Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
வருகிற மே மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் போகுது..
Planet Transit In May 2024: ஜோதிடத்தின் படி, வருகிற மே மாதமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தின் முதல் நாளிலேயே மிகவும் மங்களகரமான கிரகமான குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். அதன் பின் மே 03 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.
பின்பு மே 10 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழைவார். பின் மே 14 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவார். இறுதியாக மே 19 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார். இப்படி பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் இம்மாதத்தில் நிறைய கிரகங்கள் மேஷம் மற்றும் ரிஷப ராசிகளில் பயணிப்பதால், பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மே மாதம் தொழில் ரீதியாக மற்றும் நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதமானது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த மே மாதத்தில் நிகழும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் எதிர்பாராத அளவில் நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் மே மாதத்தில் மிகச்சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். இம்மாதத்தில் முதலீடுகளை செய்தால் நினைத்து, முதலீடு செய்தால், நல்ல பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் பல யோகங்கள் உ.ருவாவதால், தொழிலில் நன்கு கவனத்தை செலுத்தி, சிறப்பான பலனைப் பெற முடியும். வியாபாரிகள் இம்மாதத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் விஷயத்தில் இம்மாதம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications