Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Planet Transit In December 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
இன்னும் ஓரிரு நாட்களில் 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்திற்குள் நுழையவுள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தில் முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கமானது சில ராசிக்கரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

வருகிற டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் குரு, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 5 கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. இப்படி முக்கியமான கிரகங்கள் நிலைகளை மாற்றுவதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புள்ளது. மேலும் வேலை மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும், லாபமும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இம்மாதத்தில் வெற்றி காண்பார்கள். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த மாதத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பார்கள். பணிபுரிபவர்களின் நிலை மேம்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் நிலம், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முன்பு செய்த முதலீடுகளின் பலன் இந்த மாததில் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சுக்கிரன் மற்றும் செவ்வாயால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக புதிய வேலையை செய்ய விரும்பினால், அதை இம்மாதத்தில் தொடங்க நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications