மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...

Planet Transit In March 2024: இன்னும் ஓரிரு நாட்களில் 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் மாற்றங்களால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதுவும் கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, கிரக சேர்க்கைகளும், அவற்றால் சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகின்றன.

அந்த வகையில் 2024 மார்ச் மாதத்தில் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதோடு புதன், சனி ஆகிய கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருந்து உதயமாகின்றன. இப்படி மார்ச் மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இப்போது மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Planet Transit In March 2024: These Zodiac Signs Will Get More Benefits In Tamil

2024 மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மார்ச் 07 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருவதால், புதன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. அதே நாளில் சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழ்கிறது.

அதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதற்கு மறுநாள் மார்ச் 15 ஆம் தேதி புதன் உதயமாகவுள்ளார். அதே நாளில் செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழையவிருக்கிறார். அதன் பின் மார்ச் 18 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். அடுத்து மார்ச் 26 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இறுதியாக மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைவார். இப்படியான கிரக பெயர்ச்சிகளால் மார்ச் மாதத்தில் எந்த ராசிக்கு சூப்பராக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் புனித யாத்திரையை மேற்கொள்ளலாம். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும். வேலையை மாற்ற நினைத்தால், இம்மாதத்தில் அதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இம்மாதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இம்மாதம் நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நன்றாக இருக்கும். கும்ப ராசியில் பல கிரகங்களின் சேர்க்கைகள் நிகழ்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்வில் இருந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் விலகும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால் வீட்டின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடனான வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால், நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, நல்லபடியாக முடிவடையும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் முடிவுக்கு வரும். சுக்கிரனின் அருளால் செல்வம் பெருகும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, February 26, 2024, 19:21 [IST]
Desktop Bottom Promotion