Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகுது..
Planet Transits In May 2023: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அந்த வகையில் மே மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் மே 2 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு நுழைகிறார். அதைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு செல்கிறார்.
அதே நாளில் புதன் மேஷ ராசியில் உதயமாகி பயணிக்கவுள்ளார். பின்னர் மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அதே நாளில் புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். அதன் பின் சுக்கிரன் மே 30 ஆம் தேதி கடக ராசிக்கு நுழையவுள்ளார்.

இந்த கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகளால் மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக பெயர்ச்சிகள் நற்பலனைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். நிலம், சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக சிக்கிய பணம் இம்மாதத்தில் கைக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக பெயர்ச்சிகள் அற்புதமான பலன்களை வாரி வழங்கும். குறிப்பாக பல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக, நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக, சிறப்பான பலன்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால், அதில் நல்ல வெற்றியைக் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக பெயர்ச்சிகள் நல்ல நன்மைகளைத் தரும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். தொழிலைப் பொறுத்தவரை, நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வேலையை மாற்ற நினைத்தால், இம்மாதத்தில் விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக மாற்றங்கள் மிகவும் சாதகமான பலன்களை வழங்கும். மனதிற்கு பிடித்தவாறு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் தீரும். வணிகர்கள் இம்மாதத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணத்தை உங்களால் அதிகம் சேமிக்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக பெயர்ச்சிகளானது அட்டகாசமான பலன்களை அளிக்கும். திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

