Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இதுல நீங்க எந்த நாற்காலியில் உட்காருவீங்க சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
Psychology Test: உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களுடன் தான் இவ்வுலகில் பிறந்திருப்போம். மேலும் நம் அனைவருக்குமே நமது உண்மையான குணம் முழுமையாக தெரிந்துவிடாது. சொல்லப்போனால் சூழ்நிலைகள் தான் நமது உண்மையான குணங்களை வெளிக்காட்டும்.
நீங்கள் உங்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உளவியல் சோதனை ஒன்றை ட்ரை செய்து பாருங்கள். டாரட் கார்டு ரீடரான ரக்ஷனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான உளவியல் சோதனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு சூழ்நிலை ஒன்றை கற்பனை செய்து கொள்ளுமாறு கூறினார்.

அதாவது, ஒரு மீட்டிங் ரூம்மில் நுழையும் போது, அங்கு உங்கள் உயர் அதிகாரி உட்கார்ந்திருப்பார். அவருக்கு அருகில் ஒருசில நாற்காலிகள் இருக்கும். அவர் உங்களை அமர சொல்லும் போது நீங்கள் அங்கு இருக்கும் 7 நாற்காலிகளில் எந்த நாற்காலியை தேர்ந்தெடுத்து அமர்வீர்கள் என்று கூறுங்கள். நீங்கள் எப்பேற்பட்ட குணத்தைக் கொண்டவர் என்பதை சொல்கிறேன் என்று ரக்ஷனா கூறியிருந்தார்.
நாற்காலி 1
* நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளர்.
* நீங்கள் சத்தம் போடாமல் அதிகாரத்திற்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்.
* நீங்கள் அனைத்தையும் கவனிப்பீர்கள், பகுப்பாய்வு செய்வீர்கள், புத்திசாலித்தனமாக விஷயங்களை நகர்த்துவீர்கள்.
* மக்கள் உங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் அதுவே உங்கள் பலம்.
நாற்காலி 2
* நீங்கள் சமநிலையான மனதை கொண்டவர்.
* நீங்கள் அனைவரிடமிருந்தும் சமமான தூரத்தைக் கடைப்பிடிப்பீர்கள்.
* பேசுவதற்கு முன் சிந்திப்பீர்கள்.
* அமைதியானவர், நடுநிலைமையானவர், நடைமுறைவாதி - நீங்கள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்ப்பீர்கள்.
நாற்காலி 3
* நட்புடன் பழகுபவர்.
* நீங்கள் மக்களை நேசிப்பீர்கள் மற்றும் இயல்பாகவே நம்பிக்கையை உருவாக்குவீர்கள்.
* குழுப்பணி உங்கள் பலம்.
* உங்களின் இருப்பு அந்த இடத்தில் ஒரு நல்ல ஆற்றலைக் கொண்டு வரும்.
நாற்காலி 4
* சுதந்திரமான சிந்தனையாளர்.
* உங்களுக்கு சுதந்திரமும், உங்களுக்கே உரிய தாளமும் தேவை.
* நீங்கள் வித்தியாசமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிந்திப்பீர்கள்.
* மக்கள் உங்கள் தனித்துவமான யோசனைகளை மதிப்பார்கள்.
நாற்காலி 5
* நீங்கள் இயற்கையாகவே சிறந்த தலைவர்
* முடிவுகள் எங்கிருந்து எடுக்கப்படுகிறதோ, சரியாக அந்த இடத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள்.
* நீங்கள் மக்களையும் நேரத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொள்பவர்.
* மக்கள் உங்கள் வழிகாட்டுதலை சிரமமின்றிப் பின்பற்றுவார்கள்.
நாற்காலி 6
* நீங்கள் ஒரு ஆதரவு தூண்.
* நீங்கள் உறுதியானவர், நம்பகமானவர் மற்றும் யதார்த்தமானவர்.
* நீங்கள் தெளிவை விரும்புவீர்கள்.
* அனைவரும் உங்களை நம்பலாம் என்று அறிந்திருக்கிறார்கள்.
நாற்காலி 7
* நீங்கள் துணிச்சலான கிளர்ச்சியாளர்.
* நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துபவர், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிய அஞ்சாதவர்.
* மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களை நீங்கள் தைரியமாக சொல்வீர்கள்.
* நீங்கள் ஒரு அமைப்பை நல்ல விதத்தில் சவால் விடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











