Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகுது...
Planet Transits In June 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் ஜூன் மாதம் வரவுள்ளது.
இந்த ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இதனால் இந்த ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் புதன், சூரியன், சனி போன்ற கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது.

குறிப்பாக புதனின் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார் மற்றும் மாதத்தின் இறுதியில் அஸ்தமனமாகவுள்ளார். மேலும் நீதிமான் சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார் மற்றும் சூரியனும் ராசியை மாற்றவுள்ளார்.
இப்படி முக்கியமான கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் இம்மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது 2023 ஜூன் மாதத்தில் எப்போது கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன என்பதைக் காண்போம்.
2023 ஜூன் மாத புதன் பெயர்ச்சி
புத்திகாரகனான புதன் ஜூன் 07 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல புத்திசாலித்தனமானவராக, சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக, வியாபாரத்தில் சிறந்தவராக இருப்பார்.
2023 ஜூன் மாத சூரிய பெயர்ச்சி
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். ஜூன் மாதம் 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எப்போதும் வாழ்வில் நல்ல வெற்றியைக் காண்பார்.
2023 ஜூன் மாத சனி வக்ர பெயர்ச்சி
கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இதனால் சனியின் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றமும், அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார். சனி வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும், சிலர் நற்பலன்களையும் பெறுவார்கள்.
2023 ஜூன் மாத புதன் அஸ்தமனம்
ஜூன் 7 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்த புத்திகாரகன் புதன், ஜூன் 19 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அஸ்தமனமாகும் போது, வலுவிழந்து இருப்பதால், கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் கிடைக்காமல் போகும். எனவே ஜூன் மாதத்தில் புதன் அஸ்தமனமான பின், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது.
2023 ஜூன் மாத புதன் பெயர்ச்சி
ஜூன் 19 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனமான பின், ஜூன் 24 ஆம் தேதி அஸ்தமன நிலையிலேயே புதன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு அஸ்தமன நிலையில் நுழைவதால், புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் கிடைக்காது.
2023 ஜூன் மாத கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
ஜூன் மாதத்தில் 3 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும், கிரகங்களின் நிலைகளால் 3 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதில் ரிஷபம், சிம்மம், தனுசு போன்ற ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்.
குறிப்பாக தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மொத்தத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications