Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிமையாகி விடுதல் (Online Shopaholics) பற்றிய ஒரு ஆர்வமிக்க அறிக்கையை IANS வெளியிட்டுள்ளது. அது உங்களைப் பற்றியதாவும் இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனெனில், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவோ, சும்மா பார்த்துச் செல்லவோ விரும்புவர்களில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம். எளிமையாக இருப்பது மற்றும் வசதிக்கேற்ப இருப்பது போன்ற காரணங்களுக்காக பெரும்பாலனவர்கள் விரும்பும் விஷயமாக ஆன்லைன் ஷாப்பிங் உள்ளது. ஆனால், இந்த விஷயத்திற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படத் துவங்கியுள்ளது. ஊஷார்!
ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்கள் தாங்கள் இப்படியொரு விஷயத்திற்கு அடிமையாக இருக்கிறோம் என்பதையே அறிந்திருக்க மாட்டார்கள் என்று சொன்னால் வேடிக்கையாகத் தோன்றுகிறதா? உண்மை இது தான். சில நேரங்களில் மட்டுமே தாங்கள் அதிகமான நேரம் மற்றும் பணத்தை விரயம் செய்து தேவையற்றவற்றை வாங்குவதை உணருவார்கள். அது போன்ற அட்டைப் பெட்டிகளால் உங்கள் வீட்டு குப்பைத் தொட்டி நிரம்பியிருக்கிறதா? து;'ஆம்' என்றால் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமை!

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக உள்ளீர்களா என்பதை நீங்களே கண்டறிவது மிகவும் நல்லது. அதனால் தேவையற்ற பொழுதுபோக்கில் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்காமல் தவிர்க்க முடியும். Huffingtonpost.com என்ற இணைய தளம் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருப்பதன் அறிகுறிகளை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிகுறிகளை முழுமையாக படித்து, நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகாமல் நேரம், பணம் மற்றும் சக்தியை பாதூகத்துக் கொள்ளுங்கள்.
வெப் ப்ரௌஸரை சோதிக்கவும்
உங்களுடைய வெப் ப்ரௌஸரில் (இணைய உலாவி) விற்பனை தொடர்பான டாப் (Tab) உள்ளதா என்று பார்க்கவும். அது ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கான எந்தவிதமான தளமாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட டாப் உங்களுடைய இணைய உலாவியில் இருந்தால் அதன் முழு விபரத்தையும் திறந்து பார்க்கவும். அப்பொழுது மட்டுமே நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி உள்ளதை உணர முடியும்.
திருப்தியில்லை
நீங்கள் உண்மையிலேயே ஒரு பொருளை வாங்க ஆர்டர் செய்திருந்தால், அது உங்கள் வீட்டை அடையும் நேரத்தில் மகிழ்ச்சிப்படுவீர்கள். ஆனால், அவ்வாறு ஒவ்வொரு முறை பொருள் வரும் நேரங்களிலும், நீங்கள் அதைப் பார்த்து திருப்தியில்லாமல் இருந்தல், அதுவும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானதையே குறிக்கும்.
தொடர்ந்து ஆன்லைன் செக்கிங் செய்தல்
புதிதாக என்ன வந்துள்ளது மற்றும் வியாபாரத்திற்கு என்ன உள்ளது என்று நீங்கள் தினமும் ஆன்லைனில் பார்ப்பவரா? இந்த அறிகுறி ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்களிடம் பரவலாக காணப்படும் முக்கியமான அறிகுறியாகும்.
ஒரே விஷயம் இரண்டு முறை
நீங்கள் ஏதாவதொரு பொருளை இரண்டு முறை வாங்கியுள்ளீர்களா என்று உங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இது ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக உள்ளவர்களின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். ஏனெனில், நீங்கள் எந்தவித தேவையும் இல்லாமல் ஒரே பொருளை இரண்டு முறை ஆர்டர் கொடுத்திருப்பீர்கள்.
பல்க் ஈமெயில்கள்
உங்களுக்கு எண்ணற்ற பல்க் ஈமெயில்கள் வருகின்றனவா? ஆம் என்றால் இது ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டிய நேரமாகும். நீங்கள் நிறை விற்பனை தளங்களுடன் இணைய வழியாக பதிவு செய்து கொண்டிருப்பதால் இந்த ஈமெயில்கள் வரும். இது ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருப்பதன் அறிகுறியாகும்.
வியாபார அறிவிப்புகளின் அதீத தாக்கம்
எந்தவொரு நேரத்திலும், ஏதாவது விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாக ஒரு விற்பனை அறிவிப்பை வெளியிட்டால் அது உங்கள் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும். அதாவது உங்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமை!
அடிக்கடி வரும் வியாபார ஊக்குவிப்பு கடிதங்கள்
நீங்கள் நெடுங்காலமாக ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருப்பவராக இருந்தால், அஞ்சலக ஊழியர்கள் எடுத்து வரும் கடிதங்களில் முதல் பெயர் உங்களுடையதாக இருக்கும். இந்த ஒரு விஷயமே நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எந்த அளவிற்கு அடிமையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.
தேவையற்ற நினைவுபடுத்தல்கள்
நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையா என்பதை இன்னும் அறிய முடியவில்லை என்றால், உங்களுடைய ஈமெயில் இன்பாக்ஸை பாருங்கள். நீங்கள் ஆர்டர் செய்து மறந்து விட்ட பேக்கேஜ்கள் பற்றிய ஈமெயில்கள் குவிந்து கிடக்கும். இது போதாதா?
பணி நேர பாதிப்பு
நீஙகள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவரா அல்லது ஆன்லைன் ஷாப்பிங்கினால் கடந்த வார வேலை நாளில் ஒன்றை இழந்து விட்டவரா? இதில் எந்த வகையாக இருந்தாலும் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை மிகவும் விரும்புபவராக இருப்பீர்கள்.
குப்பையை கிளருங்கள்!
நீங்கள் உண்மையிலேயே ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருந்தால், உங்கள் வீட்டு குப்பைத் தொட்டி எப்பொழுதும் நிரம்பி வழியும். இந்த விஷயத்தில் நீங்கள் சற்றே கவனம் எடுக்க வேண்டும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications