ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?

Planet Transit In August 2023: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. கிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது கணித்து கூறுப்படுகிறதுது.

ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Planet Transit In August 2023: Effects On Zodiac Signs In Tamil

அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. மேலும் சில கிரகங்களின் இயக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

இதனால் ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களையும், இன்னும் சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறக்கூடும். இப்போது ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகளைப் பற்றியும், அதன் தாக்கம் குறித்தும் காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி

ஆகஸ்ட் மாதத்தில் முதன்முதலாக சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் ஆகஸ்ட் 07 ஆம் தேதி ஆடம்பரம், அழகு, காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் வக்ர நிலையில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். சுக்கிரன் இந்த கடக ராசியில் சுமார் 23 நாட்கள் இருப்பார். இதனால் இக்காலமானது சில ராசிக்காரர்களுக்கு ஒரு வரமாக இருக்கப் போகிறது. கடகம் செல்லும் சுக்கிரனால் மிதுனம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த இரண்டு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது.

சுக்கிர அஸ்தமனம்

ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்த அடுத்த நாள், அதாவது ஆக்ஸ்ட் 08 ஆம் தேதி சுக்கிரன் அதே ராசியில் வக்ரமாகி அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் சுக்கிரன் அக்டோபர் 02 வரை இருப்பார். அதற்கு முன் செப்டம்பர் 04 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார். இப்படி ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்களுக்கு சுமாராகவே இருக்கும்.

சூரிய பெயர்ச்சி

ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். தனது சொந்த ராசிக்கு சூரியன் செல்வது, சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் சிம்மம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். முக்கியமாக மாணவர்களுக்கு இம்மாதம் பிரமாதமாக இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி

தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசிக்கு செவ்வாய் செல்வதால், மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.

சுக்கிர உதயம்

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கடக ராசியில் நுழைந்து வக்ரமாகி, அஸ்தமனமான சுக்கிரன், ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால் சில ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்துவிதமான சுகத்தையும் பெறுவதோடு, ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடும்.

புதன் வக்ரம்

புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன், தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ரமாகிறார். புதன் வக்ரமாவதால் சிலர் நற்பலனை பெற்றாலும், சில ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, July 28, 2023, 17:20 [IST]
Desktop Bottom Promotion