Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கோடையில் அன்னாசி ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினை கலந்து குடிச்சா.. இவ்வளவு நன்மை கிடைக்குமா?
Pineapple Ginger Juice Benefits In Tamil: தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நிறைய தாகத்தை அனுபவிக்க நேரிடும். இந்நிலையில் வெறும் நீரை மட்டும் குடித்தால் போதாது, ஜூஸ்களையும் அதிகம் குடிக்க வேண்டும். அதுவும் நற்பதமான ஜூஸ்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கோடைக்காலத்தில் மாம்பழம், தர்பூசணி, முலாம் பழம் போன்ற பழங்கள் மட்டுமின்றி, அன்னாசியும் அதிகம் கிடைக்கும். இந்த அன்னாசி புளிப்பும், இனிப்பும் கலந்த ருசியான பழம் மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான பழமும் கூட. இந்த அன்னாசிப்பழத்தை கோடையில் உட்கொள்வதன் மூலம், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

இப்படிப்பட்ட அன்னாசிப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் குடலில் தேங்கியுள்ள அழுக்குகளை திறம்பட வெளியேற்றி, குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதுவும் அன்னாசியை சாப்பிட பிடிக்காதவர்கள் அதை அரைத்து ஜூஸ் எடுத்தும் குடிக்கலாம். முக்கியமாக அந்த ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினை சேர்த்து குடிக்கும் போது, இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது அன்னாசி ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. செரிமானம் சீராகும்
அன்னாசி ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினை கலந்து குடிக்கும் போது, இவ்விரண்டிலும் உள்ள குறிப்பிட்ட நொதிகள் புரோட்டீன்களை உடைத்தெறிய உதவி புரிவதோடு, செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் உதவி புரிகிறது. எனவே கோடையில் நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், ஒரு டம்ளர் அன்னாசி ஜூஸில் இஞ்சி சாற்றினை கலந்து குடியுங்கள்.
2. குடல் புண்களை ஆற்றும்
இஞ்சியில் ஜின்ஜெரால் என்னும் கலவை உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பொருளாகும். இது குடலில் உள்ள அழற்சி அல்லது புண்களை குறைக்க உதவி புரிவதோடு, குடல் தொடர்பான நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க உதவி புரிகிறது. ஆகவே குடல் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் இஞ்சி சாறு கலந்த அன்னாசி ஜூஸைக் குடிப்பது நல்லது.
3. மலச்சிக்கல் நீங்கும்
அன்னாசியில் டயட்டரி நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து உணவுப் பொருட்களானது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. இதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் உள்ள இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருந்தால் தான், குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
5. உடல் சுத்தமாகும்
அன்னாசி மற்றும் இஞ்சி ஆகிய இரண்டிலுமே நச்சுக்களை நீக்கும் பண்புகள் உள்ளன. எனவே இந்த இரண்டையும் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கும் போது, அது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த குடல் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
அன்னாசி இஞ்சி ஜூஸை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* நற்பதமான அன்னாசிப்பழம் - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச்
* தண்ணீர் - 1-2 கப்
* தேன் - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் அன்னாசிப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கப் எடுத்து பிளெண்டரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதையும் துண்டுகளாக்கி பிளெண்டரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த ஜூஸை கோடையில் அடிக்கடி தயாரித்து குடித்து வந்தால், குடல் சுத்தமாகி அதன் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.



Click it and Unblock the Notifications