Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஏப்ரல் மாத கிரக நிலைகளால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Planet Transit in April 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் கிரகங்கள் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அதுமட்டுமின்றி நேர்பாதையில் பயணிக்கும் கிரகங்கள் பின்னோக்கி வக்ர நிலையிலும் பயணிக்கும்.
இப்படி கிரகங்கள் தங்கள் இயக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் கெடுபலனையும் பெறலாம்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுவதோடு, இயக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இப்போது எந்த கிரகங்கள் 2023 ஏப்ரல் மாதத்தின் எந்த தேதியில் ராசியை மாற்றவுள்ளன மற்றும் எந்த கிரகம் வக்ரமாகவுள்ளன என்பனவற்றைக் காண்போம். இதுதவிர, 2023 ஏப்ரல் மாத கிரக நிலைகளால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதையும் காண்போம்.
2023 ஏப்ரல் மாத சுக்கிர பெயர்ச்சி
அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் 2023 ஏப்ரல் 06 ஆம் தேதி காலை 11.10 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ரிஷப ராசியில் மே 02 ஆம் தேதி வரை இருந்து பின் மிதுன ராசிக்கு செல்வார்.
2023 ஏப்ரல் மாத சூரிய பெயர்ச்சி
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியின் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த மேஷ ராசியில் சூரியன் மே 15 ஆம் தேதி வரை இருந்து பின் ரிஷப ராசிக்கு செல்வார்.
2023 ஏப்ரல் மாத குரு பெயர்ச்சி
மங்களகரமான கிரகமான குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு செல்லவுள்ளார். இந்த மேஷ ராசியில் குரு 2024 மே 01 ஆம் தேதி வரை இருந்து பின் ரிஷப ராசிக்கு செல்வார். இது தவிர ஏப்ரல் 27 ஆம் தேதி அஸ்தமன நிலையில் உள்ள குரு மேஷ ராசியில் உதயமாகவுள்ளார்.
2023 ஏப்ரல் மாதத்தில் வக்ரமாகும் புதன்
புத்திகாரகனான புதன் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் மேஷ ராசியில் பயணித்து வருவார். அதன் பின் ஏப்ரல் 21 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார். அதைத் தொடர்ந்து ஏப்ர 23 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ர நிலையில் அஸ்தமனமாகவுள்ளார்.
இப்படி ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றுவதால் 4 ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் புதிய வருமான ஆதாரங்களை பெறக்கூடும். நிலுலையில் இருந்த வேலைகள் முடிவடையும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காணக்கூடும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப சூழல் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் இந்த மாதத்தில் முடிவடையும் மற்றும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் தங்களின் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும். தன்னம்பிக்கையுடன் இம்மாதத்தில் செயல்பாட்டால் எதிலும் வெற்றி காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications