Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Planet Transits in January 2024: இன்னும் ஓரிரு நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படுவதால் தான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்படி ஏற்படும் கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

2024 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகள்
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 2 ஆம் தேத புதன் வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசியில் பயணிக்கவுள்ளார். அதன் பின் ஜனவரி 15 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் உதயமாகவும் போகிறார். அதைத் தொடர்ந்து ஜனவரி 18 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். இதனால் இந்த மாதத்தில் தனுசு ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இப்போது ஜனவரி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க இந்த மாதம் ஏற்றதாக இருக்கும். தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெறக்கூடும்.
பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். சிலர் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. அதோடு சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதமானது அற்புதமாக இருக்கப் போகிறது. சொல்லப்போனால் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கஷ்டங்கள் தீரும். தொழிலைப் பொறுத்தவரை, நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரியும் சிலர் வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கலாம்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டங்களைத் தீட்டி வேலை செய்தால் நிச்சயம் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ஏதாவது புதிதாக செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் ஏற்றதாக இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்திலேயே கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளைப் பெறக்கூடும்.
முதலீடுகளை செய்தால், நல்ல பலனைப் பெறலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications