Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
77 ஆண்டுகளுக்கு பின் பொங்கல் நாளில் உருவாகும் அரிய நிகழ்வு: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்க போகுது...
Pongal 2024: இந்து மதத்தில் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் புத்தாடை அணிந்து, புதுபானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு, அதை சூரியனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையின் போது தான் நவகிரகங்களின் தலைவனான சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் இந்நாளில் மகர சங்கராந்தி என்றும் அழைப்பர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சுமார் 77 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை நாளில் ரவி யோகத்துடன் வரியான் யோகமும் உருவாகிறது. பொங்கல் பண்டிகை நாளில் இப்படியான யோகம் உருவாவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் ஒவ்வொரு துறையிலும் நல்ல நிதி நன்மைகளும், வெற்றியும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகவும் வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு அபரிமிதமான வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியை பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், இந்த ராசிக்காரர்கள் பொங்கல் நாளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலையைப் பொறுத்தவரை, நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும, மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
உயர்கல்வி படிக்க விரும்பினால், அந்த ஆசையும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கும் அருமையாக இருக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருப்பதால், உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications