For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!!

By Ashok Cr
|

ரஜினி என்று தான் இருக்கும். ஆம், தமிழ் சினிமாவில் பஞ்ச் கலாச்சாரத்தை கொண்டு வந்தது நம்ம சூப்பர் ஸ்டார் தான். தலைவர் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே பல படங்களிலும் பஞ்ச் வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால் அண்ணாமலை படத்திலிருந்து தான் அதன் தாக்கம் வெகுவாக இருந்தது. அதற்கு அரசியலும் கூட ஒரு காரணமாக அமைந்தது. 'புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்' என்று நம்ம கவுண்டர் அண்ணன் மன்னன் படத்தில் சொல்வார். அதை உண்மையாக்குவதை போல் ஆளாளுக்கு இன்று பஞ்ச் பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் தலைவர் பேசும் போது அது தனி ஸ்டைல் தான்.

அதை இன்றளவும் ரசிக்க முடியாதவர்களே இருக்க முடியாது. தலைவருக்கு தன்னுடைய ஸ்டைல் பெரிய பலம் என்றால் அவருடைய பஞ்ச் வசனங்கள் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருடைய பஞ்ச் வசனங்களின் தாக்கத்தினால் மார்கெட்டிங் துறையில் 'பஞ்ச் தந்திரா' என்று ஒரு புத்தகமே வெளி வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சாதாரணமாக அன்றாடம் பேசக்கூடியவைகளை தலைவர் அவருடைய பாணியில் சொல்லும் போது, அது பஞ்ச் வசனமாக மாறி விடுகிறது - உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் "இதெப்படி இருக்கு?".

சரி, சூப்பர் ஸ்டாரின் இந்த பிறந்தநாளுக்கு அவருடைய புகழ் பெற்ற சில பஞ்ச் வசனங்களை மீண்டும் ஒரு முறை அலசுவோமா? பலரும் அவர் இன்றைய கால கட்டத்தில் பேசின வசனங்களை பற்றி தான் பேசுகிறார்கள். நாம் சற்று பின்னோக்கியும் பார்க்கலாம் வாங்க.

* 'இதெப்படி இருக்கு' - 16 வயதினிலே படத்தில், நடிக்க வந்த புதிதில் அவருடைய பாணியில் சொன்ன இந்த வசனம் இன்றளவும் பலரால் சொல்லப்பட்டு வருகிறது.

* 'கெட்ட பையன் சார் இந்த காளி' - முள்ளும் மலரும் படத்தில் கைகள் மற்றும் கால்களை இழந்த பின் அசால்ட்டாக ரஜினி சொல்லும் அனல் தெறிக்கும் வசனம் இது.

* 'இது ரஜினி ஸ்டைல்' - ஆடு புலி ஆட்டம் படத்தில் பேசிய நச் வசனம் இது.

* 'வெச்சிக்கோ நீநீநீநீ' - போக்கிரி ராஜா படத்தில் பார்ப்பவர்களிடம் குறும்பாக அவர் பேசும் வசனம் இது.

* 'தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்'.

* 'இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர சொல்லி பாரு; இன்னொரு கையால அதோட அம்மா வாயையும் சேத்து மூடும்ங - மூன்று முகம் படத்தில் தீப்பொறி பறக்க சூப்பர் ஸ்டார் பேசும் இவ்வசனங்கள் இன்றளவும் சூடு குறையாமல் இருக்கிறது.

* 'சீசீசீசீசீவிடுவேன்' - என்று முரட்டு காளை படத்தில் அவர் கூறும் போது பட்டையை கிளப்பும்.

* 'யாரோடைய பாதையிலும் நான் போக விரும்பல... நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்... யாரோடைய நிழல்ளையும் நான் சோம்பேறியாக மாட்டேன்... என்னோட நிழல்ல சோம்பேறி உருவாகவும் விட மாட்டேன்...' - தனிகாட்டு ராஜா படத்தில் ரஜினி பேசிய நிதர்சனமான பஞ்ச் வசனம் இது.

* 'நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்' - குரு சிஷ்யன் படத்தில் பேசிய இந்த வசனமும் கூட இன்றளவும் பல நடிகர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது.

* 'அத்த, நீங்க தமிழ் நாட்டுக்கே ராணி மாதிரி... நான் தமிழ் நாட்டுக்கே... எதுக்கு விடுங்க, எல்லாருக்கும் தெரியும்' - மாப்பிள்ளை படத்தில் ரஜினி பேசிய அரசியல் பஞ்ச் இது.

* 'நான் பெண்ண மதிப்பேன், தல வணங்குவேன்... ஆனா உங்கள மாதிரி மதம் பிடிச்ச பெண்ணை பாத்தா என்ன விட்டிருங்க... என் தல முடி கூட ஆடாது' - மன்னன் படத்தில் சூடு பறக்க சூப்பர் ஸ்டார் பேசிய பஞ்ச்.

* 'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...?' - உழைப்பாளி படத்தில் வந்த மற்றொரு அசத்தல் அரசியல் பஞ்ச்.

* 'சில பேர் சொல்லிட்டு செய்றாங்க... சில பேர் செஞ்சிட்டு சொல்றாங்க... நாம செய்றதும் தெரியாது சொல்றதும் தெரியாது...'

* 'எல்லாரும் எதிர்ப்பார்க்கிறத நான் செய்ய மாட்டேன்... நான் செய்ய போறது என்னான்னு யாரும் எதிர்ப்பார்க்க விடவும் மாட்டேன்...' - இவை இரண்டுமே உழைப்பாளி படத்தில் வரும் மாஸ் பஞ்ச் வசனங்கள்.

* 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்' - இது அருணாச்சலம் படத்தின் ஹைலைட்டான பஞ்ச்.

* 'என் வழி தனி வழி' - கலக்கலான படையப்பா படத்தில் ரஜினி பல மாடுலேஷனில் பேசி அசத்திய பஞ்ச் இது.

* 'பொண்டாட்டி, குழந்த, மாமா, மச்சான்னு உறவுல வேகுறத விட, ஒரு கட்ட விறகுல வெந்துட்டு போயிறலாம்' - பாபா படத்தில் பேசப்பட்ட தத்துவ ரீதியான மற்றொரு பஞ்ச்.

* 'கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு' - பாபா படத்தில் ஆன்மீக கலவை கொண்டு பேசிய பஞ்ச் இது. இன்றும் கூட இளைஞர்கள் தங்கள் நண்பர்களின் பேச்சை இடை நிறுத்த இதை உபயோக்கின்றனர்.

* 'ப்ளாக் ஷீப்... ப்ளாக் ஷீப்... மேஹஹஹஹ்' - சமீபத்தில் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டாரால் பேசப்பட்டு வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்ட பஞ்ச் இது.

எல்லாத்துக்கும் மேலாக தலைவர் நிஜ வாழ்க்கையில் பேசிய சூப்பர் பஞ்ச் ஒன்று உள்ளது. அது தாங்க, சந்திரமுகி ஆடியோ வெளியீட்டில் சொன்னாரே... 'நான் யானையில்ல குதிர..'... எப்படி சும்மா அதிருதுல்ல.

English summary

Best Dialogues Of Rajnikanth

Super Star Rajinikanth's films are known for their punch dialogues. Here are some of the famous and best dialogues are listed. Take a look.