Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்கு இந்த மாசம் ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Planet Transit In February 2024 Lucky Zodiac Signs In Tamil: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த வகையில் 2024 பிப்ரவரி மாதத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன.
அதில் மாதத்தின் தொடக்கத்தில், அதுவும் பிப்ரவரி 01 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 05 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்குள் நுழைகிறார். அதன் பின் பிப்ரவரி 08 ஆம் தேதி புதன் மகர ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். பின்னர் பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியின் அஸ்தமனமாகவுள்ளார்.

பின்பு பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் நுழைவதால், மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 12 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியிலும், பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் கும்ப ராசியிலும் நுழையவுள்ளார்.
இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த கிரக பெயர்ச்சிகளால் பிப்ரவரி மாதத்தில் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது அற்புதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் புகழ் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். மேலும் இம்மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நினைத்தால், இம்மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக, இம்மாதத்தில் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சிலர் புனிய யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்புக்களைப் பெறலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும். அதைப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது மங்களகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலைகளை செய்பவர்கள் நல்ல நன்மைகளையும், வெற்றிகளையும் பெறுவார்கள். முதலீடுகள் முலம் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைக் காணக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இம்மாதத்தில் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications