Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
ஜூன் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?
Planet Transits In June 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே தெரியும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் ஜூன் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஜூன் மாதத்தில் 6 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் ஜூன் 01 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். அதன் பின் ஜூன் 02 ஆம் தேதி புதன் ரிஷப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூன் 03 ஆம் தேதி குரு உதயமாகவுள்ளார். பின் ஜூன் 12 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கும், ஜூன் 14 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கும் செல்லவுள்ளனர்.

அதன் பின்னர் ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் ஜூன் 29 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கும். அதே நாளில் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பின்னோக்கி வக்ர நிலையிலும் பயணிக்கவுள்ளார். இப்படி பல கிரகங்களின் நிலைகள் மாறுவதால், அதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் ஆசைகள் நிறைவேறும். நல்ல செய்திகளை அதிகம் பெறுவீர்கள். முடிக்கப்படாத வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களின் நிலை அலுவலகத்தில் வலுவடையும். இம்மாதத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்திலும் உயர்வு ஏற்படும். அதோடு எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதையும், புகழும் இம்மாதத்தில் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இம்மாதத்தில் வெளிநாடு அல்லது வெளியூர் செல்வதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications