Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
நாளை வானில் நிகழும் அதிசயம்... ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்கள்: இதை எப்படி பார்த்தால் தெரியும்?
Planetary Parade 2025: வானில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதுவும் விண்வெளியில் உள்ள கிரகங்களுள் ஒருசில ஒரே நேர்கோட்டில் அவ்வப்போது வந்து வானியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அற்புதமான அரிய நிகழ்வு வானில் நிகழவுள்ளது. அதுவும் ஜனவரி 21, 2025 முதல் அடுத்த சில வாரங்களுக்கு 6 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தெரியவுள்ளன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28, 2025 இன்று வானில் 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தெரியவுள்ளன.

2025 ஜனவரியில் எந்தெந்த கிரகங்கள் வானில் தெரியும்?
2025 ஜனவரி 21 ஆம் தேதி மாலை வேளையில் செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வீனஸ் மற்றும் சனி ஆகிய 6 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன. இவற்றில் யுரேனஸ் மற்றும் நெப்டியூனைத் தவிர, மற்ற கிரகங்களை வெற்று கண்ணில் பார்த்தாலே தெரியும். மீதமுள்ள 2 கிரகங்களை பைனாகுலர் அல்லது தொலைநோக்கிகள் மூலம் காணலாம்.
2025 பிப்ரவரியில் எந்தெந்த கிரகங்கள் வானில் தெரியும்?
2025 பிப்ரவரி 28 ஆம் தேதி சனி, புதன், வெள்ளி, வியாழன், செவ்வாய், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற 7 கிரகங்களை ஒரே நேர்க்கோட்டில் காணலாம். இந்நிகழ்வு மிகவும் அரிதானது என்பதால் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆர்வமாக இருக்கும்.
கிரகங்கள் ஒன்றிணையும் போது என்ன நடக்கும்?
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்து காணப்படும். கிரக சேர்க்கைகள் ஏற்பட சூரியனின் ஒரே பக்கத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க வேண்டும்.
சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு கோள் சூரியனிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு மெதுவாக அது சுழலும். இதில் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் புதன். இது 7 பில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. இந்த புதன் சூரியனை சுற்றிய வர 88 நாட்கள் ஆகும். அதேப் போல் நெப்டியூன் சூரியனிடம் இருந்து சுமார் 448 பில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர சுமார் 165 பூமி ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு கோளின் அச்சும் சில டிகிரி சாய்ந்து சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. புதனும், வீனஸும் 2 டிகிரி சாய்வாக உள்ளன. பூமி 23.5 டிகிரி சாய்வாக உள்ளது. செவ்வாய் 24 டிகிரியும், வியாழன் 3 புள்ளி 1 டிகிரியும், சனி 26.7 டிகிரியும், யுரேனஸ் 97.9 டிகிரி சாய்வாகவும், நெப்டியூன் 28.8 டிகிரியும் சாய்வாக சூரியனை சுற்றி வருகின்றன.
கிரகங்களின் அணிவகுப்பை காண முடியுமா?
வெறும் கண்ணில் கிரகங்களை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து இருப்பதாக தோன்றினாலும், ஒவ்வொரு கிரகங்களுக்கும் இடையே மில்லியன் கணக்கான பில்லியன் கிமீ தொலைவில் உள்ளன. இருப்பினும் இந்த கிரகங்களை நாம் வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் போது, அவை அடுத்தடுத்து இருப்பது போன்று தெரிகிறது.
கிரகங்கள் வரிசையாக வரும் போது பூமியில் என்ன நடக்கிறது?
ஒன்றிரண்டு கிரகங்கள் நேர்க்கோட்டில் தெரிவது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் பல கிரகங்கள் நேர்க்கோட்டில தெரிவது அரிதான நிகழ்வு. இதற்கு முன் இதேப் போல் நிறைய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வந்துள்ளன. அப்போது பூமியில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.
சொல்லப்போனால் கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது பூமிக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்று நினைப்பது தவறு. சிலர் எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லாமல் புரளிகளை உருவாக்குகிறார்கள். எனவே வானில் கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரிந்தால், அதை கண்டு மகிழ்வோம்.



Click it and Unblock the Notifications
