டு விடும் வரையிலும் வாங்கிக் கொண்டிருப்பார்கள், எனவே அவர்கள் பல்வேறு ஷாப்பிங் இடங்களை நகரத்தில் கண்டறிந்திருப்பார்கள். அவற்றைப் பற்றி அவர்கள் விருந்துக்கு வந்த பிற பெண்களிடம் பெருமையுடன் பேசி நேரத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.



Click it and Unblock the Notifications