Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நவம்பர் மாத கிரக மாற்றங்களால் இந்த ராசிகளுக்கு ரொம்பவும் அதிஷ்டமானதா இருக்கப் போகுது...
Planet Transits In November 2023: இன்னும் ஒரிரு நாட்களில் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். நவம்பர் மாதமானது பலரது வாழ்க்கையை மாற்றக்கூடிய முக்கியமான மாதமாக இருக்கப் போகிறது.
ஏனெனில் இந்த மாதத்தில் தொடக்கத்திலேயே வக்ர நிலையில் உள்ள சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளது. இது தவிர இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

முக்கியமாக இந்த மாதத்தில் புதனும், சுக்கிரனும் இரண்டு முறை ராசியை மாற்றுகின்றன. இதனால் இந்த கிரக நிலைகளின் மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக நவம்பர் மாத கிரக மாற்றங்களால் இந்த மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது நவம்பர் மாதத்தில் நிகழவுள்ள கிரக மாற்றங்கள் குறித்தும், நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் குறித்தும் காண்போம்.
2023 நவம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் நவம்பர் 03 ஆம் தேதி அதிகாலை 4.58 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசியில் நுழையும் சுக்கிரனால் கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
2023 நவம்பர் மாத சனி பெயர்ச்சி
நீதிமான் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷம், ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
2023 நவம்பர் மாத புதன் பெயர்ச்சி
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் நவம்பர் 06 ஆம் தேதி மாலை 4.11 மணிக்கு விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
பகை உணர்வு கொண்ட செவ்வாயின் ராசிக்குள் புதன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். ஆயினும் இந்த புதன் பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
2023 நவம்பர் மாத செவ்வாய் பெயர்ச்சி
நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் நவம்பர் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். சொந்த ராசியில் செவ்வாய் நுழைவதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி சற்று சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
2023 நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி
கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல பண வரவையும், வெற்றியையும், சமூகத்தில் நல்ல பெயரையும், மதிப்பையும் பெறுவார்கள்.
2023 நவம்பர் மாத புதன் பெயர்ச்சி
புத்திகாரகன் புதன் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில், அதாவது நவம்பர் 27 ஆம் தேதி காலை 5.41 மணிக்கு தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த தனுசு ராசியில் ஒரு மாதம் வரை, அதாவது டிசம்பர் 28 ஆம் தேதி வரை பயணிப்பார். இந்த புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்
நவம்பர் மாதத்தில் நிகழும் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக மேஷம், ரிஷபம், கும்பம், துலாம் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
அதுவும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறக்கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications