Latest Updates
-
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Planet Transit In February 2024 Unlucky Zodiac Signs In Tamil: காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அதில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே புதன் மகர ராசியில் நுழைந்துள்ளார்.
அதைத் தொடர்நது கிரகங்களின் தளபதியான செவ்வாய் பிப்ரவரி 05 ஆம் தேதி மகர ராசியில் நுழையவுள்ளார். அதன் பின் பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரனும் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் மகர ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குவார்கள். இந்நிலையில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த மாதத்தில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியின் சனி, சூரியன் சேர்க்கை நிகழும். இப்படியான நிலையில் சில ராசிக்கார்களின் சிரமங்கள் அதிகரிக்கும். இப்போது பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பிப்ரவரி மாத கிரக நிலைகளால் தங்கள் வேலைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாத கிரக நிலைகளால் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். மேலும் பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். வேலை தொடர்பாக சில திட்டங்களை போட்டிருந்தால், அவற்றை முடிக்க முடியாமல் அவதிப்படக்கூடும். நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். புதிய வாகனம் வாங்க நினைத்தால், இம்மாதத்தில் வாங்காதீர்கள். ஏனெனில் இம்மாதம் அதற்கு சாதகமாக இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து இம்மாதத்தில் அதிகம் கவலைப்படுவீர்கள். சனிபகவானும், சூரிய பகவானும் கும்ப ராசியில் ஒன்றிணைந்து இருக்கும் காலத்தில் உங்கள் தொழிலில் எந்த ஒரு முக்கியமான வேலையையும் திட்டமிடாமல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பிப்ரவரி மாத கிரக நிலைகளால் மிகுந்த மன உளைச்சலை சந்திக்க நேரிடும். தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும். இம்மாதத்தில் உங்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனையை சரிசெய்ய மூன்றாம் நபர் வந்தால், அது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும். எனவே உங்கள் பிரச்சனையை நீங்களே சரிசெய்ய முயலுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications