Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Pitru Paksha 2023: கனவில் இறந்த முன்னோர்கள் வந்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
Pitru Paksha 2023: நாம் தூங்கும் போது, கனவுகள் வருவது சாதாரணம். கனவுகள் என்பது நம் ஆழ்மனதில் உள்ள ஆசைகள் அல்லது விருப்பங்களாக இருக்கலாம். இது தவிர ஒருவருக்கு வரும் கனவுகள், அந்நபருக்கு வரவிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துக்களையும் உணர்த்துவதாக கனவு சாஸ்திரம் கூறுகின்றன.
அதுவும் கனவில் ஒருவர் பல விஷயங்களைக் காணலாம். இப்படி காணும் விஷயங்கள் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். சில சமயங்களில் சிலருக்கு இறந்த முன்னோர்கள் கனவில் வருவார்கள். இப்படி முன்னோர்கள் வருவது நல்லதா கெட்டதா என்று பலரது மனதிலும் கேள்வி எழலாம்.

உண்மையில் கனவில் முன்னோர்களை காண்பது என்பது காரணமில்லாமல் இல்லை. இதற்கு பின் சில ரகசியங்களும் மறைந்துள்ளன. இப்போது முன்னோர்களை கனவில் காண்பது எதை உணர்த்துகிறது எப்தைக் காண்போம்.
படுக்கை அருகில் முன்னோர்கள்
கனவு சாஸ்திரத்தின் படி, ஒருவரது கனவில் இறந்த முன்னோர்கள் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருப்பதைக் கண்டால், அது அந்நபருக்கு வரவிருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வந்த வேகத்திலேயே போய்விடும் என்பதைக் குறிக்கிறது.
அதேப் போல் ஒருவரது கனவில் அவரது முன்னோர்கள், அவரை நோக்கி நடந்து வருவதைக் கண்டால், உங்கள் முன்னோர்கள் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளால் வருத்தப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அதோடு, அந்த பிரச்சனையைக் குறைக்க முன்னோர்கள் விரும்புவதையும் இது குறிக்கிறது.
கால்களுக்கு அருகில் முன்னோர்கள்
கனவு சாஸ்திரத்தின் படி, இறந்த முன்னோர்கள் ஒருவரது கனவில் கால்களுக்கு அருகில் நின்று கொண்டிருப்பதைக் காண்பது என்பது நல்லதல்ல. இம்மாதிரியான கனவை ஒருவர் கண்டால், அந்நபர் வாழ்க்கையில் நிறைய பண நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது .
உணவு ஊட்டுவது போன்ற கனவு
உங்கள் கனவில் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு உணவு ஊட்டிவிடுகிறார்களா? அப்படியானால், அது நல்ல அறிகுறியாகும். கனவு சாஸ்திரத்தின் படி, இந்த மாதிரியான கனவு அந்நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரப் போவதைக் குறிக்கிறது.
நொடியில் வந்து மறைவது
கனவு சாஸ்திரத்தின் படி, ஒருவரது கனவில் இறந்த முன்னோர்கள் வந்து சில நொடிகளில் காணாமல் போனால், அது அந்நபரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பெரிய பிரச்சனை வரப் போவதைக் குறிக்கிறது. இந்நிலையில் அந்நபர் மிகவும் எச்சரிககையாக இருக்க வேண்டும்.
மேற்கு மூலையில் முன்னோர்கள்
ஒருவரது கனவில் வீட்டின் மேற்கு மூலையில் முன்னோர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டால், அது அந்நபரின் வீட்டில் பெரிய பண பிரச்சனைகளை வரப்போவதைக் குறிப்பதாக கனவு சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கனவில் முன்னோர்கள் வந்து ஏதாவது ஒன்றை கேட்டால், அது உங்கள் முன்னோர்கள் மிகுந்த பசியுடன் இருப்பதாக அர்த்தம். இந்நிலையில் ஏழை எளியோருக்கு சாப்பிட உணவை வாங்கி கொடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











